Thursday, November 6, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 361

 

 

அங்கதன் வானரர்களைப்  பார்த்து,

 


वनानि गिरयो नद्यो दुर्गाणि गहनानि च |

दरी गिरि गुहाः चैव विचिता नः समंततः || ४-४९-२

तत्र तत्र सह अस्माभिः जानकी न च दृश्यते |

तथा रक्षः अपहर्ता च सीतायाः चैव दुष्कृती || ४-४९-३

 


மிகவும் களைத்து விட்டீர்கள், என்றான். தானும் களைத்து இருந்ததால் மெதுவாகப் பேசினான். “மலைகள், நதிக்கரைகள், நுழைய முடியாத அடர்ந்த காடுகள், சமவெளிகள், மலைக் குகைகள் என்று எல்லா இடங்களிலும் தேடி விட்டோம். எங்குமே ஜானகியைக் காணவில்லை. அவளைக் கவர்ந்து கொண்டு போன இராவணனையும் காணவில்லை.  தேவ கன்னிகை போன்ற ஜனகன் மகள், எங்கு இருக்கிறாளோ?. 

 


कालः च नः महान् यातः सुग्रीवः च उग्र शासनः |

तस्मात् भवन्तः सहिता विचिन्वन्तु समंततः || ४-४९-४

विहाय तन्द्रीम् शोकम् च निद्राम् चैव समुत्थिताम् |

विचिनुध्वम् तथा सीताम् पश्यामो जनक आत्मजाम् || ४-४९-५

 


நிறைய காலமும் விரயமாகி விட்டது. சுக்ரீவன் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அதனால் திரும்பத் தேடுவோம்.  உடல் களைப்பை உதறி விட்டு, தூக்கத்தையும் அலுப்பையும் மறந்து திரும்ப எழுந்து வாருங்கள். தேடுவோம். ஜனகன் மகள் கிடைக்கும் வரை ஓய மாட்டோம்”. செயல்படுபவன், அந்தக் கர்மத்தின் {செயலின்} பலனை அவசியம் காண்பான்.  உரையாசிரியர் தர்ம கூடம் சொல்வதாவது अनेन अनिर्वेदादयः कार्य सिद्धिकारा इति उक्तम् - तथा च - भारते - उद्योगे विदुरः - अनिर्वेदः श्रियो मूलं धर्मस्य च | महान् भवति अनिर्विशान्नो भयं तथा महत् दृच्छति | - डीके மனச்சோர்வின்றி, விடாமுயற்சியுடன் செயல்படுவது தர்மத்திற்கும் செல்வத்திற்கும் அடிப்படையாகும். முயற்சி செய்யும் மனம் கொண்டவர் பயம் இல்லாமல், உயர்ந்த நிலையை அடைவார்.

 


அநிர்வேதம் செல்வத்தின் மூலமாம்,

அதுவே தர்மம் வளர்க்கும் சூழலாம்,

அஞ்சாது செய்பவன் உயரும் மேன்மையாம்,

அருளும் பெருமையும் அடையும் நன்மையாம்.


 

தன்னம்பிக்கையை இழக்காமல் இருத்தல், இதுவும், பொறுமையும், மனதில் தோல்வியை ஏற்காத தன்மையும்,  தான் சாதிப்பதற்கு தேவையானவை என்று சொல்வார்கள்.  அதனால் தான் சொல்கிறேன். வானர வீரர்களே, இன்று மறு முறை இந்த வனம், கோட்டை, நுழைய முடியாத மலையடிவாரங்கள் இவற்றில் தேடுவோம். உடல் வலியை பொருட்படுத்தாது இந்த வனத்தில் திரும்பத் தேடுவோம். நிச்சயம் நமது முயற்சிகளின் பலனை அடைவோம். 

 


सुग्रीवः क्रोधनो राजा तीक्ष्ण दण्डः च वानराः |

भेतव्यम् तस्य सततम् रामस्य च महात्मनः || ४-४९-९


 

நமது செயல்களில் பின்வாங்க இது நேரமல்ல. சுக்ரீவன் கோபக்காரன். கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அவன் அரசன்.  அவனிடம் நாம் அஞ்சித்தான் நடக்க வேண்டும். தவிர, இராமனின் கோபத்துக்கும் ஆளாவோம். உங்கள் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். நமக்கு இடப்பட்ட கடமையை  முடிக்காமல் திரும்புவதில் பலனில்லை. உங்களுக்குத் தோன்றியபடி செய்யுங்கள். வானரர்களே, உசிதம் என்றும் நம்மால் முடியும் என்றும் உங்களுக்குத் தோன்றினால், சொல்லுங்கள். நாம் ஒன்றாக இணைந்து செயல் படுவோம்” என்றான்.  

