வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 360
சுக்ரீவனிடமிருந்து விடை பெற்றுச் சென்ற வானரர்கள் ஆறு, ஏரி, புதர், பாலைவனம், நகரம் போன்ற எல்லா
இடங்களிலும் தேடிக் கொண்டு சென்றனர். பகல்
முழுவதும், காடுகளிலும் மலைகளிலும் தேடுவர். இரவு வந்துவிட்டால் ஓரிடத்தில் ஒன்றாகத்
தங்குவர். பின்னர் மறுபடியும் பிரிந்து சென்று பற்பல இடங்களில் தேடினர். இவ்வாறு
ஒரு மாதம வரையிலும் தேடித் பார்த்துவிட்டு
வானர வீரர்கள் திரும்பத் தொடங்கினர்.
ஹனுமன் சென்ற தென் திசை
வீரர்களைத் தவிர மற்ற திசைகளுக்குச் சென்றிருந்த வீரர்கள் திரும்பத் தொடங்கினர்.
அவர்களால் முடிந்த வரை எல்லா இடங்களிலும் தேடிவிட்டுச சுக்ரீவனிடம் வந்து
விஷயத்தைச் சொன்னார்கள்.
தென் திசைக்குச் சென்ற ஹனுமன்,
அங்கதன், தாரன் போன்றோர் பல இடங்களில் சென்று ஆராய்ந்தனர். பலவிதமான மலைகளையும்,
சிகரங்களையும்., குகைகளையும் காடுகளையும் பார்த்துப் பார்த்துத் தேடினர், தங்களால் முடிந்தவரை பல இடங்களில் அலைந்து திரிந்தனர்.
எங்கும் சீதையைக் காண முடியவில்லை..
இதற்கிடையில் அங்கதன்
தலைமையில் சென்ற ஹனுமன் மற்றும் குழுவினர் விந்திய மாலைச் சாரலில் சீதையைத்
தேடினர். அவ்விடத்தில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. வானரங்களுக்கு பசியும் தாகமும்
ஏற்பட்டு களைப்படைந்தனர். மலையைவிட்டு
அருகிலுள்ள காட்டினுள் சென்றனர். அங்கு இலைகள் இல்லாத மொட்டை மரங்களைக் கண்டு
ஏமாந்தனர். இலைகளே இல்லை என்றால் காய்களும் கனிகளும் எங்கிருந்து கிடைக்கும்?
சிற்றாறுகள் ஓடைகள் காய்ந்து விட்டதால்
விலங்குகளும் பறவைகளும் அங்கு காணக் கிடைக்கவில்லை. இந்தக் காட்டின் வரலாறு
பற்றிய தகவல்; “ஒரு காலத்தில் இந்தக் காடானது “கண்டு” என்னும் சிறந்த முனிவரின் இருப்பிடமாகத்
திகழ்ந்தது. அவருக்கு அழகும் இளமையும்
உள்ள மகன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு பதினாறு வயது இருக்கும் பொழுது அந்தக் காட்டில் வழி தப்பிச் சென்று காட்டு விலங்குகள் மூலம் உயிர் இழந்து
விட்டான்,
தனது மகன் மேல் மிகுந்த
அன்புடைய கண்டு மகரிஷி இந்தச் செய்தியை அறிந்தார்; துடித்தார்; சோகத்தால்
புலம்பினார்; இந்தக் காட்டின் மீதும் காட்டில் உள்ள விலங்குகள் மீதும் மிகுந்த
கோபம் கொண்டார். எனவே அங்குள்ள உயிரனங்கள் அழியும்படியும், வனம் நாசம்
அடையும்படியும் சபித்துவிட்டார். அது முதற்கொண்டு இந்தக்காடு இந்த நிலையை அடைந்து
விட்டது. அந்தக் காட்டின் உள்ளே நுழைந்து
வெளி வருவதே கடினமாகி விட்டது. இந்த வனத்தின் முடிவில், மலைகளிலும், குகைகளிலும், நதிகள் பாய்ந்த அடையாளமே
காணப்படவில்லை மீதி இடங்களிலும்
தேடினார்கள். ஜனகனின் புதல்வியைக் காணவில்லை. கவர்ந்து சென்ற இராவணனையும்
காணவில்லை. சுக்ரீவனுக்குப் பிரியமானதை செய்ய விரும்பியதால், இந்த இடத்தை வேகமாகக்
கடந்தனர். அடுத்து, கொடிகளும், புதர்களுமாக மூடிக் கிடக்க, ஒரு கொடிய அசுரனைக் கண்டனர். இவனுக்கு யாரிடமும்
பயம் இல்லை. தேவர்களுக்கும் அஞ்சாதவன் என்று சொல்லிக் கொண்டான். திடுமென எதிரில்
மலை போல வந்து நின்ற அசுரனைப் பார்த்து வானரங்கள் திகைத்தன. நீங்கள் எல்லோரும்
அழிந்தீர்கள், இதோ வந்தேன் என்று
கத்தியபடி, முஷ்டியைத் தூக்கிக்
கொண்டு அருகில் வந்தான். வாலி புத்திரன், அங்கதன் அவன் உருவத்தையும், கத்தலையும் கேட்டு, இராவணன் தான் இவன் என்று
எண்ணி தன் புறங்கைகளால் ஓங்கி அடித்தான்.
மலை போல நின்றிருந்தவன் அந்த அடியைக் கூட தாங்காமல் பொத்தென்று விழுந்தான்.
கன்னத்தில் பட்ட அடியில், வாயிலிருந்து ரத்தம்
பெருகியது. அவன் மூச்சு விடுவது நின்று
விட்டது என்று வானரங்கள் தெரிந்து கொண்டு பயமின்றி அந்த இடம் முழுவதும்
தேடினார்கள். குகைகள், மலைச் சாரல்களில் நன்றாகத்
தேடி விட்டு, அடுத்த காட்டிற்குள் பிரவேசித்தனர்.
இங்கும் அலைந்து திரிந்து தேடி விட்டு உடல் களைத்தவர்களாக மனமும் வாட, ஏகாந்தமான ஒரு மரத்தடியில்
அமர்ந்தனர்.
தொடரும்
No comments:
Post a Comment