Monday, December 8, 2025

 




வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

ஹனுமனின் அறிவுரை

பதிவு எண் 380

ஹனுமான் அங்கதனிடம் ஒரு அரசகுமரனின் புத்திக் கூர்மைக்கு வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுவதைப் பார்த்தோம். அந்தப் பதிவின் தொடர்ச்சி........................


இந்த அடிப்படையில் தான் ஹனுமன் அங்கதனைப் பார்த்துச் சொல்வது


1. கேட்கும் ஆர்வம்: கேட்கும்போது இது சரியா தவறா என்று தீர்மானித்துக் கட்டுப்பாட்டான புத்தியோடு முடிவெடுப்பது.


2. நன்றாகாக் கேட்கும் தன்மை.: என்ன சொல்லப்படுகிறதோ அதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.


3. கேட்டதை கிரகிக்கும் ஆற்றல்: அதன் அடிப்படைப் பொருளை முழுவதுமாகப் புரிந்து கொள்வது


4. கிரகித்த பிறகு ஏற்றுக் கொள்ளும் தன்மை: நல்ல ஞாபக சக்தியுடன் முன் கூறிய விஷயத்திற்கு ஆதரவான காரணத்தைக் கூறும் ஆற்றல்.


5. விவாதித்தல்:சில சமயங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் ஆற்றல் இருத்தல் வேண்டும்


6. கேட்கும் விஷயத்தின் தன்மை பொருளை தெரிந்து கொள்ளுதல்.


7. சொல்பவனின் நோக்கம் அறியும் ஆற்றல்


8. தத்வ ஞானத்தைப் பெறுதல்; தேகபலம், அறிவு, இயல்பான குணம், இந்திரிய பலம். இத்தத்துவங்களை பிரித்தறியும் ஞானம்.இவைகள் பெற்றவன் உண்மையான ஞானி. அங்கதா! உனக்கு அரசியலுக்கு உதவும் நான்கு திறமைகளை கூறுகிறேன். அவை இணக்கம் (சாம) பரிசுகளால் ஊக்கமளித்தல் (தான) பகைவர்களிடையே கலக்கம் (விகற்பம்) ஏற்படுத்துதல் (பேதம்) வன்முறை, தண்டனை அளித்தல் (தண்டம்) இதற்கும் அப்பாற்பட்ட 14 சிறந்த குணங்கள் உன்னில் நிறைவு படவேண்டும். அது உயர்ந்த சான்றோர்களில் இயல்பாகும்.


அவைகள்:


· காலதேசத்தின் ஞானம்


· உறுதி, சலியாத உழைப்பு


· துன்பங்கள் தாங்கும் வல்லமை


· எல்லா விஷயங்களின் ஞானம்


· புத்திசாலித்தனம்


· உற்சாகம்


· கொள்கைகளையோ, கருத்துகளையோ ரகசியமாக வைத்துக் கொள்ளும் ஆற்றல்


· வீரம்


· பகைவனுடைய பலத்தை தன் பலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் தன்மை


· பரஸ்பர பாராட்டு


· அடைக்கலம் அடைந்தவரிடம் கருணை காட்டல்


· நிலையான புத்தி


· கம்பீரம்


· நன்றி உணர்ச்சி


தொடரும்

Saturday, December 6, 2025

 




காலை வணக்கம்

 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஹனுமனின் அறிவுரை



பதிவு எண் 379


 

ஹனுமான் அங்கதனிடம் ஒரு அரசகுமரனின் புத்திக் கூர்மைக்கு வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுவதைப் பார்த்தோம். அந்தப் பதிவின் தொடர்ச்சி........................



 

சதுர் பலம் – நான்கு வலிமைகள்

 

| # | வலிமை | விளக்கம் |

| 1 | बलम् (Physical Strength) | உடல் வலிமை –

| 2 | ज्ञानबलम् (Knowledge Power) | ஞான வலிமை – ஶாஸ்திர அறிவு |


| 3 | धैर्यबलम् (Courage Power) | துணிச்சல் – ஆபத்திலும் அஞ்சாத மனம் |


| 4 | त्यागबलम् (Sacrifice Power) | தியாகம் – சுயநலமின்றி சேவை செய்வது |


 

 

சதுர்தச குணங்கள் – 14 சிறப்புக் குணங்கள்

 

 


 


| # | குணம் | விளக்கம் |


| 1 | विनयः (Vinayaḥ) | பணிவு |


| 2 | धैर्यम् (Dhairyam) | துணிச்சல் |


| 3 | सत्यवाक्यता (Satyavākyatā) | உண்மை பேசும் தன்மை |


| 4 | शौर्यम् (Shauryam) | வீரத்தன்மை |


| 5 | दक्षता (Dakṣatā) | திறமை |


| 6 | मौक्तिकता (Mauktikatā) | நுட்பம், நாகரிகம் |


| 7 | स्मृतिः (Smṛtiḥ) | ஞாபக சக்தி |


| 8 | प्रज्ञा (Prajñā) | அறிவு |


| 9 | भक्तिः (Bhaktiḥ) | பக்தி |


| 10 | त्यागः (Tyāgaḥ) | தியாகம் |


| 11 | साहसम् (Sāhasam) | ஆபத்திலும் செயலாற்றும் திறன் |

| 12 | कान्तिः (Kāntiḥ) | ஒளி, காந்தம் |


| 13 | कीर्तिः (Kīrtiḥ) | புகழ் |


| 14 | स्नेहः (Snehaḥ) | அன்பு, பரிவு |


 

தொடரும்.........

 

Friday, December 5, 2025

 



காலை வணக்கம்

 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஹனுமனின் அறிவுரை

 

பதிவு எண் 378

 

நேற்றைய தொடர்ச்சி................



 

ஹனுமான் அங்கதனிடம் ஒரு அரசகுமரனின் புத்திக் கூர்மைக்கு வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுவதைப் பார்த்தோம். அந்தப் பதிவின் தொடர்ச்சி........................

 



பதினான்கு குணங்கள் பொருந்தி இருக்கவேண்டும் அவையாவன

 

देशा कालजन्नत दार्ध्यं समस्त दुःख सहिष्णुता | सर्व विज्ञानंता दाक्ष्याम उर्जाः संवृत मंत्र | अविसंविदिता शौर्यं शक्तिजंत्वं कृतजंता | शरणा आगत वात्सल्यं अमरशत्वं अचलन



அதாவது,


1. தேசகாலஜ்ஞம் - இடம், நேரம் ஆகியவற்றை அறிதல், 2. தார்டியம் - கடுமை / மன உறுதி,


3. ஸர்வகிலேசஸஹிஷ்ணுதம் - தொல்லைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுதல்,


4. சர்வவிஜ்ஞானிதம் - அனைத்தையும் அறிதல் / எல்லாம் உணர்தல்,


5. தாக்ஷ்யம் - நிபுணத்துவம் / வல்லமை,

6. ஊர்ஜம் - விடாமுயற்சி,


7. ஸம்விருத மந்திரதம் - ஆலோசனைகளை வெளியிடாமல் மறைத்தல்


8. அவிஸம்விதிதம் - தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்தல் / அபத்தமாகப் பேசாதிருத்தல்,


9. ஷௌர்யம் - துணிவு,


10. சக்திஜ்ஞத்வம் - பிறரின் வலிமையை முழுமையாக அறிதல்,


11. கிருதஜ்ஞதம் - நன்றி மறவாமை,


12. சரணாகதவத்ஸல்யம் - அண்டியோரை அன்புடன் ஆதரித்தல்,


13. அமர்ஷத்வம் - தேவையான இடங்களில் கோபத்தை வெளிப்படுத்தல்,


14. அசாலனம் - நடுக்கமின்மை / கலக்கமின்மை / கலவரமின்மை என்பன அந்த குணங்களாகும்” என்றிருக்கிறது.


 

அஷ்டாங்க புத்தி – அறிவின் 8 கூறுகள்

 


| 1 | श्रुतम् (Shrutam) | கேள்வி மூலம் பெற்ற அறிவு (ஶாஸ்திரங்கள், உபதேசம்) |


| 2 | चिन्तनम् (Chintanam) | ஆழ்ந்த சிந்தனை, விவேகம் |


| 3 | धारणम् (Dharanam) | மனதில் நிலைத்துவைக்கும் திறன் |


| 4 | प्रयोगः (Prayogah) | அறிவைப் பயன்படுத்தும் திறன் |


| 5 | युक्तिः (Yuktiḥ) | நுட்பமான யோசனை, தந்திரம் |


| 6 | विवेकः (Vivekah) | நன்மை–தீமை வேறுபடுத்தும் அறிவு |


| 7 | स्मरणम् (Smaraṇam) | நினைவாற்றல், ஞாபக சக்தி |


| 8 | ज्ञानम् (Jñānam) | பரிபூரண அறிவு, ஞானம் |


visit my blog seshadrinadhan.blogspot.com

 

தொடரும்..............

 

Thursday, December 4, 2025

 




 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஹனுமனின் அறிவுரை

 

பதிவு எண் 377

 

 


தாரன் சொன்னவற்றைக் கேட்டு அங்கதன் மௌனமாக இருந்தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை ஹனுமன் உணர்ந்தான், இனியும் பேசாமல் இருந்தால் வந்த காரியம் கெட்டுவிடும் என்பதால் அங்கதனை நோக்கிப் பேசத்தொடங்கினான்.



===========================================

बुद्ध्या हि अष्ट अंगया युक्तम् चतुर् बल समन्वितम् |

चतुर् दश गुणम् मेने हनुमान् वालिनः सुतम् || ४५४२

===========================================

 

 

 

“அன்புள்ள அரசகுமாரனே! உன்னிடம் புத்தி கூர்மைக்கு வேண்டிய எட்டு தன்மைகள் (குணங்கள்) நிறைந்து இருக்கும்  என்று நான் கருதினேன். (“ஒரு சராசரி மனிதனின் நுண்ணறியுந்திறன் எட்டு அங்கங்கள்(அறிவின் எட்டுக் கூறுகள்), நான்கு வகை வலிமைகள்,  பதினான்கு சிறப்புக் குணங்கள்  கூடியது என்று {பின்வருமாறு} சொல்லப்படுகிறது,  -शुश्रूषा शवाणां चैव ग्रहाणां धारणं तथा | उहा अपोहा अर्थ विज्ञानं तत्त्व ज्ञानं च धी गुणःஅதாவது,

 


1. சுஷ்ரூஷம் - கூர்மையாக கவனித்தல்,


2.  சிரவணம் - கருத்தில் கொள்ளுதல்,


3. கிரஹணம் - ஈர்த்து வைத்துக் கொள்ளுதல் {நினைவில் நிறுத்தல்},


4. தாரணம் - நினைவில் மீட்டல்,


5. ஊஹம் - ஊகித்தறிதல்,


6. அபோஹம் - நுட்பமாகப் பகுத்தறிதல்,


7. அர்த்தவிஜ்ஞானம் - அர்த்தங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளுதல்,


8. தத்துவஞானம் - {உண்மையைப் புரிந்து கொள்ளுதல்} என்பன அந்த குணங்களாகும்.

 

----------------------------

 

நால்வகை பலங்கள் என்பன



1. மனோபலம் - மனவலிமை,


2. பாஹுபலம் - தோள்வலிமை,


3. உபாய பலம் - உத்தி வலிமை,


4. பந்து பலம் - உறவினர் வலிமை என்று சொல்லப்படுகின்றன. मनो बल, बाहु बल, उपाय बल, बंधु बल,




visit my blog seshadrinadhan.blogspot.com




தொடரும்.

 

 




வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

ஸ்வயம்ப்ரபை பகுதி

பதிவு எண் 376


நேற்றைய தொடர்ச்சி



இனி வால்மீகியிடம் வருவோம்..



குகையின் வெளி வந்த வானரர்கள் வெகு விரைவில் காலம் கடந்து விட்டதைக் கண்டு வியந்தனர். பின்னர் பற்பல இடங்களில் சீதையைத் தேடினர். சற்று தூரத்தில் சமுத்திரக் கரையை அடைந்தனர். தாங்கள் வந்த வேலை நிறைவேறாததால் கடற்கரை மணலில் அமர்ந்தனர்.



அங்கதன் மிகவும் கவலையுடன் இருந்தான். வீரர்களிடம் “வீரர்களே! சுக்ரீவர் சொல்லி அனுப்பிய கெடு கடந்து விட்டது. மரங்களில் மலர்களும் கனிகளும் தென்படுகின்றன. வசந்த காலம் தொடங்கி விட்டது என்பதன் அறிகுறி இது. அரசர் குறிப்பிட்ட காலம் கடந்து விட்டதால் இனி திரும்பச் செல்வதில் பயனில்லை. அவர் நம்மை என்ன செய்வாரோ என்ற பயம் என் நெஞ்சை வாட்டுகிறது. நாம் வந்த காரியமும் முடியவில்லை. அதனை முடிக்காமல் திரும்பிச்செல்வதில் அர்த்தமில்லை. நாம் காலதாமதமாயும் எடுத்த காரியத்தை முடிக்காமல் போனால் நம் அரசர் நம்மைச் சும்மா விடமாட்டார்.




==========================================

आस्मिन् अतीते काले तु सुग्रीवेण कृते स्वयम् |

प्रायोपवेशनम् युक्तम् सर्वेषाम् च वन ओकसाम् || ४-५३-१३

अप्रवृत्तौ च सीतायाः पापम् एव करिष्यति |

तस्मात् क्षमम् इह अद्य एव गंतुम् प्रायोपविशनम् || ४-५३-१५

त्यक्त्वा पुत्रन् च दारान् च धनानि च गृहाणि च |

------------------------------------------------------------------------


இப்படிப்பட்ட நிலையில் திரும்பச் செல்வதை விட உயிரை விடுவதே மேல் என்று எண்ணுகிறேன் என்றான்.



இதைக் கேட்டு சில வானர வீரர்கள், ‘அங்கதன் சொல்வது உண்மைதான். உண்மையில் நம்முடைய இளவரசர் மீது அரசருக்கு அன்பில்லை. இராமருடைய கட்டளைக்கு அடிபணிந்துதான் அவருக்கு இளவரசுப் பட்டம் கட்டி இருக்கிறார். இந்த நிலையில் சீதை இருக்கும் இடத்தை அறியாமல் நாம் திரும்பிச் சென்றால் நம்மைக் கோபிப்பார்”.


===========================================

स पूर्वम् बद्ध वैरो माम् राजा दृष्ट्वा व्यतिक्रमम् || ४-५३-१८

घातयिष्यति दण्डेन तीक्ष्णेन कृत निश्चयः |

==========================================



“அங்கதன் பெரும் தண்டனைக்குள்ளாவான். இதனை இந்த சூழ்நிலையில் இராமரும் தடுக்க மாட்டார். ஏனெனில் இராமர் சீதையிடம் பெரும் அன்புடையவர். அவர் காரியமாகத்தான் சுக்ரீவ மகாராஜா நம்மை அனுப்பியுள்ளார். அதைச் சரியாக முடிக்காமல் நாம் திரும்பச் சென்றால் அவரும் கோபம் கொள்வார். எனவே நாம் இங்கேயே இருந்து விடுவோம். திரும்பிச்செல்ல வேண்டாம்” என்றனர்.



ஹனுமனுக்கு மற்ற வானரர்கள் பேசியது பிடிக்கவில்லை. இருப்பினும் மௌனமாக இருந்தான்.. அப்பொழுது தாரன் “நண்பர்களே! கவலை வேண்டாம். திரும்பச் சென்று வீண் அபவாதத்திற்கு ஆளாவதை விட இங்கேயே இருந்து விடலாம். வேண்டுமானால் நாம் அந்த ரிஷிபிலம் குகைக்குள் சென்று தங்கிக்கொள்ளலாம். அங்கு நமக்கு வேண்டிய அளவு தண்ணீரும் ஆகாரமும் இருக்கிறது. அத்துடன் அது மாயையால் உருவாக்கப்பட்டது. எனவே இராமரோ சுக்ரீவரோ நம்மை ஒன்றும் செய்ய முடியாது” என்றான்.



தொடரும்

Wednesday, December 3, 2025

 




வால்மீகியின்


கிஷ்கிந்தா காண்டம்

ஸ்வயம்ப்ரபை பகுதி

பதிவு எண் 375


நேற்றைய தொடர்ச்சி



ஸ்வயம்பிபை ஸ்கோத்திரம்‌ செய்தவுடன்‌, வணங்கியவர்களுக்கு ஆசி வழங்கிய இரகு சிரேஷ்டர்‌, தன்னிடம்‌ மிக்க பக்தியடைய ௮ந்த ஸ்வயம்பிரபையைப்‌ பார்த்து இப்போது உன்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை யாது? என்று வினவினார்‌.


सा प्राह राघवं भक्त्या भक्तिं ते भक्तवत्सल ।

यत्र कुत्रापि जाताया निश्चलां देहि मे प्रभो ॥ ७९॥

त्वद्भक्तेषु सदा सङ्गो भूयान्मे प्राकृतेषु न ।

जिह्वा मे रामरामेति भक्त्या वदतु सर्वदा ॥ ८०॥



இதைக்‌ கேட்ட ஸ்வயம்பிரபை பக்தியுடன்‌ இராமனை வணங்கி “பிரபுவே! நான் ‌ எந்த ஜென்மம்‌ எடுத்த போதிலும்‌, அழிவில்லாக பக்தி தங்களிடம "எனக்கிருக்கும்படி. வரம்‌ கொடுக்க வேண்டும்‌, பிராகருதர்களாயினும்‌, தங்களுடைய பக்தர்களின்‌ சேர்க்கை எப்போதும்‌ எனக்கிருக்க வேண்டும்‌. என்‌னுடைய நாவானது எப்போதும்‌ பக்தியுடன்‌ இராம இராம என்றே கீர்த்தனம் செப்யவேண்டும்‌



मानसं श्यामलं रूपं सीतालक्ष्मणसंयुतम् ।

धनुर्बाणधरं पीतवाससं मुकुटोज्ज्वलम् ॥ ८१॥

-----------

अङ्गदैर्नूपुरैर्मुक्ताहारैः कौस्तुभकुण्डलैः ।

भान्तं स्मरतु मे राम वरं नान्यं वृणे प्रभो ॥ ८२॥



ஓ இரகுநந்தன! ஸீதை, இலக்ஷ்மணர் இவர்களுடன்‌ கூடியதும்‌ வில்‌, பாணம்‌, இவைகளைச்‌ தரித்ததும்‌, மஞ்சள்‌ பட்டாடை யுடுத்ததும், கிரீடத்தால்‌ பிரகாச முள்ளதும்‌, தோள்வளைகளாலும்‌, தண்‌டைகளாலும்‌, மூத்தாரங்களாளும்‌, கவசங்களாலும்‌ குண்டலங்களாலும். ‌ பிரகாசிப்பதும்‌, ஸ்யாமள வர்ணமுள்ளதுமாகிய தங்களுடைய ல்வரூபமே எப்போதும்‌ என்‌ நினைவில்‌ இருக்க வேண்டும்‌, தங்களுக்கு நமஸ்காரம்‌, வேறு வரம்‌ எனக்கு வேண்டாம்‌” என்று வணங்கிக்‌ கேட்டுக்கொண்டாள்‌.



ஸ்ரீராமர்‌, “ஓ மஹாபாக்யம்‌ செப்த ஸ்வயம்ப்ரபையே! ௮வ்‌விதமே ஆகட்டும்‌, நீ பதரிகாச்சிரமம்‌ சென்று, ௮ங்கு என்னைத்‌ தியானம்‌ செய்து கொண்டிருந்து, இந்த ஸம்ஸாரக்கடலைத்‌ தாண்டி, பரமாத்மவாகிய என்னை விரைவாக அடைவாய்‌” என்றார்.



ஸ்வயம்பிரபை, அமுத ஸாரம்போன்ற இராமருடைய மொழியைசக்‌ கேட்டு ௮வவிதமே பதரிகாச்சிரமம்‌ சென்று தன்‌ மனதில்‌ இரகு நாதரையே தியானம்‌ செய்து கொண்டிருந்து பிறகு சரீரத்தை விட்டு பரமபத மடைந்தாள்‌.

visit my blog seshadrinadhan.blogspot.com





தொடரும்

Monday, December 1, 2025

 



 


வால்மீகியின்


கிஷ்கிந்தா காண்டம்

ஸ்வயம்ப்ரபை பகுதி

பதிவு எண் 374



நேற்றைய தொடர்ச்சி



ஆத்யாத்ம இராமாயணத்தில் ஸ்வயம்ப்ரபை இராமரைக் கண்டதும் உணர்ச்சி பொங்க பேசுவதின் தொடர்ச்சி.............



===========================================
कथं त्वां देव जानीयां स्तोतुं वाविषयं विभुम् ।
नमस्यामि रघुश्रेष्ठं बाणासनशरान्वितम् ।
लक्ष्मणेन सह भ्रात्रा सुग्रीवादिभिरन्वितम् ॥ ७७॥
=========================================



நான்‌ தங்கள்‌ மாயையிற்‌ கட்டுண்டவள்‌. மாயா குணங்களுக்கு வேறுபட்டவரும்‌, அக்குணங்களின்‌ ஆஸ்ரயரும், , வியாபகருமாகிய தங்களை நான்‌ எவ்விதம்‌ தெரிந்து கொள்வேன்?.. எவ்வாறு ஸ்தோத்திரம்‌ செய்வேன்‌?.



ஓ இரகு ராம! தனுசு, , பாணம்‌ இவற்றோடு கூடிய சகோதரன் இலக்ஷ்மணனுடனும், , ஸ-க்ரீவர்‌ முதலினோருடலும்‌ கூடிய தங்களை நான் நமஸ்கரிக்கிறேன் என்றாள்.



==========================================
அருள் நிறைந்த ராமா!
அழிவை நீக்கும் கருணை நிதியே!
அந்தகாரக் குகையில் சிக்கிய உயிர்கள் —
அனுதினம் உன் பாதம் நினைக்கின்றன!

============

நான் இங்கு காவல் காத்து நிற்கின்றேன்,
நரகமெனும் இருள் சூழ்ந்திட,
உன் திருவடி நினைவு தான் —
என் உயிர்க்கு ஒளி, என் உள்ளம் தாங்கும்!

===============

அருள் தருவாய்!
அழிவை நீக்குவாய்!
அனுதினம் உன் நாமம் ஓதுவோர் —
அவர்களை நீ காப்பாய்,
என்னை நீ கருணையால் அரவணைப்பாய்!

=============

ராமா!
உன் பாதம் தான் பரமபதம்,
உன் நாமம் தான் பரமமருந்து,
உன் அருள் தான் பரமசுகம் —
அதனை நான் வேண்டுகின்றேன்!
==========================================




இவ்வாறு ஸ்வயம்பிரபை ஸ்கோத்திரம்‌ செய்தவுடன்‌, வணங்கியவர்களுக்கு ஆசி வழங்கிய இரகு சிரேஷ்டர்‌, தன்னிடம்‌ மிக்க பக்தியடைய ௮ந்த ஸ்வயம்பிரபையைப்‌ பார்த்து இப்போது உன்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை யாது? என்று வினவினார்‌.



தொடரும்..........
visit my blog seshadrinadhan.blogspot.com