Sunday, October 11, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

வாலி வத சர்ச்சை

 

பதிவு எண் 233


ஆர். சேஷாத்ரிநாதன் 

 

 

நேற்றைய தொடர்ச்சி............   

 

வாலியை வெல்வது கிட்டத்தட்ட இயலாத காரியம், இராமன் அவனுக்கு உதவி செய்ய சம்மதித்தான். வாலியைக் கொன்று ரூமையை மீட்டுத் தருவதாக வாக்களித்தான்.

 

வாலியை போருக்கு வருமாறு சுக்ரீவன் அழைத்தான். பயங்கர போர் மீண்டது. போரில் வாலி சுக்ரீவனைத் தாக்கினான். இனி சுக்ரீவனால் தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்து இராமன் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு எய்தான்.

 

இதற்குப் பின்னால் இராமர் இருக்கிறான் என்பதை வாலி புரிந்துகொண்டான். எனவே அவன்  இராமரிடம், “ஒரு அரசனாக, உங்களுக்கு விதிகள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஏன் ராஜ தர்மத்தைப் பின்பற்றவில்லை? என் சகோதரனுக்கு ஏன் உதவினீர்கள்?” என்று கேட்டார். வால்மீகி இராமாயணத்திலும் இதே கேள்வியைத்தான் இராமன் கேட்கிறான். இராமன் “நீயோ கலப்படமான தர்மத்தை அனுஷ்டிப்பவன். நிந்திக்கும்படியானச் செயலைச் செய்தவன். காம தந்திரம் தான் உனக்கு பிரதானமாக ஆகி விட்டது. அரசன் என்ற கோட்டில் நிற்காமல் அலைகிறாய்.ஒரு நேர்மையான அரசனுக்கான நடத்தை விதிமுறைகள் எதையும் நீ பின்பற்றவில்லை.உங்கள் சகோதரனுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல் அவனை வெளியே துரத்தியபோது நீ ராஜ தர்மத்தைப் பின்பற்றவில்லை

  

இராமன் வாலியிடம் “தாய் அல்லது சகோதரிக்கு சமமான உங்கள் தம்பியின் மனைவியை நீங்கள் அபகரித்து அவள் நலத்தை நுகர்ந்தாய்.. அது மிகவும் தவறு.”

 

இதற்கு பதில் அளித்த வாலி ‘மனிதர்களுக்கு உள்ள அறத்தை எங்களுக்குச் சார்த்துவது முறையன்று.  ஆக எங்கள் விலங்குத் தொழிலுக்கு ஏற்றதே இது” என்கிறான்.

 

அதற்கு இராமன் “உன்னுடைய பேச்சும் அறிவும் விலங்கிற்குரியவை போல இல்லையே, இத்தகைய அறிவுடைய நீ இது பிழை என்று உணராமல் இருப்பாயோ? உணர்ந்தும் இதைச் செய்தாய் அதனால் தண்டித்தேன்.

  

நீ தான் விதியை மீறியவரன். அதனால், உன்னை  ராஜ தர்மத்துடன் நடத்த எனக்கு எந்தக் கடமையும் இல்லை. மேலும், எளிதில் மன்னிக்கும் அளவுக்கு நீ ஒரு சாதாரண குடிமகன் அல்ல.”… என்றான்.

   

வாலி கடைசி கேள்வியைக் கேட்கிறான், "நீ எப்படி விதிகளை மீறி என்மீது மறைந்து நின்று அம்பு எய்தாய்? நீ இரண்டு விதிகளை மீறினாய். ஒரு அரசனாக இருப்பதும், ஒரு மனிதனாக இருப்பதும்... தவறு. உன் செயல்களை எப்படி நியாயப்படுத்துகிறாய்?"

 

இராமன் பதிலளிக்கிறான், "இல்லை. நான் எந்த விதியையும் மீறவில்லை. நீ இங்கே அரசனாக இருக்கலாம், ஆனால் நீ ஒரு வானரன். நீ ஒரு மனிதன் அல்ல. அதனால் தான் நான் உன்னை பின்னாலிருந்து தாக்கினேன். . எந்தவொரு வேட்டைக்காரனும் தன் இரையை பின்னாலிருந்து/மறைந்திருந்து  தாக்குவது  போல, நான் உன் மீது நியாயமாக அம்பு எய்தேன். ." என்றான்.  வாலி தன் தவறுகளை உணர்ந்து, இறுதி மூச்சை விடுவதற்கு முன் தன் தம்பியிடம் மன்னிப்பு கேட்கிறான்.

 

 

தொடரும்

 

No comments: