வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஸ்வயம்ப்ரபை பகுதி
பதிவு எண் 372
நேற்றைய
தொடர்ச்சி.....................
ஹனுமான் அங்கதான் மற்ற
வானரர்களை உபசரித்து வழியனுப்பிவிட்டு ஸ்வயம்ப்ரபை நேராக இராமனை சந்திக்க
வந்துவிடுகிறாள் என்று ஆத்யாத்ம இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை முந்தைய பதிவில் பார்த்தோம்..... அதன்
தொடர்ச்சி............இராமனைப் பார்த்து மகிழ்ச்சியுற்று சொல்கிறாள்:
ममैतदेव रूपं ते सदा
भातु हृदालये ।
राम ते पादयुगलं
दर्शितं मोक्षदर्शनम् ॥ ६६॥
अदर्शनं भवार्णानां
सन्मार्गपरिदर्शनम् ।
धनपुत्रकलत्रादिविभूतिपरिदर्पितः
।
अकिञ्चनधनं त्वाद्य
नाभिधातुं जनोऽर्हति ॥ ६७॥
ஓ இரகு சிரேஷ்ட.! உலகத்தில் தங்களுடைய தத்துவத்தை யாரேனும் ஒருவன் ௮றிவானா? இரகுவீர! என்னுடைய இருதயத்தில்
தங்களுடைய இந்த ரூபமே எப்போதும் விளங்கவேண்டும். ஓ இரகோத்தம: தங்களுடைய இரண்டு பாத பத்மங்களின் தெரிசனமானது
மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடியது,
ஸம்ஸாரமாகிய சமுத்திரத்தில்
௮ழுத்தாதது, நன்மார்க்கத்தை நன்று
தெரிவிக்கக் கூடியது. ஏழைகளுக்குப்
பொருள் போன்ற பிரபுவே! பொருள்,
பு.த்திரன், களத்திரம், முதலிய ஐஸ்வரியங்களால்
மிகவும் மமதை கொண்ட ஜீவர்கள் தங்களுடைய குணங்களைச் சொல்லுவதற்கு யோக்யதை
யடையார்கள்.
निवृत्तगुणमार्गाय निष्किञ्चनधनाय ते ॥ ६८॥
नमः स्वात्माभिरामाय निर्गुणाय गुणात्मने ।
कालरूपिणमीशानमादिमध्यान्तवर्जितम् ॥ ६९॥
समं चरन्तं सर्वत्र मन्ये त्वां पुरुषं परम् ।
देव ते चेष्टितं कश्चिन्न वेद नृविडम्बनम् ॥ ७०॥
ஓ இரகுராம! மாயையற்றவரும், தன் : ஸ்வரூபத்திலேயே
இரமிப்பவரும், குணங்கள் ௮ற்றவரும், குணசொருபரும்,. ஏழைகளுக்குப் பொருளாகியவரும்
ஆகிய தங்களுக்கு நமல்காரம்,
காலரூபியும், பிரபுவும், ஆதி மத்தி-அந்தம் இவைகள்
இல்லாதவரும், எங்கும் சமமாக இருப்பவரும்
ஆகிய பரமபுருவன் என்று தங்களை நான் நினைக்கிறேன்..ஓ தேவ! தங்களுடைய சரித்திரத்தை யாரும் அறியார்கள்.
தொடரும்
No comments:
Post a Comment