Sunday, October 26, 2025

 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 354

 

 

நேற்றைய தொடர்ச்சி............

 

இந்த பூமியைப் பற்றிய முழுவிவரங்களும் சொல்கிறாயே. அது உன்னால் எப்படி முடிந்தது என்று இராமன் கேட்க, சுக்ரீவன் தன் கதையைச் சொல்லி அந்த வாலியால் விரட்டப்பட்டவனுமான நான், அவ்வாறு விரட்டப்படும்போது, விதவிதமான நதிகளையும், வனங்களையும், நகரங்களையும் கண்டேன். என்று சொல்லி தொடங்குகிறான்.

 

 

அப்போது பூர்வ {கிழக்குத்} திசைக்குச் சென்று விதவிதமான மரங்களையும், குகைகளுடன் கூடிய ரம்மியமான பர்வதங்களையும், விதவிதமான சரஸ்களையும் {பொய்கைகளையும்} கண்டேன். அங்கே தாதுக்களால் சூழப்பட்ட உதய பர்வதத்தையும், நித்யம் அப்சரஸ்களின் ஆலயமாகத் திகழும் பால் போன்ற நீரைக் கொண்ட கடலையும் கண்டேன். , வாலியால் விரட்டப்பட்டு பயந்தோடிக் கொண்டிருந்த நான், மீண்டும் திரும்பியபோது, வாலி மீண்டும் வேகமாக என்னை விரட்டி வந்தார். அப்போது நான், அந்தத் திசையில் இருந்து மரங்கள் அடர்ந்த விந்திய மலைத்தொடருடன் கூடியதும், சந்தன மரங்களால் நிறைந்திருப்பதுமான  தெற்குத் திசையை நோக்கி ஓடினேன். மரங்களையும், சைலங்களையும் தாண்டி தக்ஷிணத்திலிருந்து மற்றொன்றை {தெற்கில் இருந்து மேற்கைப்} பார்த்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் வாலியால் விரட்டப்பட்டு மற்றொரு {மேற்குத்} திசைக்கு ஓடினேன்அத்தகைய நான், விதவிதமான தேசங்களையும், சிறந்த அஸ்த கிரியையும் கண்டேன். சிறப்புவாய்ந்த அஸ்த கிரியையும் அடைந்த பிறகு, வடக்கு நோக்கி ஓடினேன்.

 

{இமயம் மேரு, அதே போல உத்தர சமுத்ரம் ஆகியவற்றுக்கும் வாலியால் விரட்டப்பட்ட போது, வேறு புகலிடம் எதையும் அறியாதிருந்தேன் அப்போது, ஞானம் நிறைந்தவனான ஹனுமன் என்னிடம் {அரசே, சுக்ரீவரே}, இப்போது எனக்கு நினைவு வருகிறது. எதன்படி வாலியை{ மதங்கர் சபித்தாரோ, அதன்படி அவருடைய {மதங்கரின்} ஆசிரம மண்டலத்திற்குள் வாலி பிரவேசித்தால், அவரது தலை நூறு துண்டுகளாகச் சிதறும்எனவே, அங்கே நாம் வாசம் செய்தால் கவலையின்றி சுகமாக இருக்கலாம்” {என்றான்

 

தொடரும்

Saturday, October 25, 2025

 





வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 353

 

அப்பொழுது இராமன் சுக்ரீவனைப் பார்த்து “சுக்ரீவ! உன் செயல் எனக்குப் பெரும் ஆச்சர்யத்தைத் தருகிறது. நான்கு திக்குகளிலும் வானரர்களை அனுப்பினாய். அவ்வாறு அனுப்பும் பொழுது , ஒவ்வொரு திசையில் ஊர்களையும், மலைகளையும், ஆறுகளையும் குறிப்பிட்டாய். உலகின் புவியியலைப் பற்றி இவ்வளவு பரந்த ஞானத்தை எவ்வாறு பெற்றாய்?” என்று ஆச்சர்யத்துடன் வினவினான்.

 

 

அதற்குச் சுக்ரீவன்

 

स माम् जिघांसुः दुष्टात्मा वाली प्रव्यथित इन्द्रियः |

परिकालयते क्रोधात् धावंतम् सचिवैः सह || ४-४६-१

ततो अहम् वालिना तेन सानुबन्धः प्रधावितः |

नदीः च विविधाः पश्यन् वनानि नगराणि च || ४-४६-१२

 

அப்போது, பணிந்து வணங்கிய சுக்ரீவன், இராமனிடம் {பின்வருமாறு} சொன்னான், “சர்வத்தையும் விஸ்தாரமாகச் சொல்கிறேன். வாலி, எருமையின் ஆகிருதியை {எருமை வடிவம்} கொண்டவனும், துந்துபி என்ற பெயரைக் கொண்டவனுமான தானவனை மலய பர்வதத்தை நோக்கி விரட்டிச் சென்றபோது. அந்த மஹிஷன் மலயத்தின் குகைக்குள் பிரவேசித்தான். அவனைக் கொல்ல விரும்பிய வாலியும் அந்த மலயத்திற்குள் பிரவேசித்தார் அப்போது [அண்ணனுக்குக் கட்டுப்படுபவனான நான், அங்கே குகையின் துவாரத்தில் நிறுத்தப்பட்டேன். ஒரு வருடம் கடந்த பிறகும் வாலி வெளியே வரவில்லை.

 

பிறகு, பிலத்திலிருந்து ரத்தம் வேகமாகப் பெருகி நிறைந்தது. அப்போது, அதைக் கண்டு பேச்சிழந்து நின்ற நான், சகோதர சோகம் எனும் விஷத்தால் பீடிக்கப்பட்டேன். பிறகு, அண்ணன்  கொல்லப்பட்டது வெளிப்படையானது என்ற புத்தியை நான் அடைந்தேன். மஹிஷன் {துந்துபி / மாயாவி} வெளியே வரமுடியாதபடி முழுமையாக நாசம் செய்ய வேண்டும் என்று நினைத்த நான், பர்வதத்திற்கு ஒப்பான பாறையைக் கொண்டு பிலத்தின் துவாரத்தை அடைத்தேன் அப்போது, அவர் ஜீவித்திருப்பதில் நிராசையடைந்த நான், கிஷ்கிந்தையை அடைந்து, மஹத்தான ராஜ்ஜியத்தையும், ருமையுடன் தாரையையும் அடைந்து நண்பர்களுடன்  அங்கே வசித்திருந்தேன்.

 

பிறகு, அந்த தானவ ரிஷபனைக் கொன்று வாலி திரும்பி வந்தார். அப்போது பயத்தால் செயலற்றவனான நான், கௌரவத்துடன் ராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.( துஷ்டாத்மாவான அந்த வாலி, கலங்கிய இந்திரியங்களுடன், அமைச்சர்களுடன் ஓடிச் சென்றுகொண்டிருந்த என்னைக் கொல்ல விரும்பி குரோதத்துடன் விரட்டி வந்தார்.( அத்தகையவனும், அந்த வாலியால் விரட்டப்பட்டவனுமான நான், அவ்வாறு விரட்டப்படும்போது, விதவிதமான நதிகளையும், வனங்களையும், நகரங்களையும் கண்டேன்.

 

தொடரும்


Friday, October 24, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 352

 

நேற்றைய தொடர்ச்சி....................

 

இராமசெயத் திருப்புகழ் பாடலின் பொருள்

 

மேற்கே சில தூதுவர் தேடவும் , கிழக்கே சில தூதர் தேடவும் , வடக்கே சில தூதுவர் தேடவும் போகவேண்டு மென்று ஒவ்வொரு திசைக்கும் இவ்விரண்டு வெள்ளம் சேனை களையும் தலைவர்களையும் அனுப்பி , முகப்பொலிவு , சொல் , செய்தொழில் ஆகிய குறிப்புக்களால், தவறாமற் குறிப்புக்களை யுணரவல்ல ஹனுமானை நோக்கி , இனி , தெற்குத் திசைக்குப் போகவுரிய தூதரை விதிக்கவேண்டு மானால் , உன்னை விட வேறு யார் செல்லினும் சீதையைக் காணும் வசம் உளதாமோ ? ஆகாது; ஆதலின் , வலிமையோடு வஞ்சகமும் மிக்கவராகிய அரக்கர்க்குத் தோலாத மன வுறுதி யுடையவனும் , அலையையுடைய கடலுக்கப்பாற் செல்லவல்ல வீரனும் நீயே யென்று கூறி , அவனைத் தனியே அழைத்துத் திரு வாழியை நல்கி , பிராட்டியின் உறுப்புக்கட்கு அடையாளமும் சொல்லியருளிய பெருமாளே ; எனக்கு அரையில் உடுக்கத் துணி வேண்டும்; மிக்க பசியைத் தணிக்க உணவும் நீரும் வேண்டும் ; எள்ளின் நெய்யை ஒழுகுமாறு தேய்த்து நீரிலே மூழ்குதல் வேண்டும் ; உடலினுள் இருக்கும் நோயைப் போக்க மருந்து வேண்டும் ; படுக்க வொரு தனி வீடு வேண்டும் ; மனங்களிக்கச் சிறுபெண் வேண்டும் ; இவை முழுதுங் கிடைத்து நான் இல்லறத்தான் ஆனாலும் , மயக்கமாகிய கடலில் மூழ்கி , மரபாகத் தொடர்ந்து நீண்டு வரும் சுற்றத்தாருக்குப் பரிவுள்ளவனாகிய எனது உயிர் வீணிற் கழிந்து போகும் ; உனது அருள் நெஞ்சமும் , மெய்யறிவின் தெளிவும் , எனக்குக் கிடைக்குமாறு என்னை அழைத்திடுதல் வேண்டும் . மேற்சொல்லிய துகில் , உணவு முதலியவற்றை , நீ எடுத்துக் கொள்ளும் அந்நாளன்றி மற்றைய நாட்களில் என் துன்பம் போகுமோ ? போகாது .

 

( நீ தரவேண்டுவன அருள் நெஞ்சம் , மெய்யறிவின் தெளிவு என்பன.நீ கொள்ள வேண்டுவன , துகில் முதலிய உடலுக்கு வேண்டிய இன்பப் பொருள்கள் . இவ் விரண்டும் நின்னாலன்றி அடியேனால் செய்து கொள்ள

முடியாதவை என்பது கருத்து . )

 

 

மீண்டும் வால்மீகியிடம் வருவோம்.

 


சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க வானரங்கள் உலகம் முழுவதையும் சுற்றித் தேடும் பொழுது இராமனும் இலக்ஷ்மணனும்  பிஸ்ரவனத்தில் தங்கி இருந்தனர். அப்பொழுது இராமன் சுக்ரீவனைப் பார்த்து “சுக்ரீவ! உன் செயல் எனக்குப் பெரும் ஆச்சர்யத்தைத் தருகிறது. நான்கு திக்குகளிலும் வானரர்களை அனுப்பினாய். அவ்வாறு அனுப்பும் பொழுது , ஒவ்வொரு திசையில் ஊர்களையும், மலைகளையும், ஆறுகளையும் குறிப்பிட்டாய். உலகின் புவியியலைப் பற்றி இவ்வளவு பரந்த ஞானத்தை எவ்வாறு பெற்றாய்?” என்று ஆச்சர்யத்துடன் வினவினான்.

 


அதற்கு சுக்ரீவனின் பதில் என்ன? நாளை பார்ப்போம்..........

 


தொடரும்

 


Thursday, October 23, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 351

 

நேற்றைய தொடர்ச்சி.............

 

 

இங்கு பால பாரதியின் இராமாயணத் திருப்புகழ் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்

 

உடுக்கத்துகில் வேணு நீள்பசி

 

அவிக்கைக்கன பானம் வேணுநெய்

ஒழுக்கப்புன லாட வேணுமுள்

உறுநோயை

----

ஒழிக்கப்பரி காரம் வேணுமொர்

படுக்கத்தனி வீடு வேணுமுள்

உவக்கச்சிறு நாரி வேணுமிவ்

வகைசோக்

 

----

கிடைத்துக்ரக வாசி யாகினும்

 

 

மயக்கக்கட லாடி நீடிய

கிளைக்குப்பரி வாள னாயுயிர்

அவமேபோம்

 

---

க்ருபைச்சித்தமு ஞான போதமும்

அழைத்துத்தர வேணு நீயது

க்ரகித்துக்கொள் வேணு நாளல் திடர்போமோ

 

----

 

குடக்குச்சில தூதர் தேடுக

படக்குச்சில தூதர் நாடுக

குணக்குச்சில தூதர் தேடுக

எனவேவி

 

-------

 

குறிப்பிற்குறி காணு மாருதி

இனித்தெற்கொரு தூது போவது

குனிப்பிற்பிறர் போன போதினும்

வசமாமோ

-----

 

அடற்குத்திர காத ராகிய

அரக்கர்க்கிளை யாத தீரனும்

அலைக்கப்புற மேகு வீரனும்

இனிநீயென் ( று )

----

 

அழைத்துத்திரு வாழி மோதிரம்

அளித்துத்தன தேவி யாரவ

யவத்துக்கடை யாள மோதிய

பெருமாளே

 

 

இதன் பொருள் என்ன....நாளை பார்க்கலாம்

 

 

தொடரும்


Wednesday, October 22, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 350

 

நேற்றைய தொடர்ச்சி..................

...

மற்றொரு கேள்வியாவது இராமன் மரவுரி தரித்து வனத்திற்கு வந்தவனாயிற்றே அவனிடம் எப்படி மோதிரம் வந்தது? இதற்கு உரையாசிரியர் கோவிந்தராஜனார் மூன்று விதமான வ்யாக்யானங்கள் சொல்கிறார்;  ஒன்று இராமன் வனத்திற்கு கிளம்பும்போதே மோதிரத்தை பத்திரமாக தனது மரவுரியில் முடிந்து வைத்திருக்க வேண்டும். இரணடாவது இராமன் பெயர் பதித்த மோதிரத்தை வனத்திற்குக் கிளம்பும் சமயம் சீதை ஆசையாக அணிந்து கொண்டிருக்கவேண்டும். அந்த மோதிரத்தை பிற்பாடு இராமன் தனது சிறியவிரலில் அணிந்து கொண்டிருக்கவேண்டும். மூன்றாவது  ஜனகர் சீதை இராமன் திருமணத்தின்போது இராமன் பெயர் பொறித்த மோதிரத்தை சீதையைவிட்டு ஒரு பெண்ணுக்கு எப்படி திருமாங்கல்யம் முக்கியமோ, அது போல ஒரு ஆணுக்கு மனைவியால் அணிவிக்கப்பட்ட மோதிரமும் முக்கியம். ஒருவனின் மனைவி உயிருடன் அவனோடு இணைந்து இருக்கும் வரை திருமணத்தில் பரிசளிக்கப்பட்ட அந்த மோதிரத்தை அவன் கழற்றக்கூடாது. அவனை யாரும் கழற்றவும் சொல்லமுடியாது.. இராமன் வனவாசம் கிளம்பும் சமயம் தனது நகைகளைத்  தானமாகக் கொடுத்தபொழுது மோதிரத்தை மட்டும் கொடுக்கவில்லை.

 

சுந்தர காண்டத்தில் ஹனுமன் இந்த மோதிரத்தைக் சீதையின் கையில் கொடுத்ததும் கண்ணீருடன் அதைப் பார்த்தாள்


गृहीत्वा प्रेक्षमाणा सा भर्तृ कर विभूषणम्


இது சுந்தர காண்டத்தில் வருவது. அதைப் பார்த்ததும் சீதைக்கு ஒரு நம்பிக்கை தோன்றியது. இராமனிடம் மீண்டும் உணர்வு பூர்வமாக இணைந்து விட்டது போன்ற ஒரு நெகிழ்ச்சி.

 


கையிலே வந்த கனியினை நோக்கி 

மெய்யினுள் நின்ற நினைவினைத் தேக்கி 

உய்யுமா என்றென் உயிர் நிமிர் காட்சி  

செய்யனின் மோதிரம் சிந்தை புகுந்ததே.

 


ஒரு கற்பனை. சீதை அந்த மோதிரத்திடம் சொல்லுகிறாள்


 

அரக்கியின் நிழலில் அகப்பட்டேன், 

அருள்வழி காணேன், அகம்கலங்கும்! 

கரத்தில் வந்தாய், கனிவாய் மோதிரமே 

கண்ணனின் குரல் எனக் காட்சி தந்தாய்!

 

அதற்கு பதிலளித்த மோதிரம்

 


கண்ணனின் கரத்தில் நான் காத்திருந்தேன், 

காதலின் மொழியாய் உனக்கே வந்தேன். 

துயரத்தின் நடுவே துணைநீயாக, 

தூயமாய் வாழும் சிதைமாட்டாய்!

 


அதற்கு சீதையின் பதில்

 


மனம்தளர்ந்தாலும் மறவாதே நானும், 

மருகனின் நாமம் மருந்தாய் வைத்தேன். 

பிரிவின் பிணியில் பிழைத்தேன் இன்று, 

பிரகாசம் நீயே, பிழைதீர்த்தாய்!

 


ஆறுதல் கூறிய மோதிரம்


 

பிரமத்தின் சாட்சி, ப்ரேமத்தின் தூது, 

பரமன் வருவான், பயம் நீக்குவான். 

அவனது கருணை அரணாகும் உனக்கு, 

அழிவின்றி வாழ்வாய், அருள்பெறுவாய்!

 


தொடரும்..................