Monday, June 8, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 120

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் சுக்ரீவனிடம் சொல்வதின் தொடர்ச்சி.  

 

आगें कह मृदु बचन बनाई। पाछें अनहित मन कुटिलाई॥

जाकरिचत अहि गति सम भाई। अस कुमित्र परिहरेहिं भलाई॥4

परोक्षे कार्यहन्तारं प्रत्यक्षे प्रियवादिनम् ।

वर्जयेत् तादृशं मित्रं विषकुम्भं पयोमुखम् ॥

 

“எவன் நேரில் இனிக்க இனிக்க சிரித்துப் பேசிவிட்டு முதுகுக்குப் பின்னால் தீமை செய்கிறானோ, எவன் மனதில் கபடம் உடையவனாய் இருக்கிறானோ, அப்படிப்பட்டவனுடைய மனமானது பாம்பின் நடையைப் போல கோணல் மானலானது ஆகும் . எனவே சகோதரா! அப்படிப்பட்டவருடைய நட்பை விட்டு விலகுவதே நமக்கு நன்மை பயக்கும். எவன் நமக்கு முன் இனிக்கப் பேசிவிட்டு பின்னால்  கெடுதல் நினைக்கிறானோ அவன் ஒரு விஷம் நிறைந்த குடத்தைப் போல எது மேற்புறம் பாலாகத் தெரிகிறதோ அத்தகைய நண்பனை விக்கி வைக்கவேண்டும்.

 

 

முகமொடு இனிமை மொழியினும்  

உள்ளினில் தீங்கு மறைந்திடும்! 

விஷக் குடம் பால் முகம் போல  

அத்தகைய நட்பு அகற்றிடல் நன்று.

 

* सेवक सठ नृप कृपन कुनारी। कपटी मित्र सूल सम चारी॥

 

முட்டாளான வேலைக்காரன், கருமியான அரசன், நடத்தை கெட்ட பெண்மணி, கபடம் நிறைந்த நண்பன், ஆகிய இந்நால்வரும் சூலத்தைப் போல வேதனை தரக்கூடியவர்கள்.

 

இதே கருத்து பிரச்தாவ் ரத்னாகர் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

 

अविधेया भृत्यजना: शठानि

मित्राण्यदयायक: स्वामी। अविनयवती भार्या मस्तकशूलानि चत्वारि॥' (

 

சாணக்ய நீதியிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது

 

दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः ।

ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥5ll

 

தீய மனைவி, தவறான தோழன், கீழ்ப்படியாத வேலைக்காரன் மற்றும் பாம்புடன் தங்கி இருப்பது மரணத்திற்குச் சமம்..இப்படி எல்லா நூல்களிலும் இந்தக் கருத்து வலியுறுத்தப் படுவதால், இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

 

सखा सोच त्यागहु बल मोरें। सब बिधि घटब काज मैं तोरें॥5

 

“எனவே தோழனே! என் வலிமையின் மீது நம்பிக்கை வைத்து உன் கவலையை விட்டு விடு. நான் எல்லாவிதத்திலும் உனக்கு உதவியாக இருப்பேன்” என்றான் இராமன்.

 

தொடரும்


Friday, June 5, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 120

 

நேற்றைய தொடர்ச்சி

 

தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி அவனை நல்வழிக்கு அழைத்து வருவது, நண்பனின் குறைகளை மிகப்படுத்தாமால் நிறைகளை மட்டும் வெளியே சொல்வது நண்பனுக்கு நூறு சதவீத உதவி செய்வது நல்ல நண்பனின் இலக்கணமாகும்.

  

இதையே பர்த்ருஹரி தன்னுடைய நீதி சதகம் என்னும் நூலில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

 

पापान्निवारयति योजयते हिताय

गुह्यं च गूहति गुणान्प्रकटीकरोति।

आपद्गतं च न जहाति ददाति काले

सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः॥७३॥

 

Saints describe these as the attributes of a true friend:

A true friend prevents his friend from committing sins, and induces him to act in good interest, conceals the secrets of a friend which ought to be hidden, projecting only his good qualities and does not forsake his friend in adversities, but gives timely assistance.

 

இங்கு சீதை அனுசூயையைப் பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம். அனுசூயை சீதையிடம் சொல்கிறாள்

 

धीरज धर्म मित्र अरु नारी। आपद काल परिखिअहिं चारी।।

 

தைரியம், தர்மம், நண்பன். மனைவி இவர்களின் உண்மையான குணம் ஆபத்து/ மற்றும் கஷ்ட காலத்தில் தான் தெரியும். மிகக் கஷ்ட காலத்தில் நல்ல நிலையில் உள்ள நண்பன் சிரமமான நிலையில் இருக்கும் நண்பனுக்கு கை கொடுக்க வேண்டும். அதுபோல நல்ல மனைவி எப்போதும் கணவனுக்குத் துணை நிற்கவேண்டும்

 

தொடரும்

 


Thursday, June 4, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 119

 

நேற்றைய தொடர்ச்சி

 

நட்பைப்  பற்றியும் ஒரு நல்ல நண்பன் யார் என்பது பற்றியும் இதுவரை விரிவாகப் பார்த்தோம்.

 

கிஷ்கிந்தா காண்டம் எட்டாவது சர்கத்தில் சுக்ரீவன் இராமனிடம் சொல்கிறான்.

 

रजतम् वा सुवर्णम् वा शुभानि आभरणानि च |

अविभक्तानि साधूनाम् अवगच्छन्ति साधवः || ४-८-७

आढ्यो वा अपि दरिद्रो वा दुःखितः सुखितोऽपि वा |

निर्दोषः च सदोषः च वयस्यः परमा गतिः

धन त्यागः सुख त्यागो देश त्यागोऽपि वा अनघः |

वयस्यार्थे प्रवर्तन्ते स्नेहम् दृष्ट्वा तथा विधम् || ४-८-९

 

“வெள்ளியோ}, தங்கமோ, சுபமான ஆபரணங்களோ, அவற்றை நண்பர்கள்   தங்களுக்குள் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். செல்வமுள்ளவனோ, ஏழையோ, துக்கமடைந்தவனோ, சுகித்திருப்பவனோ, தோஷமற்றவனோ {குற்றமற்றவனோ}, தோஷமுள்ளவனோ ஒரு நண்பனே மற்றொரு நண்பனுக்கு உற்ற துணை.  இராகவா! அந்தவித நட்பைக் கண்டால், அவன்  பொருட்டு, செல்வத்தைக் கைவிடுவதும், சுகத்தைக் கைவிடுவதும், தேசத்தை {இடத்தைக்} கைவிடுவதுங்கூட செய்யத்தக்கதே" இந்தக் கடைசி வாக்கியம் துளசிதாசரின் बल अनुमान सदा हित कर्ई என்பதற்கான பொருளாகும்.  கஷ்ட காலத்தில் தான் நண்பனின் உண்மையான குணம் தெரியும் बिपति कालकर सत गुन नेहा என்று சொல்கிறார் துளசிதாசர்.

 

कुपथ निवारि सुपंथ चलावा। गुन प्रगटै अवगुनन्हि दुरावा

* देत लेत मन संक धरई। बल अनुमान सदा हित करई॥

बिपति काल कर सतगुन नेहा। श्रुति कह संत मित्र गुन एहा॥3

 

ஆக தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி அவனை நல்வழிக்கு அழைத்து வருவது, நண்பனின் குறைகளை மிகப்படுத்தாமால் நிறைகளை மட்டும் வெளியே சொல்வது நண்பனுக்கு நூறு சதவீத உதவி செய்வது நல்ல நண்பனின் இலக்கணமாகும்.

 

தொடரும்


Wednesday, June 3, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 118 



நேற்றைய தொடர்ச்சி

 

 

துளசிதாசர் நட்பு பற்றி மேலும் சொல்கிறார்.



* देत लेत मन संक न धरई। बल अनुमान सदा हित करई॥

बिपति काल कर सतगुन नेहा। श्रुति कह संत मित्र गुन एहा॥3॥

 


“நண்பர்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்யும்பொழுது திரும்பி வருமா வராதா என்ற ஐயம் மனதில் கொள்ளக்கூடாது. தன்னுடையே சக்திக்கு ஏற்ப எப்பொழுதும் நண்பனுக்கு உதவி செய்து கொண்டே இருக்கவேண்டும் குறிப்பாக  நண்பனுக்கு இன்னல்கள் ஏற்படும்பொழுது நூறு மடங்கு அன்பைக் காட்ட வேண்டும். வேதங்களும், நீதி நூல்களும் இவைதான் உண்மையான நண்பனுக்கு இலக்கணங்கள் என்று கூறுகின்றன”

 

 

இங்கு துளசிதாசர் देत लेत என்று கொடுப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார். முதலில் கொடு அப்புறம் பெற்றுக் கொள் என்று சொல்கிறார்.  அடுத்து बल अनुमान அதாவது சக்தியின் மதிப்பீடு .அதவாது சக்திக்குத் தகுந்து கொடுத்தல்.அதாவது  இந்த பலம் அல்லது வலிமை என்றால் என்ன?

 

மகாபாரதத்தில் உத்யோகபர்வத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது


बलं पञ्चविधं नित्यं पुरुषाणां निबोध मे ।

यत्तु बाहुबलं नाम कनिष्ठं बलमुच्यते ।।48।।

अमात्यलाभो भद्रं ते द्वितीयं बलमुच्यते ।

धनलाभस्तृतीयं तु बलमाहुर्जिगीषवः ।।49।।

यत्त्वस्य सहजं राजन्पितृपैतामहं बलम् ।

अभिजातबलं नाम तच्चतुर्थं बलं स्मृतम् ।।50।।

येन त्वेतानि सर्वाणि सङ्गृहीतानि भारत ।

यद्बलानां बलं श्रेष्ठं तत्प्रज्ञाबलमुच्यते ।।51।।

महाभारत उद्योगपर्व – 37/48

 


 

அதாவது விதுரர் தருமரிடம் ஐந்துவிதமான பலம் அல்லது வலிமை பற்றிப் பேசுகிறார். அதில் “பாஹு பலம்” (உடல் வலிமை) மிகக் குறைந்த வலிமையாகக் கருதப்படுகிறது.

 

இரண்டாவது வலிமை — நல்ல அமைச்சர்களைப் பெறுதல்


மூன்றாவது வலிமை — செல்வம், பொருள், பணம்.

 

நான்காவது வலிமை — பிறப்பால் கிடைக்கும் வலிமை, அதாவது பித்ரு–பைதாமஹ பலம் (குலம், வம்சம், உயர்ந்த பிறப்பு). இது “அபிஜாத பலம்” எனப்படுகிறது.

 


ஐந்தாவது இந்த எல்லா வலிமைகளையும் ஒருங்கிணைத்து நடத்த வல்லது,

அனைத்திலும் சிறந்த வலிமை — ப்ரஜ்ஞா பலம் (அறிவு, புத்திசாலித்தனம், யோசனை).

 



தொடரும்

 

Tuesday, June 2, 2026

 


 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 117

 


நேற்றைய தொடர்ச்சி

 


கையை விட்டுப் போன அயோத்தி, வனவாசம், சீதையின் இழப்பு இப்படி மலை போன்ற துன்பங்களை உடைய இராமன் அவைகளை மறந்து சுக்ரீவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். 

 

இராமன் தனது துன்பங்களை மறந்து சுக்ரீவனின் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் என்கிறார் துளசிதாசர்.

  


=====

सखा सोच त्यागहु बल मोरें।

सब बिधि घटब काज मैं तोरें॥

=====

 

जिन्ह कें असि मति सहज न आई। ते सठ कत हठि करत मिताई॥

कुपथ निवारि सुपंथ चलावा। गुन प्रगटै अवगुनन्हि दुरावा॥2

 


“எவனிடம் இயற்கையிலேயே இப்படிப்பட்ட குணம் இல்லையோ அப்படிப்பட்ட மூடன் எதற்காக ஒருவனிடம் வலிந்து  நட்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் ? தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி நல்ல வழியில் அழைத்துச் செல்வதுதான் நண்பனின் கடமை. மேலும் நண்பனின் குறைகளை மிகைப்படுத்தாமல்  அவனது குணங்களை வெளிப்படுத்துவது உண்மையான நண்பனுக்கு இலக்கணமாகும்./

 


பர்த்ருஹரி தனது சுபாஷிதத்தில் நட்பின் இலக்கணங்களைக் கூறுகிறார்

 


==========

पापान्निवारयति योजयते हिताय
गुह्यं निगूहति गुणान् प्रकटीकरोति।
आपद्गतं च न जहाति ददाति काले
सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः॥

===============


"தீய செயல்களைத் தடுக்கின்றான், நன்மைக்காக உந்துகின்றான், இரகசியங்களை பாதுகாக்கின்றான், நல்ல பண்புகளைப் புகழுகின்றான், சிக்கலில் விட்டுவிடாமல் துணை நிற்கின்றான், தேவையான நேரத்தில் உதவுகின்றான் — இதுவே ஒரு உண்மையான நண்பனின் லட்சணம் எனச் சான்றோர் கூறுகின்றனர்."


தீயதைத் தடுத்து நலன்கொடு சொல்வான்

தீமை செய் போது திருத்திடும் சொல்வான்

உண்மையை உள்ளே உறுதியாக் காப்பான்

உலகம் அறிய நன்மையைப் புகழ்வான்!


---------------------

 

அவனுக்கே ஆபத்து வந்திடும் நேரம்

அழகாய் நம் தோளில் அழுத்தமாய் சேரும்

நேரத்தில் நம்மை நினைத்தே உதவும்

நேசத்தின் தீபம் நெஞ்சத்தில் எரியும்!


-----------------------

 

இவனே நண்பன்! இதுவே நட்பு!

இறைவனின் சாயல் இதுவே சத்தியம்!

பாசத்தின் பாதை பயணிக்கும் போது

பாரதி சொல்வது — இதுவே நெறி!



 

தொடரும்