துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 243
ஆர்.சேஷாத்ரிநாதன்
இந்து தமிழ்
திசை என்ற நாளிதழில் 9/1/2020 அன்று வெளியான சிந்து குமாரன் எழுதிய வாலி வதம் சொல்லும் ரகசியம் என்னும்
கட்டுரையின் தொடர்ச்சி.............. தி இந்து தமிழ் இதழுக்கும் கட்டுரை ஆசிரியர்
சிந்துகுமாரனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பார்வைக்குப் புலப்படாதது
இந்த அமைப்புக்கு வெளியே
விரிந்திருக்கும் ‘நான்’ என்னும் அறிவுணர்வில் கவனத்தை நிலைப்படுத்துவது ஒன்றுதான் இந்தச்
சிக்கலுக்குத் தீர்வு. மனத்தால் உள்ளீடும் உருவமும் இல்லாத எதையும் பார்க்க
முடியாது. உயிருணர்வு உள்ளீடற்றது; அதனால் உருவமும்
இல்லாதது. அந்தக் காரணத்தால் மனத்தின் பார்வையிலிருந்து இது மறைந்தே இருக்கிறது.
புலன்களையும் மனத்தையும்
பொறுத்தவரையில் உயிருணர்வு மறைந்திருக்கும் மறைபொருள். பார்வைக்குப் புலப்படாதது;
மனத்தால் கிரகிக்க முடியாதது. மனமும்
புலன்களும் இணைந்து உருவாக்கும் ‘உலகம்’ என்னும் அனுபவத்தைத்தான் ‘மாயை’ என்று சொல்கிறார்கள். மாயை உயிருணர்வை,
சுத்தப்பிரக்ஞையை(Pure
Consciousness) மறைக்கிறது; இந்த மறைபொருள் புரியும்போது மாயை மறைந்துபோகிறது.
மாயை மறைக்க மறையும் மறைபொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறைய வல்லார்க்குக்
காயமும் இல்லை கருத்தில்லைதானே
- என்கிறார் திருமூலர்.
சுத்தப்பிரக்ஞை வெளிப் படும்போது,
உடலும் உடல் சார்ந்த புலன்களும், மனமும் மனம் சார்ந்த கருத்துகளும் அனுபவத்தின் பின்னணிக்குப்
போய்விடுகின்றன, அறிவுணர்வின் கவனம்கொண்டு, அந்த வெளிச்சத்தில் படிவங்களைப் பார்க்கும்போது, படிவங்களில் பொதிந்திருக்கும் சக்தியை அறிவுணர்வு கிரகித்துகொண்டு
விடுகிறது. மறைந்திருக்கும் அந்தத் தத்துவத்தின் துணைகொண்டுதான், நம் முயற்சியின் வலிமையைத் தான் கிரகித்துக்கொண்டுவிடும் ஆழ்மனப்
படிவங்களின் பிடியிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள முடியும். இந்த
உண்மையைத்தான் வாலியின் வதம் குறிக்கிறது.
வாலி ஆழ்மனப்படிவங்களின் அடையாளம்.
புலப்படாமல் மறைந்திருக்கும் ‘நான்’ என்னும் ஆன்ம சக்தியைத்தான் ராமன் என்னும் தத்துவம்
பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
தொடரும்
No comments:
Post a Comment