Sunday, November 9, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 364

 

  

நேற்றைய தொடர்ச்சி..............


பிறகு ஹனுமன் ஸ்வயம்ப்ரபையிடம் “சுக்ரீவன் எங்களுக்குச் சீதையைத் தேட ஒரு மாதகாலம் காலக் கேடு நிர்ணயித்துள்ளார். இந்தக் காலமும் கடந்து விட்டது. அதனால் நாங்கள் செய்வதறியாமல் தவிக்கிறோம். நீங்கள் எதாவது வழி காட்டமுடியுமா?” என்று கேட்டான்.

 

“இந்தக் குகையிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினம். ஆனால் என் தவத்தின் பலத்தால்  உங்களுக்கு உதவி செய்ய முடியும். இந்த இடத்திலிருந்து கண்களைத் திறந்து கொண்டு வெளியே செல்ல முடியாது. அதனால் நீங்கள் யாவரும் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்ளவேண்டும்.”என்றாள்.  அதன்பிறகு அந்த வானரங்கள் தங்கள் கண்களை நன்கு மூடிக் கொண்டனர். அவர்கள் அக்குகையிலிருந்து வெளியேறும் நிலையை உணர்ந்தனர். இறுதியில் கண்களைத் திறந்தவுடன்  குகையின் வெளியிலிருக்கும் செடிகள் பூத்துக் குலுங்குவதைக் கண்டனர். வசந்த காலம் வந்துவிட்டதை உணர்ந்தனர்.

 

 

இங்கு உரையாசிரியர்கள் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். அதாவது சுயம்ப்ரபை வானரர்களை குகையின் தென் பகுதியில் கொண்டு விட்டாள் என்று சொல்கின்றனர். காரணம் அவர்களை குகையின் வடக்கு பகுதியில் கொண்டு விட்டால்  அவர்களுக்கு கிஷ்கிந்தா திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. அங்கு சென்றால் சுக்ரீவன் கையால் அவர்கள் கொlல்லப்படுவர். சுயம்ப்ரபை எல்லாம் அறிந்தவள். சீதையை இராவணன் தான் கவர்ந்து சென்றான் என்று அவள் தெரிந்து கொண்டாள். இராவணன் இருக்குமிடம்  செல்ல வேண்டுமென்றால் வானர வீரர்கள் குகையின் தெற்குப் பக்கம் சென்றால்தான் அவர்கள் இராவணன் இருக்குமிடத்தை எளிதில் அடைய முடியும்.

 

 

இங்கு ஒரு கேள்வி எழலாம். வால்மீகி ஏன் சுயம்ப்ரபை யின் பகுதியை இங்கு அறிமுகப் படுத்துகிறார்? கதையின் போக்கிற்கே தடையாக இருப்பது போல உள்ளதே என்று நினைக்கலாம்.

 

சுயம்பிரபாவின் அத்தியாயம் பொதுவாக ஒரு உண்மைக் காட்சியாகக் கருதப்படுகிறது, இது ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக இந்தப் பகுதி அறிமுகப்படுத்தப் பட்டிருக்கலாம் என உரையாசிரியர்கள் கருதிகின்றனர்.

 

இது பிரபலமான வேத வாசகமான

 अ-सतो मा सत-गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा मा अ-मृतं गमय –

 

இந்த மந்திரம் மனிதன் இறைவனிடம் செய்யும் ஒரு ஆழமான வேண்டுகோள்.

அது பொய்யான வாழ்க்கையிலிருந்து உண்மையை நோக்கி,

அறியாமையிலிருந்து ஞான ஒளியை நோக்கி,

மரணத்திலிருந்து ஆன்மீக விடுதலைக்கு அழைத்துச் செல்லுமாறு பிரார்த்திக்கிறது.

இது மனிதனின் மூன்று நிலைகள்

அவித்யை ஞானம்,

மாயை சத்யம்,

மரணம் அமரத்துவம்

என்பவற்றின் பயணத்தை சுருக்கமாகக் கூறும்.

 

 

இங்கே பணியில் இருந்த குரங்குகள் ஒரு கருந்துளைக்குள் நுழைந்து, ஒரு உண்மையற்ற உலகத்தைக் கண்டன, மேலும் பசி-மரணங்களின் விளிம்பில் உள்ளன, மேலும் அவை மூன்றிலிருந்தும் விடுதலையை விரும்புகின்றன, அதாவது, இருள், உண்மையற்ற தன்மை மற்றும் மரணம். பின்னர் ஒரு உண்மையான ஸ்யம்பிரபா, தனது சொந்த சுய ஒளியுடன் தோன்றி, அவர்களுக்கு உண்மையான உணவைக் கொடுத்து, அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றி, 'குழியின்' இருளிலிருந்து அல்ல, 'அவர்களின்' இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் சென்றாள் என்பதே இந்தப் பகுதியின் உண்மையான பொருளாகக் கருதப்படுகிறது..

 

தொடரும்

 


No comments: