Sunday, August 23, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 192

 

 

அங்கதன் அறிமுகம்

 

அப்பொழுது அங்கு வாலியின் மகன் அங்கதன் வந்துவிடுகிறான். அவனை இராமனுக்கு அறிமுகப்படுத்தும்போது எனக்குச் சமமான என்று சொல்வதில் பெருமை கொள்கிறான். मम सम बिनय बल என்று சொல்லி இன்னும் பெருமை கொள்கிறான் காரணம் அங்கதன் தங்களது வேலைகளை செய்யும் தகுதி உள்ளவன் என்று சொல்ல வருகிறான். लीजिए गहि बॉहः மற்றும்  'दास आपन कीजिए இவனைப் பிடியுங்கள் உங்கள் சேவகனாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறான். வால்மீகி இராமாயணத்தில் இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது

 

न च आत्मानम् अहम् शोचे न ताराम् न अपि बान्धवान् |

यथा पुत्रम् गुणश्रेष्ठम् अंगदम् कनकांगदम् || ४-१८-५०

स मम अदर्शनात् दीनो बाल्यात् प्रभृति लालितः |

तटाक इव पीतांबुः उपशोषम् गमिष्यति || ४-१८-५

 

“நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை; தாரையைப் பற்றியும், என் உறவினர்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால் எல்லா நற்குணங்களிலும் சிறந்தவனாகிய, பொன்னாலான தோள்வளையம் அணிந்த என் மகன் அங்கதனைப் பற்றியே நான் மிகவும் வருந்துகிறேன்.

 

என்னைப் பார்க்க முடியாமல் அவன் துன்பத்தில் ஆழ்ந்து விடுவான். சிறு வயது முதலே என்னால் அன்போடு வளர்க்கப்பட்ட அவன், நீரை முழுவதும் குடித்துவிட்ட குளம்போல் மெதுவாக வாடி உலர்ந்து போய்விடுவான்.”என்று சொல்கிறான் வாலி. அதாவது சுக்ரீவனும் இராமனின் சேவகன். வாலி அங்கதனையும் இராமனின் சேவகனாக கருதச் சொல்கிறான். அதாவது சுக்ரீவனையும் அங்கதனையும் சமமாக நடத்துங்கள் என்று சொல்ல வருகிறான்.

 

இங்கே கனகாங்கதம் என்பது அங்கதனின் பெயருடன் விளையாடும் அழகிய சொல். அங்கதன் என்ற பெயரும், அங்கதம் என்றால் தோளில் அணியும் வளையலும் ஒரே ஒலியைக் கொண்டதால், வால்மீகி “பொன்னாங்கதம் அணிந்த அங்கதன்” என்று கவித்துவமாக வர்ணிக்கிறார். திருதராஷ்ட்ரனின் ஒரு புதல்வனின் பெயர் கனகாங்கதன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் நாமாங்களின் ஒன்றும் கனகாங்கதன் என்றும் சொல்லப்படுகிறது)


                            படம் AI உருவாக்கம் 


தொடரும்.............

 


No comments: