துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 230
(ஆர். சேஷாத்ரிநாதன்)
நேற்றைய தொடர்ச்சி................
வாலி தாரையினிடம் பேசும்போது,
"ஏற்றபே ருலகெலாம் எய்தி ஈன்றவள்
மாற்றவள் ஏவலால் அவன்தன் மைந்தனுக்கு
ஆற்றரும் உவகையால் அளித்த ஜயனைப்
போற்றலை, இன்னன புகறற் பாலையோ?”
(வாலி வதை. 33)
என்று கேட்கிறான். இங்கே
ஏற்றபேருலகெலாம் எய்தி” என்ற தொடர் தசரதன் ஆட்சி உலகமுழுவதும்
விரிந்தது என்பதைக் காட்டுகிறது. வாலியே இராமனொடு பேசும் போது,
“ வீரம் அன்று; விதிஅன்று;
மெய்ம்மையின் வாரம் அன்று நின் மண்ணினுக்கு
என்உடல் பாரம் அன்று” (வாலி வதை 92)
என்கிறான். “ நின்மண்ணினுக்கு ’ என்று அவன்
கூறுவதில், அவன் இருந்த நிலமும் இராமனுக்கு உரியதே
என்ற கருத்துப் புலனாகிறது. வாலியே அதை ஒப்புக்கொண்டு கூறுவதால் தன்னுடைய அரசுரிமை
இல்லாத நாட்டில் இராமன் செய்தது இது தவறு என்று சொல்வதற்கு இல்லை.
இதே கருத்தை வால்மீகி இராமாயணமும்
சொல்கிறது.
ते वयम् मार्ग विभ्रष्टम् स्वधर्मे परमे स्थिताः
|
भरत आज्ञाम् पुरस्कृत्य निगृह्णीमो यथा विधि || ४-१८-११
“மிக உயர்ந்த
கடமையில் பற்றுள்ள நாங்கள் பரதனின் ஆணையைக் கருத்தில் கொண்டே தர்ம மார்கத்தில்
இருந்து விலகியோரை தண்டிக்கிறோம். பரத கண்டத்தை பரதன் பரிபாலித்து வருகிறான்.
அவனது உத்திரவின் கீழ் நாங்களும் மற்ற அரசர்களும் பரதனின் உத்திரவை ஏற்று
தர்மத்தைக் காத்து வருவதுடன் அதை அவமதிப்பவர்களை தண்டித்து வருகிறோம்.
இங்கு ஒரு
கேள்வி எழலாம். பரதன் எப்போது இராமனுக்கு உத்திரவிட்டான்? இங்கு பரதன் இளையவன்.
அவன் இராமனுக்கு உத்திரவிடமுடியாது. உத்திரவிடமுவில்லை. ஆனால் அத்தகைய
நிலைப்பாட்டை அயோத்தியின் சிம்மாசனம் எதிர்பார்க்கிறது, வேண்டுகிறது. பரதன் அயோத்தியின் அரசன் அல்ல. அவன் அதைப்
பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவன் மட்டுமே. உண்மையில் இராமன்தான் பரதனுக்கு
ஆணையிடுகிறான். என்ன வென்று? பரதன் இராமனைச் சமாதானப் படுத்தி மீண்டும்
அயோத்திக்கு அழைத்துச் சென்று அரசனாக்க வேண்டி வனத்திற்கு வருகிறான். ஆனால் இராமன்
அவனைச் சமாதானப்படுத்தி “நீ அயோத்திக்குச்
சென்று மக்களுக்கு அரசனாக இரு. நான் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு அரசனாக
இருக்கிறேன் நீ நாட்டிற்குத் திரும்பு
.நான் தண்டகாரண்யத்திற்குள் நுழைகிறேன்” என்று சொல்கிறான்.
त्वम् राजा भव भरत स्वयम् नराणाम् |
वन्यानाम् अहम् अपि राज राण् मृगाणाम् |
गग्च्छ त्वम् पुर वरम् अद्य सम्प्रहृष्टः |
सम्हृष्टः तु अहम् अपि दण्डकान् प्रवेक्ष्ये || २-१०७-१७
ஆக தர்மத்தை
நிலைநாட்டுவதற்காக இராமன் ஒரு க்ஷத்ரியனாக
அந்தப் பொறுப்பைத் தோளில் சுமக்கிறான்.
தொடரும்
No comments:
Post a Comment