Sunday, August 9, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 179

 

இறைவனை உயர்ந்தோனாக, உலகில் உள்ளோனாகக் காண்கையில்,  மனமுடை முடிச்சுகள் மறையும், விடுதலை தோன்றிடும்.  சந்தேகக் கருமேகம் தகர்ந்து, ஒளியே பரவிடும்,  கர்மத்தின் பந்தங்கள் கரைந்து, மோட்சம் பிறந்திடும்.  வாலி ..

 

 

மாயோனைக் கண்டான்

மாயைகள் அகன்றன

அவனே ஆனந்தம்

அவனே ஆதாரம்

அவனே அகிலத்தின் ஆத்மா

அவனைத் தாண்டி

அர்த்தம் இல்லை

 

துளசிதாசர் चल न चातुरी मोरि' என்ற பதங்களைப் போடுகிறார். வாலி இராமனிடம் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தான். தன்னைத் தந்திரமாக ஏமாற்றி யுத்தத்தில் மறைந்திருந்து இருந்து தன்னை அடித்தார் என்றான்.   இராமனிடம் வாலியின் குற்றச்சாற்று எடுபடவில்லை. இராமன் சொன்னான் நான் உன்னை எதிரியாக நினைத்திருந்தால் நேரடியாகவே போரிட்டு உன்னைக் கொன்றிருப்பேன். ஆனால் நீ செய்த கொடிய பாவத்திற்கு தண்டனை வழங்கினேன். அதற்கு எந்த சாஸ்திரமும் தடை போடவில்லை.

 

துளசிதாசரின் கருத்திற்கு இணையான கருத்து வால்மீகி இராமாயணத்திலும் உள்ளது.

 

प्रतिवक्तुम् प्रकृष्टे हि न अपकृष्टः तु शक्नुयात् |

माम् अपि अवगतम् धर्मात् व्यतिक्रान्त पुरस्कृतम् |

धर्म संहितया वाचा धर्मज्ञ परिपालय || ४-१८-४८

 

மேன்மையானவர்களிடம் மேன்மையற்றவர்கள் மறுமொழி கூறுவதற்கு இயன்றவர்கள் அல்ல. "அறநெறி அறிந்தவரே நான் தங்கள் அருகில் வந்துள்ளேன். என்னை இரட்சிக்கவேண்டும்.

 

राजभिः धृत दण्डाः कृत्वा पापानि मानवाः |

निर्मलाः स्वर्गम् आयान्ति सन्तः सुकृतिनो यथा || -१८-३१

शसनात् वा अपि मोक्षात् वा स्तेनः पापात् प्रमुच्यते |

 

பாவம் செய்தவன் அரசனால் தண்டிக்கபட்டு பாவமாற்றவனாகிறான். மேலும் சுவர்க்கத்தை அடைகிறான். அதனால் தான்,  வாலி இன்னும் நான் பாவியா என்று கேட்கிறான்.

தொடரும்


No comments: