துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 231
ஆர். சேஷாத்ரிநாதன்
நேற்றைய தொடர்ச்சி............
மூல
இராமாயணத்தைப் படைத்த வால்மீகி, இராமனின் சமகாலத்தவர். த்ரேதா யுகத்து அரசியல்,
சமூக அமைப்பு பற்றி விவரமாகத் தெரிந்தவர். அவரே இராமனின் உரிமையை
உறுதிப்படுத்தும்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் அமைப்பு,
சட்டதிட்டங்கள் சமூக கட்டுப்பாடுகள், பழக்க
வழக்கங்கள் பற்றி எதுவுமே தெரியாத நாம் இந்த நிகழ்வை விமர்சித்து இராமனுக்கு என்ன
உரிமை என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.
இப்போது இராமன் ஏன்
மறைந்திருந்து வாலியின் மீது அம்பு எய்தான்? என்று பார்க்கலாம் ஒரு வேளை இராமன்
வாலியுடன் நேரடியாக மோதினால் முதலில் அதை யுத்தமாக அறிவிக்க வேண்டும். அப்படி
அறிவிக்கும் பட்சத்தில் வாலி முதலில் நேரடியாக இராமனுடன் மோதமாட்டான். அவனது
கோடிக்கணக்கான வானர சேனையுடன் மோத
வேண்டியது இருக்கும். கரனின் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய சேனையை இராமன் தனியாக ஒரு
நொடியில் அழித்தான். அதனால் வானர சேனையுடன் மோதுவதில் இராமனுக்கு எந்த பிரச்னையும்
இல்லை. ஆனால் வானரப் படை இழப்பை இராமன் விரும்பவில்லை. காரணம் சீதையைத் தேட
அவர்களின் உதவி மிக அவசியம். இரண்டாவது வானரர்கள் எல்லோருமே தேவர்கள். இராவணனை
அழிப்பதில் இராமருக்கு உதவி செய்யவே அவர்கள் வானரர்களாக அவதரித்துள்ளனர். ஆதலால்
இராமன் மறைந்திருந்து வாலியைத் தாக்கினான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
வேடர்களோ, அரசர்களோ விலங்குகளை நேராக நின்று கொல்வதில்லை. அதைக் கொல்ல
மற்ற எல்லா வழிமுறைகளையும் கையாள்வர்கள். வாலி தன்னை ஒவ்வொரு முறை விலங்கு என்று
சொல்லும்போது, இராமன் நீ தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் பேசுகிறாய். இறை வழிபாட்டில்
ஈடுபடுகிறாய். ஆனால் நீ செய்த தகாத செயல்கள் எல்லாம் விலங்கிற்கு ஒப்பானவை. நீ
தண்டிக்கப்படவேண்டியவன். உன்னைத் தண்டிக்கவில்லை என்றால் அந்தப் பழி என்னை வந்து
சேரும். நோக்கம் தண்டனை. அதை உன் கண் மறைவில் இருந்து செய்தேன் என்கிறான்.
வர்ணாஸ்ரம
தர்மத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளன. ஒவ்வொரு வர்ணத்திற்கும் விதிகள் உண்டு, மக்கள் அவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற
வேண்டும். அப்படித்தான் இராமர் நடந்து கொண்டான். கர்மாவிற்கும் விதிகள் உண்டு.
அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அதனால்தான் வானர மன்னன் வாலி பின்னால்
இருந்து தாக்கப்பட்டான்.
இப்போது
இவற்றை விரிவாக ஆராய்வோம்; இராமர் ஏன் சுக்ரீவனுக்கு உதவினார்? இராமன் ஒரு சத்திரியராகவும் மன்னனாகவும்
இருந்தான். ஒருவர் மற்றவரைத் துன்புறுத்தும்போது, துன்புறுத்தப்பட்டவருக்கு உதவுவது அவருடைய பொறுப்பாகும். சுக்ரீவன்
துன்புறுத்தப்பட்டான், ஏன்?
தொடரும்
No comments:
Post a Comment