Monday, August 3, 2026

 


நான் ரசித்த அயோத்தியா காண்டம்.

 

கேயாஸ் தியரி

 

குழப்பக் (ஒழுங்கின்மை) கோட்பாடு- வண்ணத்து பூச்சி விளைவு:

 

எல்லோரும் “It is a wonderful life”, “Jurassic park,  கமலின் தசாவதாரம் படம் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதில் இந்த குழப்பக் கோட்பாடு பற்றித் தெரிந்து கொள்ளலாம். கம்ப ராமாயணத்தில் இது உள்ளதா? அதை பற்றித்தான் சொல்லப்போகிறேன். ஆனால் நான் சொல்வது இந்த கோட்பாடுக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு முயற்சி. இது தவறு என்றால் பதிவிடவும். முதலில் கேயாஸ் தியரி என்றால் என்ன?

ஒரு சின்னஞ்சிறு மாற்றம் ஒரு சிறிய நொடி பொழுதில் ஏற்படுதல் பின்னாளில் ஒரு மிக ப்ரமாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் தசாவதாரம் படத்தில் கமல் காட்டும் வண்ணத்துப்பூச்சியை வைத்து நாம் இதை விளக்குகிறோம். ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறிய சிறகடிப்பு வேறு ஒரு இடத்தில் ஒரு மிக பெரிய சூறாவளி யை ஏற்படுத்தும் , அல்லது பேரழிவை ஏற்பதுடுத்தும். இது தான் "கேயாஸ் தியரி" அல்லது "வண்ணத்துப்பூச்சி விளைவு" என்கிறோம்! 

 

கம்பர் சொன்ன பாடல்

"மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்

தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்

ஆங்கு ஒரு நரையதாய் அணுகிற் றாம் எனப்

பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி

ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன்



தசரதர் ஒரு நாள் கண்ணாடி பார்க்கும்போது, காதருகே ஒரு நரைமுடியைப் பார்த்துக் கவலை கொண்டு, இராமனுக்கு முடிசூட்டி விட்டுத் தான் தவம் செய்ய முடிவெடுத்தார். அதனால் ஏற்பட்ட விளைவுகளைத் தாங்கள் படித்திருப்பீர்கள். ஆக இராவணன் செய்தத் தீவினை தான் நரைமுடியாய் வந்தது என்கிறார்

 

இந்த நரை முடி வந்திருக்காவிட்டால்

ராமனுக்கு முடி சூட தசரதர்  முடிவு எடுத்திருக்கமாட்டார்

வசிஷ்டரிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி இருக்கமாட்டார்

அயோத்தி மக்கள் அதைக் கொண்டாடி இருக்க மாட்டார்கள்

கூனி அந்த கொண்டாட்டங்களைப் பார்த்திருக்கமாட்டாள்

அவள் மனதில் குழப்பம் வந்திருக்காது

கைகேகி மனதை கலைத்திருக்கமாட்டாள்

கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கமாட்டாள்

ராமர், லக்ஷ்மணர் சீதையுடன் வனவாசம் சென்றிருக்க மாட்டார்

சூர்ப்பனகை வனத்தில் வந்திருக்கமாட்டாள்

இலக்ஷ்மணன் அவளது  காது மூக்கைச் சிதைத்திருக்க மாட்டான்

அவள் இராவணனிடம் முறையிட்டிருக்க மாட்டாள்

இராவணன் மாரீசனை அனுப்பி இருக்கமாட்டான்

இராமன் மாரீச்சனை கொன்றிருக்கமாட்டான்

இராம லக்ஷ்மணர் சீதையைப் பிரிந்திருக்க மாட்டார்கள்

இராவணன் சீதையை கவர்ந்து சென்றிருக்கமாட்டான்

ஹனுமான் நட்பு கிடைத்திருக்காது

வாலி வதை, சுக்ரீவன் நட்பு உண்டாகி இருக்காது

சேது பந்தனம் நடந்து இருக்காது

இலங்கைப் போர் நடந்திருக்காது

இராவணன் மாண்டிருக்க மாட்டான்

 

ஆக தசரதன் காதருகே தோன்றிய நரைமுடி ஒரு பெரிய போருக்கே காரணமாயிற்று. சிறிய முடிதானே என்று நினைக்கக் கூடாது. திரௌபதியின் கூந்தல் மகாபாரத போருக்கே காரணமாயிற்று,’

 

ஆகையால் முடியை வைத்து முடிவெடுக்கக்கூடாது.

 

மீண்டும் சந்திப்போம்.


No comments: