Thursday, June 25, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 138

 

நேற்றைய தொடர்ச்சி.............

 

 

இராமனின் நிலைமை

 

'सुनि बिराग संजुत”” இப்பொழுது சுக்ரீவனிடம் ஞானம்,  வைராக்கியம், பக்தி எல்லாமே வந்துவிட்டன. இதனால் சுகம், சொத்து முதலிய லௌகிகச் சுகங்களைத் தியாகம் செய்கிறேன் என்றான். பிறகு மோட்சங்களையும் தியாகம் செய்கிறேன் என்றான். ஆனால் வானர இனத்தைச் சேர்ந்தவனாதலால் அவன் சஞ்சல மனதை உடையவன். ஆதலால் இவனது வைராக்கியம் நிலையானதாக இல்லை. இதனால் தனது காரியத்தை முடித்துக் கொள்ள பிரபு இராமன் தனது மாய வலையை விரித்தார். அது என்ன மாய வலை? இங்குதான் துளசிதாசர் இரண்டு வார்த்தைகளில் அது என்ன என்று சொல்லிவிடுகிறார். அதாவது बोले बिहँसि இராமன் சிரித்துக் கொண்டே சொன்னான் என்று சொல்கிறார். அதாவது அவரது சிரிப்புதான் அவரது மாய வலை என்று சொல்லாமல் சொல்கிறார் துளசிதாசர். அந்த மாய வலையில் சுக்ரீவனின் ஞானம், வைராக்கியம் பக்தி எல்லாமே கரைந்து போயின என்கிறார் துளசிதாசர்.

 

பஞ்சாபி ஜி என்ற உரையாசிரியர் இராமன் சிரித்தற்கானக் காரணத்தைக் கூறுகிறார்

 

1. வானரஜாதிக்கான சஞ்சலம், சபலம் ஆகியவற்றை நினைத்துச் சிரித்தாராம். அதாவது சற்று நேரத்திற்கு முன் வாலி எனது முதல் எதிரி என்றவன் இப்பொழுது எனக்கு நன்மை செய்துள்ளான் என்று சொல்கிறான்

 

 2. முதலில் வாலி வாதத்தை விரும்பியவன் இப்பொழுது ஞானம் வந்துவிட்டது என்று சொல்லி சகோதரனைக் கொல்லும் விஷயத்தில் தன்னைக் குற்றமற்றவனாகக் காண்பித்துக் கொள்ள விரும்புகிறான்.

 

இப்பொழுது இராமன் குழபத்திலும் தர்ம சங்கடமான நிலையிலும் விழுந்துவிட்டான். காரணம் சுக்ரீவனின் புதிய வேண்டுகோளை நிறைவேற்றினால் இராமன் செய்த பிரதிஞ்ஞைக்கு பங்கம் வந்துவிடும். இதனால் இரகுகுலதிற்கு அவப்பெயர் ஏற்படும். रघुकुलरीति सदा चलि आई प्रान जाहु बरु बचन जाईநிறை வேற்றவில்லை என்றாலும் 'दीनबंधु कृपाल रघुराई சூர்யவம்சத்திற்கு  கெட்ட பெயர் ஏற்படும். இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டத்தான் சிரித்து தனது மாய வலையை விரித்தான் இராமன் என்று சொல்லப்படுகிறது..

 

தொடரும்..............

 


Wednesday, June 24, 2026

  

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 137

 

இராமன் சுக்ரீவனிடம் சொல்வதின் தொடர்ச்சி.........

 

“முதலில் நீயும் உனது அமைச்சர் ஹனுமனும் என்ன சொன்னீர்கள் 'जो कछु कहेहु' 'त्वदुक्ते यत्‌ मां' முதலில் சுக்ரீவனை நண்பனாக ஆக்கிக் கொள்ண்டு அவன் மனதில் உள்ள பயத்தைப் போக்குங்கள் तेहि सन नाथ मयत्री कीजै, दीन जानि तेहि अभय करी. பிறகு நெருப்பைச் சாக்ஷியாக வைத்து ஹனுமன்  நம் இருவருக்கும் நட்பு என்ற பந்தத்தை உருவாக்கினான். பிறகு நீ ரிஷ்யமுகம் வந்த கதையைச் சொல்லி வாலி ஒரு எதிரி என்றும் உன்னை அடித்துத் துரத்தி மனைவி உட்பட உனது எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு உன்னைத் துரத்திவிட்டான், रिपु सम मोहि मारेसि अति भारी। हरि लीन्हसि सर्बसु अरु नारी॥ताकें भय रघुबीर कृपाला सकल भुवन मैं फिरेउँ बिहाला॥6 பயத்தால் உலகில் என்னை ஆதரிப்பார் யாருமின்றி எல்லா இடமும் சுற்றிவிட்டு இங்கு வந்துவிட்டேன். தாங்கள் தான் என்னைத் தயவு கூர்ந்து ஆதரித்து வாலியை வதம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாய். உனது துன்பத்தைக் கண்டு வருந்தி  நண்பனே எனது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து உனது கவலைகளை மறந்துவ்டு வாலியை ஒரே பாணத்தில் கொல்வேன் என்று உனக்கு வாக்குறுதி அளித்தேனே.”

 

 

“ஏழு உலகும் அறியும் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று.  நீ சொன்னது போல சுகம் சொத்து இவை எல்லாம் பக்திக்கு இடையூறானவை.. இந்த உலகில் யாரும் யாருக்கும் நண்பனோ பகைவனோ இல்லை. இறைவனைப் பூஜிப்பதே முக்கியம். ஆனால் இந்த நேரத்தில் நீ அரசு, சொத்து இவை வேண்டாம் என்றால் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பர். இராமன் வாக்களித்தபடி சுக்ரீவனுக்கு எதுவும் செய்யவில்லை என்றே நினைப்பர். அதனால் நான் எனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்க மாட்டேன். வாக்களித்தபடி வாலி கொல்லப்படுவான்.. உனக்கு உனது மனைவியும் அரசும் கண்டிப்பாகக் கிடைக்கும்..நீ எனது நண்பன். நானும் நீயும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பது நமது கடமை”. என்றான் இராமன்.

 

தொடரும்..............

 


Tuesday, June 23, 2026

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 136

  

 

சுக்ரீவனுக்கு இராமனின் பதில்

 

 

सुनि बिराग संजुत कपि बानी। बोले बिहँसि रामु धनुपानी॥11

जो कछु कहेहु सत्य सब सोई। सखा बचन मम मृषा होई

 

சுக்ரீவனின் (தற்காலிகமான) வைராக்கியம் நிறைந்த பேச்சைக் கேட்டு  கையில் வில்லும் அம்பும் தரித்து நிற்கும் இராமன் சிரித்துக் கொண்டே கூறினான். “நீ கூறிய அனைத்தும் உண்மை. ஆனால் தோழனே! நான் கூறிய வார்த்தை பொய்யாகாதே! (அதாவது வாலி கொல்லப்படுவான். நீ அரசனவாய்)

 

 

(காக புஜண்ட முனிவர் கூறுவதாவது ) பறவைகளுக்கு அரசனான கருடனிடம் அவர் கூறுவது போல அமைந்துள்ளது. “குரங்காட்டி குரங்கினை ஆட்டுவிப்பது போலப் பகவன் இராமன் அனைவரையும் ஆட்டுவிக்கிறான் என்று வேதங்கள் கூறுகின்றன..

 

 

மேற் கண்ட ச்லோகத்திற்குச் சமமான ஸ்லோகங்கள் ஆத்யாத்ம இராமாயணத்தில் உள்ளன.

 

'राम: सुग्रीवमालोक्य सस्मितं वाक्यमन्रवीत्‌।

मायां मोहकरीं तस्मिन्वितन्वन्कार्यसिद्धये।

सखे त्वदुक्त यत्तन्मां सत्यमेव संशय:॥ किन्तु लोका

वदिष्यन्ति मामेवं रघुनन्दन:

कृतवान्कि कपीन्द्राय सख्यं कृत्वाग्निसाक्षिकम्‌॥

इति लोकापवादो मे भविष्यति

संशय:' (४। २। १--)

 

 

“நண்பனே! நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மை. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.. ஆனால் மக்கள் என்ன சொல்வார்கள் .இவன் அக்னியைச் சாக்ஷியாக வைத்துச் சுக்ரீவனுக்கு எல்லா உதவிகளும் பண்ணுவதாக வாக்களித்தாரே. வாக்களித்தபடி அப்படி என்ன செய்து விட்டார்” என்று கேட்பார்களே.” என்றான் இராமன்.

 

தொடரும்..............

 

 


Monday, June 22, 2026

 

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 135

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

 

अब प्रथु कृपा करहु एहि भाती: சுக்ரீவன் இராமனிடம் எனக்கும் வாலிக்கும் உள்ள விரோதம் ஏதோ கனவில் வந்ததாகவே இருக்கட்டும்.. அதை மறந்து உங்களையே எப்போதும் பூஜிக்கும் நிலையை நீங்கள் தந்தருளவேண்டும் என்று சொல்லவருகிறான். தாங்கள் இந்த மாதிரி एहि भाँति க்ருபை செய்ய வேண்டும் என்று சொல்கிறான்? எந்த மாதிரி? தாங்கள் முதலில் என்ன சொன்னீர்கள்? सखा सोच त्यागहु बल मोरें। सब बिधि घटब काज मैं तोरें॥5 சுக்ரீவா! நீ எனது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து கவலையை விடு. உனக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்கிறேன் என்று இராமன் சொன்னாரே அந்த மாதிரி கிருபை வேண்டாம். நான் எப்போதும் உங்கள் நினைவிலேயே உங்களை பூஜித்து இருக்கவேண்டும் என்ற கிருபைதான் வேண்டும் என்கிறான்.

 

மீண்டும் अब प्रथु कृपा करहु என்பதை எடுத்துக் கொள்வோம். சுக்ரீவன் சொல்கிறான்  மாயை என்று திரை விலகியதும் ஞானம் வந்துவிடும். ஆனால் அதற்கும் இராமனின் அருள் வேண்டும். ஆதலால் இராகவா! நான் உன்னிடம் ஞானம், மோட்சம் கேட்கவில்லை. உன்னை மறவாது எப்போதும் உன்னை பூஜிக்கும் நிலையே வேண்டும், அது கிடைத்தால் மோட்சம், ஞானம் எல்லாம் தானே கிடைத்துவிடும்.

 

भगति करत बिनु जतन प्रयासा। संसृति मूल अबिद्या नासा॥4

 

இறைவனை பக்தியோடு பூஜித்தால் உலகத்தின் அறியாமை, பிறப்பு, இறப்பு போன்ற விலங்குகள் எந்தவித மந்திரமோ எந்திரமோ இன்றி தானே அழிந்து விடுகிறது.

 

राम भजत सोइ मुकुति गोसाईं। अनइच्छित आवइ बरिआईं॥2

  

துறவிகள், புராணங்கள், வேதங்கள் இவை அனைத்தும் பரமபதத்தின் அரிதான வடிவங்கள் இராமன் மீது பக்தி செலுத்தி அவனை பூசிப்பதன் மூலம் எந்தவித முயற்சியும் இன்றி இவை அனைத்துமே கிடைக்கும்

 

 

राम भजत सोइ मुकुति गोसाईं। अनइच्छित आवइ बरिआईं॥2

  

ஹரி பக்தி இல்லாமல் மோட்சம் அடைவது என்பது சாத்தியமே இல்லை.

 

தொடரும்..............