Friday, November 28, 2025

 





வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்ப்ரபை பகுதி

 

பதிவு எண் 371

 

நேற்றைய தொடர்ச்சி.....

 

ஹனுமனையும் வானர வீரர்களையும் குகைக்கு வெளியே அனுப்பிவிட்டு ஸ்வயம்ப்ரபை என்ன செய்தாள்? என்று ஆத்யாத்ம இராமாயணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

அந்த ஸ்வயம்பிரபையும்‌, குகையை விட்டு சீக்கிரமாக  ஸ்ரீராகவருடைய ௮ருகாமையில்‌ வந்து   சேர்ந்தாள்‌.

 

 

कृत्वा प्रदक्षिणं रामं प्रणम्य बहुशः सुधीः ।

आह गद्गदया वाचा रोमाञ्चिततनूरुहा ॥ ६०॥

 

दासी तवाहं राजेन्द्र दर्शनार्थमिहागता ।

बहुवर्षसहस्राणि तप्तं मे दुश्चरं तपः ॥ ६१॥

 

गुहायां दर्शनार्थं ते फलितं मेऽद्य तत्तपः ।

अद्य हि त्वां नमस्यामि मायायाः परतः स्थितम् ॥ ६२॥

 

௮ங்கு ஸ்ரீராமர்‌, இலக்ஷ்மணர்‌, ஸுக்ரிவன், இம்மூவரையும்‌ கண்டு, ஸ்ரீராமரைப்‌ பல தடவை: பிரதக்ஷிணம்‌ செய்து, நமஸ்கரித்து, மயிர்க்‌ கூச்சலடைந்து, தாழ்ந்த குரலுடன்‌ கூறுகிறாள்‌.

 

“ஓ இராஜ சிரேஷ்டராகிய ஸ்ரீராமப்பிரபுவே! நான்‌ தங்களுக்கு ஊழியம்‌ செய்பவள்‌, தங்களைத்‌ தரிசனம்‌ செய்வதற்கு  வந்தேன்‌. தங்களுடைய தெரிசனத்துக்காகக், குகையில்‌ இருந்து ஆயிர வருஷங்களாகத்‌ தவம்‌ செய்தேன்‌, இப்போதுதான்‌ நான்‌ செய்த தவம்‌ பலித்தது,

 

सर्वभूतेषु चालक्ष्यं बहिरन्तरवस्थितम् ।

योगमायाजवनिकाच्छन्नो मानुषविग्रहः ॥ ६३॥

 

न लक्ष्यसेऽज्ञानदृशां शैलूष इव रूपधृक् 

महाभागवतानां त्वं भक्तियोगविधित्सया ॥ ६४॥

 

अवतीर्णोऽसि भगवन् कथं जानामि तामसी ।

लोके जानातु यः  कश्चित्तव तत्त्वं रघूत्तम ॥ ६५॥

 

மாயைக்கு அப்பால்‌ இருப்பவரும்‌, பூதங்கள்‌ யாவற்றுக்கும்‌ உள்ளிலும்‌ புறத்திலும்‌ உள்ள வருமாகிய தங்களை இப்‌போது நமஸ்கரிக்சிறேன்‌, தாங்கள்‌ மாயையாகிய இசையால்‌ மறைக்கப்பட்டு மானிட ரூபம்‌ தரித்‌திருக்கிறீர்கள்‌, ஸ்‌திரீகளைக்‌ கொண்டு ஜீவிப்பவன்‌) போல்‌ அஞ்ஞான கண்கள் உள்ளவர்களுக்குத் ‌ தாங்கள்‌ காணப்படமாட்டீர்கள்‌, சாத்வீக குணமுடைய சிறந்த பாகவதர்களாகிய பக்தி மார்க்கத்தை ௮னுஷ்டிப்பவர்கள்‌, பார்க்க வேண்டுமென்ற விருப்பத்தால்‌ தாங்கள்‌ அவதாரம்‌ செய்‌திருக்கிறீர்கள். தமோ குணமுடைய நான்‌ எவ்விதம்‌ தங்களைத்‌ தெரிந்து கொள்‌வேன்‌.

 

தொடரும்


No comments: