வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 358
நேற்றைய தொடர்ச்சி.....
தொன்று தொட்டு மக்களிடைய
சில சொலவடைகள் புழக்கத்தில் உள்ளன. பீஷ்ம பிரதிஞ்ஞை, (பீஷ்ம சபதம்) இதுபோல அன்றைய
கால கட்டங்களில் மக்களிடையே பிரசித்தி பெற்ற ஒரு சொலவடை “சுக்ரீவன் ஆக்ஞை”
சுக்ரீவன் தனது கோடிக்கணக்கான வானர வீரர்களுக்கு
உலகத்தின் மூலைகளுக்குச் சென்று ஒரு
மாதத்திற்குள் சீதையைத் தேடும்படி கட்டளையிட்டு
மீறுவோருக்கு மரண தண்டனை என்று அறிவித்தான். எல்லா வானர வீரர்களும் கீழ்
படிந்தனர். இப்படி ஒரு தலைவன் இடும் கட்டளைக்கு அந்தக் காலத்தில் சுக்ரீவன் ஆக்ஞை
என்ற அடைமொழி உண்டு. இது பற்றி 1923 ல் ஆனந்த போதினி என்ற
பத்திரிகையில் ம. இராஜகோபால பிள்ளை என்பவர் ‘சுக்ரீவ ஆக்ஞை’ என்ற ஒரு கட்டுரை
எழுதி உள்ளார். அந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
சுக்ரீவ ஆக்ஞை.
சுக்ரீவ ஆக்ஞை என்பது நமது காட்டில் வழங்கப்பெற்று
வரும் பழமொழிகளுள் ஒன்று,
ஒரு காரியத்தைச்
செய்யும்படி ஒருவர் மற்நறொருவருகச்கு உத்தாவிட்டாலோ அல்லது அவரைச் கேட்டுக் கொண்டாலோ
அவ்வாறு உத்தாவிடப்பட்ட அல்லது கேட்டுச் கொள்ளப்பட்டவர், அக்காரியத்தை உடனே
செய்யத்தவறின், அன்னவரை நோக்கி “(ஏன் நமது உத்தரவை அல்லது
வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்ற கேள்வி நிகழும்போது இதென்ன சுக்ரீவ ஆக்ஞை? போலிருக்கிறதே?? என்னும் மறுமொழி சில சந்தர்ப்பங்களில்
பிறப்பது உண்டு, இதனைச் சிறிது ஆலோசித்து , இதனால் நமது தாய் நாட்டை
எவ்விதம் முன்னேற்றத்திற்குக் கொண்டுவரக்கூடுமோ அந்த உபாயத்தை யறிவோமாக,
சுத்கிரீவன் வானரேந்திரனாகிய
வாலியின் தம்பி, வாலியோ அறிவு, ஆற்றல், தெய்வ நம்பகம் முதலிய சிறந்த
குணங்கள் பொருந்தப் பெற்றவன்,
ஆகிலும் அகங்காரத்திற்கு
இடங்கொடுத்தான். அக்காரணத்தால் அவ்வுயர்ந்த குணங்கள் அவனுக்கு வேண்டுஞ்
சமயத்திற் பயன்படா தொழிந்தன. அவ்வாலி, சுக்ரீவன் விஷயத்தில் “(ஐயோ! இவன் இளையவன்றானே; பெருந்தவறொன்றுஞ்
செய்துவிட வில்லையே. நமது
நாட்டாரின் வேண்டுகோளுக்கு
இசைந்தன்றோ அரசுபுரிய உட்பட்டான்; இப்போது அச்செய்கையையும்
தப்பித மென்றே ஒத்துக்கொண்டு நம்மையே சரணாகதி யடைந்தனனே; அவனுக்கு நம்மினும் உத்திருஷ்டமான
உதவி வேறெவர்!? என்பவையாதிய நியாய நெறிகளை
யொரு சிறிதும் கவனியாது, அவன் மனைவியையுங்
கைப்பற்றிக்கொண்டு, “இடம் கொடுத்தால்
மடம்பிடுங்குவான்? என்றெண்ணிச், சிட்டுக் குருவியின் மீது
இராமபாணந் தொடுத்தது போல அவனைத் தொந்தரவுக்
குட்படுத்தினான். இது தனது பராக்கிரமத்துக்கே இழிவு என்பதையும் புறக்கணித்தான்.
தொடரும்
No comments:
Post a Comment