வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஸ்வயம்ப்ரபை பகுதி
பதிவு எண் 370
நேற்றைய
தொடர்ச்சி...............
ஸ்ரீராமன் பத்தினியாம்
சீதாதேவி தனைராவணன்
ஆருமிலா வேளையிலே
அபகரித்துப் போனானம்மா
சீதைதனைத் தேடவந்தோம்
சிமையெங்கும்
சுத்திப்பார்த்தோம்
மாதரசாம் சீதையம்மாள்
வசிக்குமிடந் தெரியவில்லை
------------------
பசிதாகம் பொ றுக்காமலே
பறந்துவந்தோ மிவ்விடத்து
௮சதிமிக வாகையினால்
அருந்தத்தந்து சீதையுள்ள
ஸ்தலமதனைத்
தெரிழ்திருந்தால் சற்றுக்கிர்பை
கொண்டுரைப்பீர்
அலைந்துமிக நொந்தோமென்று
அனுமார்சொல்லக்
கேட்டந்தப்பெண்
--------------------
பரிதாபம் மிகவடைந்து
பசிதாகங் களைத்தீர்க்க
அருந்தும்நல்ல பலாதிகளை
அளித்தாளம்மா
அன்புடனே.
ஜானகியைத் திருடிப்போன
சங்கதிக்காய் விசனப்பட்டு
நானறியேன் ஜானகியாள்
நன்விலத்தி லிருக்குமிடம்
செம்மையாக வெங்குந்தேடிச்
சீதைதனைப் பாருமையா
அம்மன்சீதை யிருக்குமிடம்
அறித்துகொள்வீ
ரென்றுமிக
----------------
அனுக்கிரசித்து வானரரை
அரைநொடியில் -
வெளியில்தாட்ட
மனதிலெண்ணி யெல்லோருக்கும்
மனமுவந்து
சொல்லுகிறாள்
திருப்பிப்போக மார்க்கமது
தெரியாதையா வுங்களுக்கு
அரைநிமிஷம் கண்கள்மூடி
அப்படியே இருப்பீராயின் .
இந்தவிடம் விட்டுமுந்தி
இருந்தவிடம் சேர்த்துவேனான்
அந்தப்படி செய்யுமென்று
அவளுரைத்த
படிசெய்தார்கள்
-------------------
மூடிக்கண்ணைத்
திறக்குமுன்னே முன்னிருந்த
விடத்தில்வந்து
கூடினார்கள் வானரர்கள்
நாடிக்கண்ணைத்
திறந்து பார்த்தார்
அதிசயித்தார்
ஆனந்தித்தார் அதன்பிறகு விதித்தகெடு
மதியிலெண்ணிப்
பார்த்தாரம்மா மனதிலட்சங்
கொண்டாரம்மா
தொடரும்...
No comments:
Post a Comment