கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 229
நேற்றைய தொடர்ச்சி ...........
இதுவே வாலி வதைப் பற்றிய விவாதத்தில்
மிக முக்கியமான மொழியியல் நுணுக்கம்.
கம்பரின் வாலி வதைப் பாடல்களோடு இதை
இணைத்துப் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் கிடைக்கிறது:
“போர்” யார் நடுவில்?
வாலி ↔ சுக்ரீவன் — நேரடி மற்போர்
இராமன் — அந்தப் போரைக் கவனித்து, வாய்ப்பு கிடைத்தபோது அம்பு செலுத்துபவர். அப்படி அம்பு செலுத்துவது
போர் யுக்திகளில் ஒன்றாக இராமன் கருதி இருக்கலாம் அல்லது அந்தக் காலக் கட்டங்களில்
அது ஒரு போர் யுக்தியாக ஏற்றுக் கொள்ளபபட்டிருக்கலாம்.
அதனால் “வாலி வதம் போரில் நிகழ்ந்தது” என்பது ஒரு சரியான கூற்று.
ஆனால் “இராமன்–வாலி நேரடி போர் நடந்தது” என்பது வேறு கூற்று.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது.
வாலி வதையை பற்றி பிரதானமான
இராமாயணங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்த்தோம். வாலி வதம் போரில்
நிகழ்ந்தது என்றும் சில கூற்றுகளைப் பார்த்தோம்.
இனி மீதி அம்சங்களைப் பார்ப்போம். வாலி வதையில் மூன்று விதமான வினாக்கள் எழுகின்றன. அயோத்தி அரசனாகிய தசரதன்
மகன் கிஷ்கிந்தையில் இந்தச் செயலைச் செய்வதற்கு உரிமை உண்டா என்பது ஒரு வினா, வாலியை மறைந்து கொன்றது முறையா என்பது இரண்டாவது வினா; இறுதியில் வாலி மனம் மாறி இராமன் செய்தது முறைதான் என்று சொல்வது
இயல்பாக அமைந்திருக்கிறதா என்பது மூன்றாவது
இராமன் வாலியைக் கிஷ்கிந்தைக்கு வந்து
கொன்றான். அதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது.?
தசரதன் அரசாட்சிக்குள் உலகமெல்லாம்
அடங்கி நின்றது என்றே கம்பன் சொல்கின்றான்.
'அம்மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு
அரசன் செம்மாண் தனிக்கோல் உலகு ஏழினும்
செல்ல நின்றான்
(அரசியல்:படலம் )
என்று கூறுகிறான். அதனால் கிஷ்கிந்தை
அவன் ஆட்சிக்குட்பட்டது என்பது தெரியவரும். அந்த அந்த நாட்டுக்கு என்று தனி
அரசர்கள் இருந்தாலும் அவன் எல்லா அரசர்களுக்கும் மேலான அரசன், சக்கரவர்த்தி. இராமனைச் சக்கரவர்த்தித் திருமகன் என்பதில்
அடையின்றிச் சொல்வதனால் தசரதன் தனியுரிமை பெற்ற சக்கரவர்த்தி என்பது தெரிய வரும்.
தொடரும்
No comments:
Post a Comment