Friday, August 21, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 190

 

நேற்றைய தொடர்ச்சி............... 

 

இங்கு நாம் கம்பரிடம் செல்வோம். இராமனுக்காக காத்திருக்கிறார் சரபங்க முனிவர். இராமனைக் கண்டதும் எல்லா வினைகளிலிருந்தும் விடுபெற்றேன். எனக்கு விடை கொடுங்கள் “எரிபுகுவேன். அருள் தருக” என்று வேண்டுகிறான். "நான் வரும்போது இது செய்வது ஏன்" - இராமன் வினவ அதற்கு சரபங்கன் “ஆயிரம் முகம் கொண்ட தவம் செய்தேன் நீ இங்கு வந்தாய் என் இரு வினைகளும் போயின இனி நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை  - என்றான்

  

“இந்திரன் பிரமலோகம் வரும்படி அழைத்தான் அங்கு நான் செல்லவில்லை .எனக்கு வேண்டியது முடிவு இல்லாத உயர்பதம்.. உன்னால் இருவினை நீங்கியது .அதனால் செல்கிறேன் - என்றான் முனிவன்

 

'ஆதலின், இது பெற அருள்' என உரையா,

காதலி அவளொடு கதழ் எரி முழுகி,

போதலை மருவினன், ஒரு நெறி-புகலா

வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன். 42

 

 

"இதனை நீ அருள்" என இராமனை வேண்டினான். தன் மனைவியுடன் முனிவன் தான் விரும்பியவண்ணம் செய்தான்

  

அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால்

உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு

எண் தவ நெடிதுஎனின், இறுதியில் அவனைக்

கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ? 44

 

 

இராமனைக் கண்ட பின்னர் ஒருவர் அடைய வேண்டிய வேறு பேறும் உண்டோ.  அதைத்தான் வாலியும் இங்கு சொல்கிறான். சரபங்கராவது எனது வினைகள் நீங்கின என்று சொல்லி முடிவில்லாத உயர் பதத்தை அடைந்தான். ஆனால் வாலியோ நிலையான பக்தியைக் கேட்டாலும் பிறவியற்ற நிலையைக் கேட்காமல் கர்மத்தின் பலனாக தான் எடுக்கப் போகும் பிறப்புகளுக்கு மறுப்புச் சொல்லவில்லை.

  

அத்தகைய மனப் பாங்கு யாருக்கு வரும்.

 

 

மீண்டும் துளசிதாசர்...................

  

வாலி அருகில் இருந்த அங்கதனைக் காட்டி வாலி 

 

यह तनय मम सम बिनय बल कल्यानप्रद प्रभु लीजिये।

गहि बाँह सुर नर नाह आपन दास अंगद कीजिये॥

 

“இவன் என் பிள்ளை அங்கதன். என்னை ஒத்தவன். இவனைக் கைப்பிடித்து வழிகாட்டித்  தங்கள் பணியாளனாக ஆக்கிக்கொள்ளுங்கள்.”என்றான்.

 

 

தொடரும்


No comments: