Tuesday, August 11, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 180

 

வாலி கூறினான் “பிரபோ! கேளுங்கள் தங்களுக்கு முன் எனது தந்திரமும் திறமையும் எடுபடவில்லை. கடைசி காலத்தில் தங்களது பாதார விந்தங்கள் எனக்குக் கிடைத்தன. தங்களைத் தரிசித்த பிறகும் நான் பாவியா? எனது பாவங்கள் விலகவில்லையா?”

  

வாலியின் மீது கனிவு

 

सुनत राम अति कोमल बानी। बालि सीस परसेउ निज पानी॥

 

வாலியின் இந்த இளகிய சொற்களைக் கேட்டு இராமன் நெகிழ்ந்து போனான். சாய்ந்து கொண்டிருக்கும் அவனது தலையைத் தனது கைகளால் பற்றிக் கொண்டான். துளசிதாசர் இராமன் (மகாவிஷ்ணு) இதுவரை நான்கு பேர்களின் தலையில் கைவைத்து ஆசீர்வத்திதுள்ளார் என்று சொல்கின்றார்

 

सिर परसे प्रभु निज कर कंजा।

 

முதலாவதாக மனுவும் அவரது மனைவி ஷதரூபா இருவரும் தவம் செய்து மாகாவிஷ்ணு தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் வேண்டினர். அவர்கள் மகாவிஷ்ணுவின் கால்களின் விழுந்த போது விஷ்ணு அவர்கள் தலையில் கைவைத்து அவர்களைத் தூக்கினார்.

 

सिर परसे प्रभु निज कर कंजा।

 

அடுத்து ஜடாயு. ஜடாயுவின் உயிர் பிரியும் நேரத்தில் அவனது தலையில் கைவைத்து அவனது உடலைத் தடவிக் கொடுத்தான் இராமன். 

  

रसा सीस सरोरुह पानी

 

மூன்றாவதாக ஹனுமன். சீதையைத் தேடி வானரங்கள் ஒவ்வொரு திசைக்கும் புறப்பட்ட நிலையில் தென் திசைக்கு புறப்பட்ட ஹனுமன் புறப்படும் முன் இராமனின் கால்களில் விழிந்து வணங்குகிறான். இராமன் வாஞ்சையுடன் ஹனுமனின் தலையைத் தடவிக் கொடுத்தான்.

 

இது சம்பந்தமாக வினய பத்ரிகாவிளிருந்து சில பகுதிகள்

 

कबहुँ सो कर - सरोज रघुनायक , धरिहौ नाथ , सीस मेरे ।

जेहि कर अभय किये जन आरत , बारक बिबस नाम टैरे ॥१ ॥

जेहि कर - कमल कठोर संभुधनु भंजि जनक - संसय मेट्यो ।

जेहि कर - कमल ठाइ बन्धु ज्यों , परम प्रीति केवट भेट्यो ।।२ ।।

जेहि कर - कमल कृपालु गीध कहँ , पिंड देइ निज धामदियो ।

जेहि कर बालि बिदारि दास - हित , कपिकुल - पति सुग्रीव कियो ।।३ ।।

आयो सरन सभीत बिभीषन , जेहि कर - कमल तिलक कीन्हों ।

जेहि कर गहि सर चाप असुर हति , अभयदान देवन्ह दीन्हों ॥४ ॥

सीतल सुखद छाहँ जेहि कर की , मेटति पाप , ताप माया ।

निसि बासर तिहि कर - सिरोज की , चाहत तुलसिदास छाया ॥ ५ ॥

 

“இராமா! துயரத்தில் இருக்கும் எந்த பக்தர்களுக்கு அபயக்கரம் நீட்டினீர்களோ அந்தக் கரத்தை எனது நெற்றியின் மீது தயவு கூர்ந்து வையுங்கள்.. எந்தக் கரத்தால் சிவதனுஷை வளைத்து ஜனகனின் சந்தேகத்தைப் போக்கினீர்களோ, எந்தக் கரத்தால் சகோதரனைப் போல் குகனைத் தூக்கி உங்கள் மார்போடு அணைத்துக் கொண்டீர்களோ, எந்தக் கரத்தால் தந்தை போன்ற ஜடாயுவிற்கு பிண்ட தானம் செய்து அவரை விண்ணுலகம் அனுப்பினீர்களோ, எந்தக் கரத்தால் வாலியைக் கொன்று சுக்ரீவனை வணரர்களின் அரசனாக்கினீர்களோ, எந்தக் கரத்தால் விபீஷணனுக்கு முடிசூட்டினீர்களோ., எந்தக் கரங்களால் வில் எடுத்து அரக்கர்களை வதம் செய்து தேவர்களுக்கு அபயம் அளித்தீர்களோ, எந்தக் கரங்கள் பாவங்களை அழிக்கிறதோ அந்தக் கரங்கள் இந்த துளசிதாசனையும் இரவு பகல் காக்கட்டும்.

தொடரும் 

 


No comments: