துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 191
நேற்றைய தொடர்ச்சி..............
இந்தச் சூழலில் மற்ற எந்தத் தந்தையும் போலவே வாலியும் தனது மகன் அங்கதனைப்
பற்றியும் அவனது எதிர்காலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றியும் மிகுந்த
அக்கறை கொண்டிருந்தான். தனது மரணத்திற்குப் பிறகு அங்கதன் அநாதை ஆகிவிடுவான்.
மற்றும் தனது எதிரியான சுக்ரீவனின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடும். சுக்ரீவன் தனது
மகனை குறைந்த பட்சம் மனிதாபிமானத்துடன் நடத்துவான் என்று எப்படி எதிர்பார்க்க
முடியும்? ஆனால் வாலி இராமனை நம்பினான்.
அங்கதனை இராமனிடம் ஒப்படைத்தால் அவனுக்கு பாதுகாப்பு, நல்வாழ்வு
எல்லாம் கிடைக்கும். அதுவும் இந்தக் கோரிக்கையை மரணிக்கும் தருவாயில் வைத்ததனால்
இராமன் தனது கோரிக்கையை எப்படியும் நிறைவேற்றுவான் என வாலி நினைத்தான். இராமன்
சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் என்று வாலி நினைத்தான். அங்கதனை இராமனிடம்
ஒப்படைத்தால் தான் அமைதியான முறையில் மரணிக்க முடியும் என்று நம்பினான்.
பிற்பாடு வானரர்களுடன் சீதையைத் தேடும்
முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டபோது அங்கதன். சுக்ரீவனின் மீது தனது அதிருப்தியைத்
தெரிவிக்கிறான்.
மற்றொரு காரணம். கிஷ்கிந்தை
அரசுரிமையை அங்கதனுக்கு உறுதி செய்து கொள்ள விரும்பினான். அதனால் இராமனிடம் அந்தப்
பொறுப்பை ஒப்படைத்தான். வாலியின் விருப்பபடி
இராமன் அங்கதனை கிஷ்கிந்தையின் இளவரசன் ஆக்கினான்..
अब नाथ कारे करुना बिलोकहु இதன் பொருள் வாலி இராமனிடம் தாங்கள் எனது உடலை வைத்துக் கொள்ளச்
சொன்னீர்கள் . ஆனால் எனக்கு அது தேவை
இல்லை. தயவு செய்து கருணை காட்டுங்கள். நான் தங்களை எதிர்த்துப் போரிட்டேன்;
கடுமையான வார்த்தைகளைப் பேசினேன். அதற்கு என்னை மன்னியுங்கள். இதே கருத்தைத்தான்
வால்மீகி இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
यत् अयुक्तम् मया पूर्वम् प्रमादात् वाक्यम् अप्रियम् || ४-१८-४६
तत्र अपि खलु माम् दोषम् कर्तुम् न अर्हसि राघव |
வாலி இராமனின் சிவந்த கண்களைப் பார்த்து இராமன் தன் மீது கோபமாக
இருக்கிறார் என்று புரிந்து கொண்டான். அதனால் தான் தன் மீது கருணை புரியும்படி
சொல்கிறான். இராமன் தனக்கு உயிரைத் திரும்ப அளிப்பதாகச் சொன்னதை மறுத்து 'देहु जो बर माँगऊँ। நான் கேட்கும் வரத்தைக் கொடுங்கள் என்று சொல்கிறான்.
தொடரும்
No comments:
Post a Comment