துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 208
இங்கு துளசிதாசர் தாரை வாலியின் உடலின்
மீது விழுந்து கதறி அழுதாள் என்று சுருக்கமாக முடித்து விட்டார். ஆனால் வால்மீகி
இதை சற்று விரிவாகப் பாடியுள்ளார்.
रणे दारुण विक्रान्त प्रवीर प्लवताम् वर |
किम् इदीनाम् पुरो भागाम् अद्य त्वम् न अभिभाषसे || ४-२०-४
उत्तिष्ठ हरि शार्दूल भजस्व शयन उत्तमम् |
न एवम् विधाः शेरते हि भूमौ नृपति सत्तमाः || ४-२०-५
அந்த பெண்மணி யானைக்கு ஒப்பானவனும், கணையால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தவனுமான வானரன் வாலியை அணுகி
அணைத்துக் கொண்டாள். பெரும் மலைக்கு ஒப்பானவன், வேரறுந்த மரத்தைப் போலக் கிடப்பதைக்
கண்ட தாரை, துன்பமடைந்தவளாக சோகத்தால் தபிக்கும்
மனத்துடன் பின்வருமாற சொல்லி}க் கதறி அழுதாள்: “போரில் பயங்கரரே, விக்ராந்தரே {வெற்றியாளரே}, சிறந்த வீரரே, பிலவதாம்வரரே {தாவிச் செல்பவர்களில் சிறந்தவரே}, தீனமானவளும் {பரிதாப நிலையில் இருப்பவளும்}, ஒன்றும் அறியாதவளுமான என்னிடம் இப்போது நீர் ஏன் பேசாதிருக்கிறீர்.
ஹரிசார்தூலரே }, எழுவீராக. உத்தம சயனத்தில் {சிறந்த படுக்கையில்} படுப்பீராக.
சிறந்த மன்னர்கள் இவ்விதம்
பூமியில் படுப்பதில்லை.”
भुजाभ्यां पीनवृत्ताभ्यामङ्गदोऽहमिति ब्रुवन्4.23.24।।
अभिवादयमानं त्वामङ्गदं त्वं यथा पुरा।
दीर्घायुर्भव पुत्रेति किमर्थं नाभिभाषसे4.23.25।।
அங்கதன் வேகமாக எழுந்து, “நான் அங்கதன்” என்று சொல்லி, பருத்தவையும், உருண்டவையுமான தன்னிரு கைகளாலும் பிதாவின் சரணங்களைப் பற்றிக்
கொண்டான்.( {அப்போது தாரை},
“உம்மை வணங்கும் அங்கதனிடம், முன்பு போல,
‘புத்திரா, ஆயு பவ {பல்லாண்டு வாழ்க}’ என்று நீர் சொல்லாமல் இருப்பது என்ன
அர்த்தம் என்று தாரை புலம்புகிறாள்.
துளசிதாசர் இங்கு प्रगट என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது வாலியின் உடல் உன்
முன் கிடக்கிறது என்று சொல்கிறார். இந்த
உடல் பிறக்கும் முன் எப்படி இருந்தது இறந்த பின் என்னவாக இருக்கும் என்ற விவரங்கள்
யாருக்கும் தெரியாது . இதே நிலையை கீதையிலும் கிருஷ்ணர் சொல்லியுள்ளார்.
தொடரும்
No comments:
Post a Comment