Thursday, November 27, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்பிரபை பகுதி  


பதிவு எண் 368

 

நேற்றைய தொடர்ச்சி...............

 

 

இராமாயணத்தின் ஸ்வயம்பிரபை பகுதியை முந்தைய  இரண்டு பதிவுகளில் படித்தோம். இது பற்றி நலுங்கு மெட்டு இராமாயணத்தில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்:

 

சீதையெங்கும்‌ காணாமலே சித்தமிக நொந்ததோடு

பாதைமிக வுண்டாயிற்றுப்‌ பசிதாகம்‌ பொறுக்காமல்‌

---

 

மரத்தடியி லிருந்துகொண்டு மயங்கியெல்லோ

ரிருக்கையிலே

பறத்துவரக்‌ சண்டாரப்போ பட்சிவர்க்கம்‌ -

வெகுவாகவே

நீராடி வருமவைகள்‌ நிலத்தில்ரிட்ச பிலத்தினின்‌று

தாராளமாய்‌ வருவதினால்‌ தாமுமந்தப்‌

பிலத்தில்சென்றால்‌

---

 

தாகசாந்தி யாகுமென்று தம்மிலெண்ணி

ஜாக்கிரதையாய்‌

ஊகமுடன்‌ பிலத்துவாரத்தில்‌ ஒன்றுசேர்ந்து

சென்றனர்கள்‌

இருள்மூடி யிருக்குமதில்‌ எல்லோரும்‌ போகையிலே

இருள்நீங்கி யொளிகாண எத்தனையோ நேர்த்தியாக

 

------------------

நசுரொன்று சுண்டதம்மா நான்குபக்கம்‌ காசுகளும்‌

வகைவகையாய்க்‌ கனிகளுள்ள வனங்களுந்தா

னிருந்ததம்மா

தேஜசுள்ள தபசியைப்போல்‌ திவ்யரூப ஸ்திரீயோருவள்‌

வசிக்கக்கண்டு அவள்பாதம்‌ வணங்கிநின்‌ றவளிடத்து

அனுமான்சொல்வான்‌ யாரம்மாநீர்‌ அழகியதாம்‌ நக

ருமேது?

எனக்கதனைச்‌ சொல்லுமென்றான்‌ இஷ்டங்‌

கொண்டே சொல்வானவள்‌

---

 

 

விசுவகர்மா சிருஷ்டிசெய்து வெகுகால மிதிலவனே –

வசித்துக்கொண்டு ஹேமையுடன்‌ வாழ்ந்துவந்தான்‌

இந்திரன்வந்து

அவனைவதை  செய்துவிட்டான்‌ அதன்பிறகு

ஹேமையவள்‌

இவடந்தனி லிருந்துவந்து என்னையிங்‌

கிருக்கச்சொல்லிக்‌

.

---------------

 

சுதியடைந்தா ளதுமுதலாய்க்‌ காலந்தனைக்‌

கழித் துக்கொண்டு

அதிகபச்தி தனைக்கொண்டு அருந்தவத்தைச்‌

செய்துகொண்டு

இருக்கின்றே‌ னெனதுபெயர் என்னவெனில்‌

சுவயம்பிர்பையே

அரிதான இடமிதிலே யாரும்வர லாகாதையா

தடங்கொண்டு வந்ததொரு சங்கதியைச்‌

சொல்லுமென்று

அடுத்துநிற்கும்‌ அநுமாரை அவள் கேட்க

அனுமார் சொல்வார்‌

---------------

தொடரும்

 


No comments: