துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
நேற்றைய தொடர்ச்சி.............
வாலி வதம். பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு.அதுவும் எல்லா இராமாயணங்களிலும் வரும் நிகழ்வு. அன்றைய சமுதாய சூழல், சமூகக் கட்டுப்பாடுகள்,
அரசியல் அமைப்பு, நிர்வாக முறைகள் இவைகளைப் பற்றி எதுவுமே தெரியாமல், அன்று நடந்த
நிகழ்வை இன்றைய சமுதாயத்தை உரைகல்லாக வைத்து உரசிப் பார்த்து சரி/தவறு என்று முடிவுக்கு
வருவது என்பது ஒரு நியாயமான செயலாக இருக்க முடியாது. அதனால் அதை ஒரு நிகழ்வு என்று கடந்து செல்ல வேண்டுமேயன்றி
விவாதிப்பதோ, ஒரு முடிவுக்கு வருவதோ தேவையற்றது என்பதே என் கருத்து.
இறுதியாக வாலி வதம் நமக்குச் சொல்லும் சேதி என்ன?
இறுதியாக பேராசிரியர் பெஞ்சமின் லெபோ -
பாரீசு (பிரான்சு) என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. அவருக்கு
உளங்கனிந்த நன்றிகள்.
“பாரதியின் 'குயிற் பாட்டில்' மனந்தோய்ந்து
கிடந்தேன். இறுதி இரண்டு வரிகளில்
"வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?"
எனப் பாரதி கேட்க, மனம் ஏனோ சட்டென்று கம்பனின் 'வாலி வதைப் படலத்துக்குத் தாவியது.
பரம்பொருளை, தருமத்தின் தலை மகனைத் தான் கண்டுகொண்டதை, உணர்ந்துகொண்டதை,
'உண்டு எனும் தருமமே உருவமா உடைய நிற்
கண்டு கொண்டேன்......"
எனப் பெருமித்தோடு உரைக்கிறான் வாலி.
பரமாத்மாவை உணர்ந்துகொண்ட ஜீவாத்துமாவுக்கு அடுத்துக் கிடைக்க வேண்டியது வீடு
பேறுதானே! இதனை உணர்த்துவது போல,
"பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்
தண்டமே அடியனேற்கு உறு பதம் தருவதே"
என்று வாலி உரைக்கிறான்
தொடரும்
No comments:
Post a Comment