வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 359
நேற்றைய தொடர்ச்சி...................
இவ்வண்ணம் தன் உயிர்க்கு
இறுதி தேடப்புகுந்த அண்ணனை ‘உடன் பிறந்தே கொல்லும் வியாதிக்கு நிகரெனக் கருதி, சுக்ரீவன் தனக்குத் தக்க
துணை சிக்குமட்டும் பக்குவமாகப் பதுங்கி
யிருந்தான். சுக்ரீவனும் சாமானியன் அன்று, உத்தம குணங்களும், உயர்க்த நடையும் உள்ளவன், அரச தருமம் அனைத்தும்
உணர்ந்தவன்”. தனது அரசுக்கு பழுது சேராதபடி குடிகளைப் பெருக்கி அவர்களுக்குத்
தன்னிடம் பூரண நம்பிக்கை யுண்டா கத்தக்க வழிகளை மேற்கொண்டு வந்தான். பால்
தொட்டுப் பால் கறப்பதுபோலத் தன் பிரஜைகளிடம் அன்புகாட்டி அன்பு பெற்று
வந்தான். இதனால் அவனிடமிருந்த சேனைகள்
எழுபத்திரண்டு வெள்ளமும் அவன் மேற் பிரியங்கொண்டு அவன் சொற்படி நடச்சு நேர்சந்தது, நிற்க,
கவலைக் கடலைசக்
கடக்கும்பொருட்டு, கண்ணியமானதோர் புணையா கிற
துணையை நாடித் திரியும் சுக்ரீவன் முன், இணையேற்றமிலாசக் குணநிதியாகிய
ஸ்ரீராமபிரான் தோன்றினன்,
மெய்யன்பர்க்கு
இடர் நேர்ந்தபோது, உடுக்கை யிழந்தவன் கைபோன்று
உதவ எங்கும் நிறைந்த ஐயன் எதிர்ப்படாமல் இருப்பனோ! “உடுத்த பெருந்திசை யனைத்தும் ஒலி கொள்ள உறுதுயரால், அடுத்த பெருந்தனி மூலத்தரும்
பரமே! பரமே!| என்றெடுத்து’ கரிராஜனொருவன் அழைத்தபோது, அபயாஸ்தத்தை அவன்மீது
வைத்து “என் அப்பா! இப்படிச்
கூவுகின்றாய்! நான் தூரத்தில் இருப்பதாக நினைத்துவிட்டாயோ! தற்போதமற்ற
அன்பர்களிடமே சதா குடிகொண்டிருப்பவன் யான் எனபதை மறந்தனைபோலும்; மார்ச் சால நியாயத்தால்
வழிபடுவோரையும், பெற்றதாயினும் பற்று மேற்கொண்டு, இரக்ஷிப்பவனன்றோ!?? என்றருளிய பரமபுருஷன், நமது சுக்ரீவன்
சஞ்சலத்தைத் தீயிலிட்ட பஞ்சுபோலாக்க ஸ்ரீராமபிரானாகத் தோன்றினான்,
பண்டிதோத்தமரான மாருதியால்
சுக்ரீவன் ஸ்ரீராமபிரானுடைய குணாதிசயங்களை நன்கறிந்து, பிரியா நட்பைப்
பிரியமாய்ப்பெற்று, பகைவனை வென்று சுகக்கடலி
லாழ்ந்தான், பிறகு..சுக்கிரீவன்
தனக்கு மந்திரியாக மாருதியையும்,
பகைவரைத் தடுக்க
வல்லதும், நட்பினை ஆதரிக்க
வல்லதுமாய், வற்றாத நீரையும், வெளிப் பிரதேசத்தையும், செழுமைவாய்ந்த பெருத்த
மலைகளையும், அடர்ந்த வனங்களையும்
கொண்ட கிஷ்கிந்தையை நாடாகவும் கொண்டு, ஊக்கமும், உற்சாகமும்
உள்ள சேனா வீரர்களையும், ஐக்யமும் அன்பும் தழைத்த
குடிமக்களையும் துணையாகப்பெற்று,
செய்தொழிலில்
அசட்டையா யிருத்தல், அளவறியாது செய்தல், பொருந்தாதவற்றை
மேற்கொள்ளல் முதலிய விலக்குகளை யனுசரித்து, காருண்யத்துடன் நடந்து வந்தபடியால், அவனுடய கட்டளையை அவனது குடி
ஜனங்கள் ‘இராணுவக்கட்டளை’ போல் தழுவி, சிறிதும் வழாது கீழ்ப்படிந்து
வர்தனர். அக்கட்டளை உலகுள்ளளவும் நின்று நிலவ ‘சுக்ரீவ ஆக்ஞை’ என்று வழங்கி வருகிறது, இத்தகைய கட்டளை, ஒற்றுமையோடு கூடிய கட்டுப்பாட்டைப்
பலப்படுத்துகின்றது. இதற்குத் தலைவனுக்கும் பிறர்க்கும் இருக்கவேண்டிய பரஸ்பரோக்தமான
அன்புதான் காரணம், உயிர் நிலையே அன்பின்
வழியதாதலின், அந்த அன்பு எங்கு வளர்ந்து
வருகிறதோ அங்கு சித்திக்கா த விவகாரம் ஒன்றுமே யில்லை,
ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திலும்
இத்தகைய அன்பானது தோஷ ராகிதமாகப் பரவி, பெரியோர் கட்டளைக்குச்
சிறியோர் கீழ்ப்படிந்து நடத்துவரின் ஒற்றுமை பலத்து, சதந்திரத்வம் தானே உண்டாகிவிடும், குடும்பத்திலுள்ள பெரியோர், இந்த நோக்கத்தை யுட்கொண்டு, தம்மைப் பின்பற்றி
யுள்ளவர்களை வேண்டிய உபாங்கங்களுடன் சீர்திருத்தி வந்தால் எல்லா நன்மையும்
தன்னிடையே கைகூடும்.
இது ம. இராஜகோபால பிள்ளை
என்பவர் 1923 ல் டிசம்பர் மாத ஆனந்த போதினில் என்ற இதழில் எழுதிய
கட்டுரையாகும்
தொடரும்
No comments:
Post a Comment