துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 196
நேற்றைய
தொடர்ச்சி................
வாலிக்கு மோட்சம்
राम चरन दृढ़ प्रीति करि बालि कीन्ह तनु त्याग।
सुमन माल जिमि कंठ ते गिरत न जानइ नाग॥10॥
யானையின் கழுத்திலிருந்து கீழே விழும் மலர் மாலையை அந்த யானை எவ்வாறு அறிவது இல்லையோ, அவ்வாறு
இராமனின் திருவடிகளில் அன்பு கொண்ட வாலியின் உயிரானது மிக எளிதில் அவன் உடலைவிட்டுப் பிரிந்தது.
அதற்காக வாலி எந்த விதத்திலும் வருந்தவில்லை.
राम बालि निज धाम पठावा। नगर लोग सब व्याकुल धावा॥
नाना बिधि बिलाप कर तारा। छूटे केस न देह सँभारा॥1॥
இராமன் வாலிக்கு முக்தி அளித்து அவனை வைகுந்தத்திற்கு அனுப்பிவைத்தார்.
பாவம் செய்தாலும் பரமன் அருள் இருந்தால் மோட்சம் சித்திக்கும் என்பதில் எந்தச்
சந்தேகமுமில்லை.
“பாவி ஆனாலும், மறதியில் உச்சரித்தாலும்,
உண்மையாக ஜபித்தாலும் – ஹரி நாமமே போதும்!”
வாலியின் மரணம் பற்றிச் செய்தி கேட்ட நகர மக்கள் பெரிதும் துக்கித்தனர்.
வாலியின் மனைவி தாரை தலைவிரி கோலமாக அழுது ஓலமிட்டு ஓடிவந்தாள். அவள் உடல் அவள்
வசத்தில் இல்லை.
வாலிக்கு
இராமன் “निज थाम அழைத்துச் சென்றான் என்கிறார் துளசி தாசர்.
அது எப்படி? வாலிக்கு இராமனின் தர்சனம் கிடைத்தது. இராமனின் பாணத்தால் உயிர்
நீத்த்தான். இராமனின் பாதகமலத்தில் தனது உடலை தானம் செய்தான். இராமன் தனது
பொற்கரங்களால் அவனது தலையைத் தடவிக் கொடுத்தான். அதைத்தான் நிஜ தாம் என்கிறார்
துளைதாசர். சில உரையாசிரியர்கள் நிஜ தாம்
என்பதை இந்திர லோகம் என்று சொல்கின்றனர்.
“नयर लोग सब ब्याकुल थावा ' வலியின் மரணம்
கண்ட கிஷ்கிந்தா நகர் மக்கள் துக்கித்தனர்.
உண்மையில் வாலி கொல்லப்பட்டுக் கிடப்பதையும் அருகில் இராமன் கையில்
வில்லுடன் நிற்பதைப் பார்த்துப்பயந்து விட்டனர். இதைத்தான் வால்மீகி சொல்கிறார்.
ये ते अंगद परीवारा वानरा हि महाबलाः |
ते सकार्मुकम् आलोक्य रामम् त्रस्ताः प्रदुद्रुवुः || ४-१९-५
ஆத்யாத்ம இராமாயணத்திலும் இதுவே
சொல்லப்பட்டுள்ளது
दुद्रुवुर्वानराः सर्वे किष्किन्धां भयविह्वलाः
படம் AI உருவாக்கம்
தொடரும்
No comments:
Post a Comment