துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 226
நேற்றைய தொடர்ச்சி....
வாலி போரில் கொல்லப்பட்டான் என்று
சொல்கிறார் அனுமன் என்று நேற்றைய பதிவில் பார்த்தோம். . அதன் தொடர்ச்சி...
அடுத்த சுலோகம் இன்னும் தெளிவானது
ततो निहत्य तरसा रामो वालिनमाहवे ।
सर्वर्क्षहरिसङ्घानां सुग्रीवमकरोत्पतिम् ॥5.35.51
இங்கே இரண்டு சொற்கள் மிகவும் முக்கியமானவை:
वालिनम् आहवे —
“வாலியை போர்க்களத்தில் / போரில்”
அனுமன் கூறுவது:
“பின்னர் இராமன் போரில் வாலியை விரைவாகக் கொன்று, சுக்ரீவனை வானர–கரடி கூட்டங்களின் தலைவனாக்கினான்.”
அதன்பின்
रामसुग्रीवयोरैक्यं ... समजायत ।
हनूमन्तं च मां विद्धि तयोर्दूतमुपागतम् ॥5.35.52:
“இவ்வாறு இராம–சுக்ரீவர்களின் கூட்டணி ஏற்பட்டது; அவர்களுடைய தூதனாக வந்த என்னை அனுமன் என்று அறிந்துகொள்.”
அதாவது இதைச் சொல்பவன் வேறு யாருமல்ல — அந்த நிகழ்வுகளுடன் நேரடியாகத் தொடர்புடைய அனுமனே என்று சீதையைச்
சந்தித்தபோது அ\னுமன் சொல்கிறான்.
வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டம்
1-ஆம் சர்க்கத்தில், நாரதர் இராமகதையைச் சுருக்கமாக வால்மீகியிடம் கூறுகிறார்.
அங்கே:
तदा निर्गत्य सुग्रीवेण समागतः
एकेन शरेण निजघान
என்று இராமன் ஒரு அம்பினால் வாலியை
வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது; மேலும் அடுத்த சுலோகத்தில்:
ततस्सुग्रीववचनाद्धत्वा वालिनमाहवे ।
सुग्रीवमेव तद्राज्ये राघवः प्रत्यपादयत् ॥
“சுக்ரீவனின் வேண்டுகோளின்படி போரில் (āhave) வாலியைக் கொன்று, இராகவன் சுக்ரீவனை அந்த அரசில் நிறுவினான்.” என்று வருகிறது.
இங்கே கவனிக்க வேண்டியது:
ஆஹவே (āhave) என்பது āhava என்ற சொல்லின் வடிவம்; அதற்கு “battle, combat, contest” என்ற பொருள்கள் உள்ளன.
தொடரும்
No comments:
Post a Comment