Wednesday, October 14, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 வாலி வத சர்ச்சை

 பதிவு எண் 236

ஆர்.சேஷாத்ரிநாதன் 

 

 

நேற்றைய தொடர்ச்சி............   

 

கம்பர் சொல்வது

வேறு நின்று

↓

ஒளித்து நின்று(வாலி காணாதபடி தன்னைத் தானே மறைத்துக் கொள்ளுதல்)

ஆனால் வாலியின் பார்வையில் “இராமன் என்னை எதிர் கொள்ளாமல், என்னிடமிருந்து தன்னை மறைத்துக் கொண்டு, என்மீது அம்பு செலுத்தினான்

↓

மறைந்து

↓

மறைந்து நின்று எய்தது

 

ஆனால்

 

கம்பர் சொல்லாதது

“மரத்தின் பின்னால் நின்றான்”

 

என்ற குறிப்பிட்ட காட்சி.

 

கம்பரின் போர்க் காட்சியில் மரங்கள் இருக்கின்றன. வானரர்கள் மரங்களைப் பிடுங்கி எறிகிறார்கள் என்பதும் வருகிறது:

 

“மரத்தினால் அடித்து உரப்புவர்; பொருப்பு இனம் வாங்கிச்

சிரத்தின் மேல் எறிந்து ஒறுக்குவர்...” —

 


   அதனால் “இராமன் ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்தான்” என்று மூல இராமாயணத்தில் சொன்னது போல  நேரடியாகச் சொல்ல வில்லை. இங்கு இராமனின் ‘வேறு நின்று’ ஓர் போர் யுக்தியாகவும் இருக்கலாம். ஆனால் வாலியின் ஒளித்து  நின்று என்பது  மறைந்து நின்று என்றே பொருள் படுகிறது.  மரங்களின் பின்னால் நின்று என்று வால்மீகி நேரடியாகச் சொன்னார். ஆனால் மறைந்து நின்று என்பதை கம்பரே நேரடியாகச் சொல்லாமல் பாத்திரங்களின் மூலம் சொல்ல வைக்கிறார். ஆனால் பாத்திரங்கள் இராமன் எங்கு எப்படி மறைந்து நின்றான் என்பதைப் பேசவில்லை. இதைப் பற்றி இன்னும் விரிவாக கம்ப இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சொல்கிறேன்.

 

தொடரும்

No comments: