Monday, August 10, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 179

 

நேற்றைய தொடர்ச்சி.......

 

“பாவம் செய்தவன் அரசனால் தண்டிக்கபட்டு பாவமாற்றவனாகிறான். மேலும் சுவர்க்கத்தை அடைகிறான். அதனால் தான்,  வாலி இன்னும் நான் பாவியா என்று கேட்கிறான்.

  

அதனால் தான் வால்மீகி இராமாயணத்தில்  இராமன் சொல்கிறான்

 

तत् भवान् दण्ड सम्योगात् अस्मात् विगत कल्मषः |

गतः स्वाम् प्रकृतिम् धर्म्याम् धर्म दिष्टेन वर्त्मना || ४-१८-६२

त्यज शोकम् च मोहम् च भयम् च हृदये स्थितम् |

 

“நீ இந்த தண்டனையின் யோகத்தால் களங்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறாய். தர்மத்துடன் விதிக்கப்பட்ட பாதையில், தர்மத்துடன் கூடிய உன் இயல்பை அடைந்து விட்டாய்” என்றான் இராமன்

  

सुनहु राम स्वामी सन चल न चातुरी मोरि।

प्रभु अजहूँ मैं पापी अंतकाल गति तोरि॥9॥


 வாலி கூறினான் “பிரபோ! கேளுங்கள் தங்களுக்கு முன் எனது தந்திரமும் திறமையும் எடுபடவில்லை. கடைசி காலத்தில் தங்களது பாதார விந்தங்கள் எனக்குக் கிடைத்தன. தங்களைத் தரிசித்த பிறகும் நான் பாவியா? எனது பாவங்கள் விலகவில்லையா?”

 

 அதைத்தான் வால்மீகி இராமாயணத்தில் இந்த ஸ்லோகமும் தெரிவிக்கிறது

 

 

प्रतिवक्तुम् प्रकृष्टे हि न अपकृष्टः तु शक्नुयात् |

माम् अपि अवगतम् धर्मात् व्यतिक्रान्त पुरस्कृतम् |

धर्म संहितया वाचा धर्मज्ञ परिपालय || ४-१८-४८

 

ஓ ராமா! என் சாமி!

சாமர்த்தியம் எனக்கில்லை –

 சாய்ந்தேன் உந்தன் பாதத்தில்!

பாவியின் பட்டம் எனக்கே உரியது,

பரிசுத்தம் உந்தன் அருளில் மட்டுமே!

 

இன்னும் பாவி – ஆனால் நம்பிக்கை உன்னில்,

இறுதிக் கணத்தில் எனக்கே முக்தி தருவாய்!

நான் தவறினாலும், நீ தவறாதவன்!

நீயே என் நெஞ்சின் நாயகன் –

என் வாழ்வின் நாயகன்!

 

தொடரும்


No comments: