Monday, April 6, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 68

 

நேற்றைய தொடர்ச்சி..

  

இங்கு துளசி தாசர் तैं मम्र प्रिय लछिमन तें दूना என்று சொல்கிறார்.  அதாவது இலக்ஷ்மணன் எனக்கு மட்டும் பணிவிடை செய்கிறான். நீ எனக்கும் இலக்ஷ்மணனுக்கும் பணிவிடை செய்யப்போகிறாய். அதனால் தூனா என்ற வார்த்தையைப் போடுகிறார்.  ஹனுமான் தனது இயல்பான வானர உருவத்தைவிட்டு அந்தண வேடமிட்டு வந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். இராமன்  दूना என்று சொல்லி அவருடைய வருத்தத்தைப் போக்கிவிட்டான். ஒரு சில உரையாசிரியர்கள் இங்கு இராமன் இலக்ஷ்மணனும் நீயும் இருவரல்ல ஒருவரே என்று சொல்வதாகச் சொல்கின்றனர்.

 

இலக்ஷ்மணன் இராமனின் பாதுகாப்பாளன். कछुक दूरि सजि बान सरासन। जागन लगे बैठि बीरासन  வனத்தினுள் வந்த நாளிலிருந்தே தனது வேலையைத் திறம்படச் செய்பவன். இனி ஹனுமன் இலக்ஷ்மணனின் பாதுகாவலன்.. ஹனுமனின் பன்னிரண்டு பெயர்களுள் लक्ष्मणप्राणदाता दशग्रीवस्य दर्पहा।' (सुदर्शनसंहिता)  இதுவும் ஒன்று. மீதி பெயர்கள் என்னென்ன

 

हनुमानजानसुनुर्वायुपुत्रो महाबल :
रामेष्ठ: फाल्गुनसख: पिंगाक्षोमितविक्रम : 1
उदधिक्रमणश्चैव सीताशोकविनाशन :
लक्ष्मणप्राणदतश दशग्रीवस्य दर्पहा

============================================

समदरसी मोहि कह सब कोऊ । सेवक प्रिय अनन्य गति सोऊ॥ ८॥

दो०--सो अनन्य जाके असि मति न टरइ हनुमंत।

में सेवक सचराचर रूप स्वामि भगवंत॥ ३॥

 

இராமன் மேலும் சொல்கிறான் “எல்லோரும் என்னைப் பார பக்ஷம் பார்க்காதவன் என்று சொல்கின்றனர். ஆனால் மற்றவர்களுக்குக் காட்டாத பரிவு அடியார்களுக்குக் காட்டுகிறவன் நான்.இவ்விஷயத்தில் நான்  பாரபட்சம் பார்ப்பவன். ஏனென்றால் அடியார்கள் என்னையே சரணடைந்தவர்கள். மற்றவர்கள் உதவியை நாடாதவர்கள்.. ஆஞ்சநேயா! எவன் அண்ட சராசரங்களை ஆண்டவனாகவும்,  தன்னை அவைகளின் சேவனாகவும் கருதி நெறி பிறழாமல் தொண்டாற்றி வருகின்றானோ  அவனே என் சேவகன் என்பதைத் தெரிந்து கொள்”. 

 

“நீயும் “நான் இராம சேவகன்.  அசையா அசையும் பொருட்கள் நிறைந்த இந்த உலகம் முழுவதும் பகவத் ஸ்வரூபத்துடன் எனது உருவமாக விளங்குகிறது என்று நினைக்கிறாய். என்னை அடைந்த பக்தர்களிடமும்  சராசர மயமான  இந்த உலகத்தில் நீ எல்லோருடனும் கருணையுடன் இருக்கிறாய். ஆகையால் ஆஞ்சநேயா! நீ  வானரனாக இருந்தபோதிலும்  என் ஸ்வரூபம்தான். அதனால் நான் உன்னை நிராகரித்துவிட முடியாது” என்று கூறினார்  பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆஞ்சநேயர்  பெரு மகிழ்ச்சி உற்றார். துக்கம் அவரை விட்டு விலகியது.

 

தொடரும்

 


Sunday, April 5, 2026

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 67

 

நேற்றைய தொடர்ச்சி..

  

துளசிதாசர் தனது வினயபத்திரிகா என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார்.

 

जानत प्रीति-रीति रघुराई ।

नाते सब हाते करि राखत, राम सनेह-सगाई ॥

 

-"जानत प्रीति-रीति रघुराई"

 

ரகுநாதர் (ராமர்) பாசத்தின் நெறி, பக்தியின் வழி,

உண்மையான அன்பின் நடைமுறை ஆகியவற்றை நன்கு அறிந்தவர்.

 


"नाते सब हाते करि राखत"

 

அவர் உறவுகள், சம்பந்தங்கள், பந்தங்கள் ஆகியவற்றை விலக்குகிறார்

ஏனெனில் அவை மாயை சார்ந்தவை.

 


"राम सनेह-सगाई"

 

அவர் பக்தியின் பாசத்துடன் மட்டுமே உறவாடுகிறார்.

பக்தி என்பது அவரின் உண்மையான உறவு.

 

- உறவுகள் எல்லாம் மாயைதான்

உண்மைதான் பக்தியின் பாசம்!

ராமன் அறிந்த நெறிதான் இது

  

இலக்ஷ்மணன் இராமனின் தம்பி. ஆனால் சுமித்திரை சொன்னது போல அவன் இராமனுக்கு ஒரு வேலைக்காரன் போன்று பணி செய்கிறான். அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. காரணம் அண்ணன் ஒரு தந்தைக்குச் சமம். அண்ணனுக்குப் பணிவிடை செய்யவேண்டியது அவன் கடமை. ஆனால் இராமனுக்கும் ஹனுமனுக்கும் எந்தவித உறவும் இல்லை.. ஹனுமன் ஒரு மனிதனும் அல்லன். ஆனாலும் இலக்ஷ்மணனைவிட ஹனுமன் தனக்கு அதிகமாகப் பிரியமானவன் என்று சொல்கிறான் இராமன். இதைத் தான் உத்தர காண்டத்திலும் இராமன் அனுமனைப் பார்த்துச் சொல்லுகிறார்

  

सब मम प्रिय नहिं तुम्हहि समाना। मृषा न कहउँ मोर यह बाना॥

सब कें प्रिय सेवक यह नीती। मोरें अधिक दास पर प्रीती॥4

 

“எல்லோரும் எனக்கு அன்பானவர்கள் ஆனால் உனக்குச் சமமாக அல்ல. நான் பொய்  சொல்வதில்லை இது எனது இயல்பு. சேவகர்களை விட அடியார்கள்தான் எனக்குப் பிரியமானவர்கள்” என்று இராமன் சொல்வதாகத் துளசி தாசர் சொல்கிறார்.

 

தொடரும்

 


Saturday, April 4, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 66

 

நேற்றைய தொடர்ச்சி..

  

ஹனுமன் இவ்வளவு பேசியும் இராமனிடமிருந்து எந்த பதிலும் வராதது கண்டு மீண்டும் ஸ்ரீ இராமனின் திருவடிகளில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டார். ஹனுமனுக்குச் சந்தேகம் வந்து விட்டது , நாம் சுக்ரீவனுக்காக அந்தணர் வேடம் பூண்டு வந்துள்ளோம்.. ஒரு வேளை இராமன் இதைத் தவறாக நினைத்துவிட்டால் சுக்ரீவனுக்கான வேலையும் நடக்காது. ஆக தாமும் சுக்ரீவனும் அநாதைகளாகி விடுவோம் என்று நினைத்தவன் பிரபுவிடம் ஒளிவு மறைவா? அதனால் அவருடைய பிரம்மச்சாரி வேடம் அகன்று விட்டடது. தனது சுய ரூபம் பெற்றுப் பெருமாளின் திருவடிகளில்  விழுந்து கிடந்தார். 

 

तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि जुड़ावा॥

* सुनु कपि जियँ मानसि जनि ऊना। तैं मम प्रिय लछिमन ते दूना॥

 

இராமன் மனம் நெகிழ்ந்து போனான். அவன்  கண்களில் நீர் மல்கியது. ஹனுமனைத் தூக்கி மார்புறத் தழுவித்  தனது கண்ணீரால் அவரைக் குளிரச் செய்து “புத்திர! கவலைப் பாடாதே! என் வார்த்தையைக் கேள். உன் மனத்தில் கலக்கம் ஏற்படுத்திக் கொள்ளாதே. நீ இலக்ஷ்மணனுக்குச் சமமாக இந்த அவதாரத்தில் மகாபிரியன்”. இங்கு तब என்பதற்கு எப்பொழுது மனம் வாக்கு காயம் இவை ஒன்று பட்டு தன்னைச் சரணடைந்தாரோ என்ற பொருள்.

 

 ஹனுமன் இராமனை முதலில் பார்த்ததும் அவரது பாதங்களில் விழுந்தான். அப்பொழுது இராமன் அவனை ஆரத் தழுவவில்லை. ஹனுமன் அந்தண வேடத்தில் இருந்த போது இராமன் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவன் அந்தண வேடத்தைக் களைந்து மீண்டும் வானர வடிவத்திற்கு மாறிய பிறகு அவனைக் கண்ணீருடன் தழுவிக் கொண்டார் . இது எல்லோருக்கும் ஒரு பாடம். அறிவுரை. அந்தப் பரமனின் அருள் வேண்டும் என்றால் கபட வேடம் போடாமல் உள்ளன்புடன் அவனைத் துதிக்கவேண்டும் என்று சொல்கிறார் துளசிதாசர்.

 

பிஹாரி சத்சாயி என்ற நூலில் கவிஞர் பீகாரிலால் இந்தக கருத்தைத்தான் சொல்கிறார்.


तौ लगु या मन-सदन मैं, हरि आर्दै किहिं बाट ।

 विकट जटे जौ लगु निपट, खुटै कपट-कपाट ॥

 

எவனொருவன் கபடங்கள் என்னும் கதவால் தனது இதயக் கதவை மூடி வைக்கிறானோ, அவனது இதயத்திற்குள் இறைவன் பிரவேசிப்பதில்லை என்று சொல்கிறார்.

 

ஒரு தாய்க்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும்  இரண்டுமே அவளது குழந்தைகளாக இருந்தாலும் முதற்குழந்தையை விட இரண்டாவது குழந்தையின் மீது அன்பு அதிகமாக இருக்கும். அதுபோல ஹனுமனின்   முதல் சரணாகதியை விட இராமனுக்கு  இரண்டாவது சரணாகதி ஏற்புடையதாக இருந்தது., மேலும் இலக்ஷ்மணனைவிட நீ அதிகப் பிரியமானவன் என்று ஹனுமனுக்கு ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறான்..

  

தொடரும்


Friday, April 3, 2026

 



 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 65

 

நேற்றைய தொடர்ச்சி

  

अस कहि परेउ चरन अकुलाई। निज तनु प्रगटि प्रीति उर छाई॥

तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि जुड़ावा॥3

 

 ஹனுமன் இராமனின் திருவடிகளில் விழுந்தான். உடல் முழுவதும் அன்பின் அதிர்வால் நடுங்கியது; உள்ளம் முழுவதும் பாசம், ப்ரேமை நிறைந்தது. அப்போது ரகுபதி (இராமர்) அவரைத் தூக்கி, தன் மார்பில் அணைத்தார். கண்களில் தோன்றிய கருணைத் துளிகளைப் பொழிந்து, அந்த அணைப்பை இன்னும் இனிமையாக்கினார்.

 

பக்தன் தன் உயிரையே அர்ப்பணித்து, ராமனின் திருவடிகளில் விழுந்து, அன்பால் உருகுகிறான்.

 

இராமன், கருணையின் வடிவமாக, அவரைத் தன் மார்பில் அணைத்து, கண்ணீர் துளிகளால் அந்த பாசத்தைப் புனிதமாக்குகிறான்.

 

இது பக்தனின் பரம அன்பும், இறைவனின் பரம கருணையும் சந்திக்கும் தருணம்.. 

:

"பக்தன் உருகி விழ, ராமன் கருணையால் அணைத்தான்; அன்பும் அருளும் ஒன்றாய் கலந்த புனிதக் காட்சி."

 

அன்பினால் உருகி அடியார் விழுந்தார்,

தன்பெரும் கருணைத் தழுவி அணைந்தார்,

கண்ணீர் துளியால் கரிசனம் செய்தார்,

மன்னவன் இராமன் மனமிக நெகிழ்ந்தான்.

 --------------

அசைபோல் விழுந்தான் அடியன் அன்பின்

அலைகள் உருகி உடலினுள் பாய்ந்தது!

கருணை கடலாய் இராமன் அணைத்தான்

கண்ணீர் மலராய் கண்கள் பொழிந்தது!

 

உன்னை மட்டும் தான் நம்புகிறேன் என்று சொல்லும் ஹனுமனைப் போல தன்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறார் துளசிதாசர் இந்த ஸ்லோகத்தின் மூலம்

  

है तुलसी कें एक गुन, अवगुन निधि कह लोग।

भलो भरोसो रावरो, राम रिसिवे जोग॥

  

அதாவது “என்னை (துளஸி) மக்கள் குற்றங்களின் குவியலாகவே சொல்கிறார்கள்,ஆனால் என்னிடம் ஒரு நல்ல குணம் இருக்கிறது அது உங்கள் மீது (இராமர் மீது) உள்ள முழு நம்பிக்கை.அதனால், இராமா ! நீங்கள் என்மீது தயை கொள்ளத் தகுதியானவர்.”

 

தொடரும்


Thursday, April 2, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு


பதிவு எண் 64

நேற்றைய தொடர்ச்சி

முந்தைய பதிவில் சரணாகதித் தத்துவங்களின் ஆறு அம்சங்களைப் பார்த்தோம்.

பிஹாரி சத்சயி என்ற நூலில் கவிஞர் பிஹாரி சொல்வதாவது

नर की अरु नल-नीर की, गति एकै करि जोड़।

जेतौ नीचो है चले, तेतौ ऊँचौ होइ ॥

நதி தன் தாழ்வான பாதையில் ஓடுகிறது –
ஆனால் அந்த நீர் பின்னர் மேகமாக, மழையாக,
மலைகளில், மேலே எழுகிறது.

அதுபோல, மனிதன் தன் நடையில், தாழ்மையில்,
தன்னலமில்லாமல் நடந்தால்,
அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.


தாழ்வு தான் உயர்வு" – என்பதற்கான ஒரு பாரம்பரிய உவமை.


தாழ்மையும், சீரான நடையும் –
உயர்வு பெறும் மூலக் காரணங்கள்.

 

நதி ஓடுமடி தாழ்வழியில் –

நன்மைதான் அதில் பிறக்கும்!

மலைகளிலே மேகமாய் –

மறுபிறவி அதில் வரும்!

----------

மனிதனும் அதே நெறியில் –

மடமையின்றி நடக்க வேண்டும்!

தாழ்மையுடன் வாழ்ந்தவனுக்கே –

தரணியில் உயர்வு காத்திருக்கும்!

----------

தாழ்வு என்பது வீழ்ச்சி அல்ல –

தர்மத்தின் வாசல் அது!

நடையில் நிமிர்ந்தவன் அல்ல –

நெஞ்சத்தில் நிமிர்ந்தவனே நாயகன்!

---------------

நதி ஓடும் பாதை போல –

நம் வாழ்வும் தாழ்வாக ஓடட்டும்!

உயர்வாகும் அந்த ஓட்டத்தில் –

உன்னதம் தான் பிறக்கட்டும்!


தொடரும்

Wednesday, April 1, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 63

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமன் இராமனிடம் சரண் அடைகிறான். சரணாகதித் தத்துவத்தின் ஆறு அம்சங்களில் மூன்றை முந்தைய பதிவில் பார்த்தோம். மீதி அம்சங்களை இப்போது பார்ப்போம்.

  

1.       கோப்த்ருத்த்வே வரணம்  

 

 பகவானை என் பாதுகாவலராக ஏற்கும் மனநிலை

-பகவானை என் வாழ்வின் வழிகாட்டி, பாதுகாவலர் என உணர்ந்து ஏற்கும் நிலை.

-இது சரணாகதியின் செயற்கூறு.

நான் உன்னையே என் வழிகாட்டியாக ஏற்கிறேன்”.

  

2.       ஆத்மநிக்ஷேப:

 

தன்னை முழுமையாக பகவானிடம் ஒப்படைத்தல்

 

-சுயம், அகங்காரம், சொந்த விருப்பம் ஆகியவற்றை முழுமையாக விட்டு,

பகவானிடம் தன்னை ஒப்படைக்கும் நிலை.

என் வாழ்க்கை, என் சிந்தனை, என் செயல்

 

3.       கார்பண்யம்

 

தாழ்மையும், தனிமையும் உணர்தல்

 

-தாழ்மை, தன்னம்பிக்கையின் இல்லாமை,

பகவானின் தயை இல்லாமல் நான் ஒன்றும் அல்ல என்ற உணர்வு.

நான் ஒன்றும் இல்லை; நீயன்றி நான் எதுவும் இல்லை”.

  

🔱மொத்தமாக: சரணாகதி என்பது ஒரு மனநிலை, ஒரு தத்துவம், ஒரு பக்தி யோகத்தின் உச்சம்.

 

இந்த ஆறு அம்சங்கள் இல்லாமல், உண்மையான சரணாகதி இல்லை.

 

 

நன்மை எனில் நான் துணிவேன்

நாயகனுக்கே நான் ஒப்பேன்!

தீமை எனில் நான் தள்ளுவேன்

தேவர் வழியில் நான் நிற்பேன்!

 

பாதுகாப்பு நீயே எனில்

பயமென்ன? என் நெஞ்சம் உறும்!

வழிகாட்டி நீயே எனில்

வஞ்சகங்கள் எல்லாம் மறும்!

 

என் உயிரை உனக்கே கொடுப்பேன்

என் உள்ளம் உனக்கே உருப்பேன்!

தாழ்மையுடன் நான் நிற்பேன்

தந்தை என உன்னை ஏற்பேன்!

 

ஆறு நெறிகள், ஆறு தீபங்கள்

ஆனந்தத்தின் வாசல் திறக்கும்!

சரணாகதி எனும் சிகரம்

சதாசிவத்தின் சுடர் பரக்கும்!

 

தொடரும்