துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 188
நேற்றைய தொடர்ச்சி....
மீண்டும் துளசிதாசரிடக் வருவோம்
सो नयन गोचर जासु गुन नित नेति कहि श्रुति गावहीं।
जिति पवन मन गो निरस करि मुनि ध्यान कबहुँक पावहीं॥
मोहि जानि अति अभिमान बस प्रभु कहेउ राखु सरीरही।
अस कवन सठ हठि काटि सुरतरु बारि करिहि बबूरही॥1॥
வாலி இப்போது இராமனை வெறும் எதிரியாகப்
பார்க்கவில்லை; வேதங்கள் தேடும்
பரம்பொருளாகக் காண்கிறான்.
“எந்தப்
பரம்பொருளின் பெருமைகளை வேதங்கள் ‘நேதி நேதி(அதுவல்ல, ’ (பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட பொருளாகச் சுட்டிக்காட்ட முடியாது.)என்று
கூறிப் பாடுகின்றனவோ, மூச்சை முடக்கியும், மனதை அடக்கியும், புலன்களை வென்றும்
தியானிக்கும் முனிவர்களும் எந்தப் பரம் பொருளை முற்றிலும் உணரமாட்டார்களோ, அந்தப்
பரம்பொருளே என் கண்ணெதிரே நிற்கிறாரே இது
போதாதா? அது இதுதான்" என்று நாம் கூறும்
ஒவ்வொரு வரையறையையும் தாண்டியது பிரம்மம்.
அதனால்தான் வேதம்:
"இது அல்ல; அதுவும்
அல்ல"
என்று உலகில் நாம் அறிந்த எல்லைகளைக் கழித்துக் கொண்டே செல்கிறது.
ஆனால் வாலி கூறுகிறான்:
"வேதங்களால் வரையறுக்க முடியாத அந்தப் பரம்பொருள் இப்போது என்
கண்களுக்கு நேரில் தெரிகிறதே!"
இதுதான் பாடலின் அற்புதம்.
என்னை அகந்தை மிக்க அதமன் என்று அறிந்தும் “உயிரை விடாதே! இந்த உடலிலேயே உயிர் வாழ்வாய்” என்று சொல்கிறீர்களே! இந்த உடல் எதற்கு? கல்ப விருக்ஷத்தை வெட்டி கருவை மரத்தோட்டதிற்கு வேலி இடுவாருமுண்டோ?”
இது மிகவும் அழகானது.
கற்பக மரம் = இராமன்
கருவை மரம் = இந்த அழியும் உடல்
வாலி கூறுவது:
"என் முன்னால் கற்பக மரம் போன்ற இராமன் நிற்கிறார். அப்படியிருக்க,"இந்த அழியக்கூடிய உடலைக் காப்பாற்றிக்கொண்டு இன்னும் வாழ வேண்டும்" என்று நான் விரும்புவது என்ன முட்டாள்தனம்?
அதனால்:"இராம தரிசனம் கிடைத்த
பிறகு உடலைக் காப்பாற்றிக் கொள்ள நான் ஏன் விரும்ப வேண்டும்?"என்பதே வாலியின் கருத்து.
அவனுக்கு இப்போது கிடைத்திருப்பது
உடலைக் காப்பாற்றுவதைவிடப் பெரிய பேறு.
தொடரும்...............
No comments:
Post a Comment