Monday, August 24, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 193

 

நேற்றைய தொடர்ச்சி................

 

வாலி இறக்கும் தருவாயில் தனது மகன் அங்கதனைப் பற்றியும் அவனை மிகவும் நேசிப்பதாகவும் சொல்லும் வால்மீகி இராமாயண ஸ்லோகத்தை நேற்று பார்த்தோம். அதன் தொடர்ச்சி..........

 

न च आत्मानम् अहम् शोचे

ந ச ஆத்மானம் அஹம் சோசே”

நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.

 

இது சாதாரணமான வாக்கியம் அல்ல.

 

வாலி அம்பு பட்டுக் கிடக்கிறான். உயிர் பிரியும் நேரம். அப்படிப்பட்ட தருணத்திலும் அவன் முதலில் சொல்வது:

 

“என் மரணத்திற்காக நான் அழவில்லை.”

 

இதில் ஒரு வீரனின் மன உறுதி தெரிகிறது.

 

அதே நேரத்தில், இராமனுடைய தர்ம விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, மரணத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் வெளிப்படுகிறது.

 

“ந தாரம் நாபி பாந்தவான்”

न ताराम् न अपि बान्धवान् ।

தாரைக்காவும்  நான் வருந்தவில்லை; உறவினர்களுக்காவும் வருந்தவில்லை.

 

இது தாரையை நேசிக்கவில்லை என்பதல்ல.

 

மாறாக, தாரை அறிவாளி; அரசியல் ஞானம் உடையவள்; வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அவளுக்குண்டு என்று வாலி சொள்ளவருகிறான்..

 

உறவினர்களும் தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

 

ஆனால் ஒருவன் மட்டும் அவனுக்குப் பாதுகாப்பற்றவனாகத் தோன்றுகிறான்.

 

அவன் — அங்கதன்.

 

“யதா புத்ரம் குணஶ்ரேஷ்டம் அங்கதம்”

இதுதான் சுலோகத்தின் இதயம்.

 

“எல்லா நற்குணங்களிலும் சிறந்த என் மகன் அங்கதனைப் பற்றியே நான் அதிகம் வருந்துகிறேன்.”

 

வாலி அங்கதனைப் பற்றி மூன்று அடையாளங்கள் கூறுகிறான்:

 

அவன் என் மகன்.

 

அவன் குணசிறந்தவன்.

 

அவன் இன்னும் இளமையான இளவரசன்.

 

இங்கே தந்தையின் பார்வை மிகவும் மென்மையானது.

 

அரச வாரிசு என்பதற்காக அல்ல; குணம் மிக்க குழந்தை  என்பதற்காகவே வாலி உருகுகிறான்.

 

 

தொடரும்....................


No comments: