துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 224
நேற்றைய
தொடர்ச்சி...............
இராமா, பெருங்காடாகிய தண்டகாரண்யத்தில் இருந்தபோது, உன் மனைவி, இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டாள்
என்றும், அதன் காரணமாகவே (அதாவது, உன் மனைவியைத்
திரும்பப் பெறுவதற்கு உதவி கோரியே) நீ, சுக்ரீவனைச் சாணடைந்திருக்கிறாய் என்றும் கேள்விப்பட்டேன்.”
“இராமா! உலகமே போற்றும் என் ஆற்றலை,
நீ அறியவில்லை, பாவம்! நான் விரும்பினால், உற்றார்-உறவினரோடு ராவணனைக் கட்டிப் போட்டு, சீதையோடும் இலங்கையோடும், அரை முகூர்த்த காலத்துக்குள் இங்கே அவனைக் கொண்டு வந்து விடுவேன்!
இராகவா, நீ தர்மம் தவறாதவன் என்று
உலகத்தோரால் கூறப்படுகிறாய்.”
“ஒரு வேடன், வானரத்தை அடிப்பதைப் போல என்னை அடித்துக் கொன்றிருக்கிறாயே,
இதுதான் உன் தர்மமா? சொல்லு. வானரத்தின் இறைச்சி புசிக்கத் தக்கதல்ல. ஆக, ( (இப்போது என்னைக் வென்றிருக்க இனி) என் உடலை என்ன செய்யப் போகிறாய்?”
என்றான் வாலி.
இவ்விதம், பொருத்தமற்ற முறையில் நீளமாகப் பேசிக்கொண்டிருந்த வாலியைப்
பார்த்து ஸ்ரீராமன் சொன்னார் “தர்மத்தைக்
காப்பாற்றுவதற்காகவே கையில் வில்லைத் தாங்கி, நான் உலகில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதர்மம் செய்பவர்களைக்
கொன்று, நல்லறத்தைக் காப்பாற்றுகிறேன்.
ஒருவனுடைய மகள், சகோதரி, சகோதரனின் மனைவி, மருமகள் ஆகிய
நால்வரும் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள். இவர்களில் எவரேனும் ஒருத்தியிடம்
இன்பம் துய்க்கும் முட்டாளை, படுபாவி என்றே
சொல்ல வேண்டும். அத்தகையவன் அரசர்களால் கொல்லத் தக்கவன்.”
“நீயோவென்றால், தம்பியின் மனைவியைப் பலவந்தப்படுத்தி இன்பம் அனுபவிக்கிறாய்.
காட்டுவிலங்கே, அதனால் தான் தர்மம் தெரிந்த என்னால்
கொல்லப்பட்டிருக்கிறாய். மேலோர்கள், தம் செயல்களால் உலகத்தைப் புனிதப்படுத்துவதற்காகவே
(நாற்றிசையிலும்) சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். வானரப் பிறவி எடுத்துள்ள
நீ, இதனை அறியமாட்டாய்.” என்று
பதிலளித்தான் இராமன்.
இதைக் கேட்டதும், (தான் செய்துள்ள தவறுகள் காரணமாக) மிகவும் அச்சமடைந்த வாலி,
இராமபிரான் சாட்சாத் லட்சுமீகாந்தனே என்பதை
உணர்ந்து உடனே வணங்கிச் சொன்னான்.
“இராம, ராம! பேரருளாளரே! நீங்கள் உலக முதல்வர் என்பதை அறிந்துள்ளேன்.
அறியாமையால் என்னால் சொல்லப்பட்டவைகளை மன்னித்தருள வேண்டும் மகா யோகிகளால் கூட
தங்களைக் காணமுடியாது. (ஆனால், என் அதிருஷ்டத்தை என்னவென்று சொல்ல!)
தங்கள் கரத்தால் செலுத்தப்பட்ட அம்பினால் தாக்கப்பட்டு, தங்கள் சன்னிதியிலேயே உயிர்துறக்கப் போகிறேன்! (ஒரு மனிதன்)
இறக்கும் காலத்தில், தன்னுணர்வு இல்லாமல் கூட, எந்தப் பெயரைச் சொன்னால், வைகுண்டத்தை அடைவானோ, அந்தப் பெயருக்கு உரியவரே எனது இறுதி விநாடிகளில்
என் எதிரில் நிற்கிறார்!
“தேவனே! தாங்கள் தான் பரமபுருஷனான நாராயணன்; (மாதா) ஜானகிதேவி, லட்சுமி - என்று அறிவேன். பிரும்மதேவனால் பிரார்த்திக்கப்பட்டு ராவணனைக் கொல்வதற்காகத் தாங்கள் அவதாரம் எடுத்துள்ளீர்கள். தங்களுடைய உயர்ந்த ஸ்தானமாகிய வைகுண்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் எனக்கு விடை கொடுத்து அனுப்பிவையுங்கள்,” என்று பதிலளித்தான் வாலி.
தொடரும்
No comments:
Post a Comment