 

தொடரும்


Wednesday, November 5, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 360

 

 

 

சுக்ரீவனிடமிருந்து  விடை பெற்றுச் சென்ற வானரர்கள்  ஆறு, ஏரி, புதர், பாலைவனம், நகரம் போன்ற எல்லா இடங்களிலும்  தேடிக் கொண்டு சென்றனர். பகல் முழுவதும், காடுகளிலும் மலைகளிலும் தேடுவர். இரவு வந்துவிட்டால் ஓரிடத்தில் ஒன்றாகத் தங்குவர். பின்னர் மறுபடியும் பிரிந்து சென்று பற்பல இடங்களில் தேடினர். இவ்வாறு ஒரு மாதம வரையிலும் தேடித் பார்த்துவிட்டு  வானர வீரர்கள் திரும்பத் தொடங்கினர்.

 


ஹனுமன் சென்ற தென் திசை வீரர்களைத் தவிர மற்ற திசைகளுக்குச் சென்றிருந்த வீரர்கள் திரும்பத் தொடங்கினர். அவர்களால் முடிந்த வரை எல்லா இடங்களிலும் தேடிவிட்டுச சுக்ரீவனிடம் வந்து விஷயத்தைச் சொன்னார்கள்.

 


தென் திசைக்குச் சென்ற ஹனுமன், அங்கதன், தாரன் போன்றோர் பல இடங்களில் சென்று ஆராய்ந்தனர். பலவிதமான மலைகளையும், சிகரங்களையும்., குகைகளையும் காடுகளையும் பார்த்துப்  பார்த்துத் தேடினர், தங்களால்  முடிந்தவரை பல இடங்களில் அலைந்து திரிந்தனர். எங்கும் சீதையைக் காண முடியவில்லை..

 


இதற்கிடையில் அங்கதன் தலைமையில் சென்ற ஹனுமன் மற்றும் குழுவினர் விந்திய மாலைச் சாரலில் சீதையைத் தேடினர். அவ்விடத்தில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. வானரங்களுக்கு பசியும் தாகமும் ஏற்பட்டு  களைப்படைந்தனர். மலையைவிட்டு அருகிலுள்ள காட்டினுள் சென்றனர். அங்கு இலைகள் இல்லாத மொட்டை மரங்களைக் கண்டு ஏமாந்தனர். இலைகளே இல்லை என்றால் காய்களும் கனிகளும் எங்கிருந்து கிடைக்கும்? சிற்றாறுகள் ஓடைகள் காய்ந்து விட்டதால்  விலங்குகளும் பறவைகளும் அங்கு காணக் கிடைக்கவில்லை. இந்தக் காட்டின் வரலாறு பற்றிய தகவல்; “ஒரு காலத்தில் இந்தக் காடானது “கண்டு”  என்னும் சிறந்த முனிவரின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. அவருக்கு அழகும் இளமையும்  உள்ள மகன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு பதினாறு வயது இருக்கும் பொழுது  அந்தக் காட்டில் வழி தப்பிச் சென்று  காட்டு விலங்குகள் மூலம் உயிர் இழந்து விட்டான்,  

 


தனது மகன் மேல் மிகுந்த அன்புடைய கண்டு மகரிஷி இந்தச் செய்தியை அறிந்தார்; துடித்தார்; சோகத்தால் புலம்பினார்; இந்தக் காட்டின் மீதும் காட்டில் உள்ள விலங்குகள் மீதும் மிகுந்த கோபம் கொண்டார். எனவே அங்குள்ள உயிரனங்கள் அழியும்படியும், வனம் நாசம் அடையும்படியும் சபித்துவிட்டார். அது முதற்கொண்டு இந்தக்காடு இந்த நிலையை அடைந்து விட்டது.  அந்தக் காட்டின் உள்ளே நுழைந்து வெளி வருவதே கடினமாகி விட்டது. இந்த வனத்தின்  முடிவில், மலைகளிலும், குகைகளிலும், நதிகள் பாய்ந்த அடையாளமே காணப்படவில்லை    மீதி இடங்களிலும் தேடினார்கள்.  ஜனகனின் புதல்வியைக்  காணவில்லை. கவர்ந்து சென்ற இராவணனையும் காணவில்லை. சுக்ரீவனுக்குப் பிரியமானதை செய்ய விரும்பியதால், இந்த இடத்தை வேகமாகக் கடந்தனர்.  அடுத்து, கொடிகளும், புதர்களுமாக மூடிக் கிடக்க,  ஒரு கொடிய அசுரனைக் கண்டனர். இவனுக்கு யாரிடமும் பயம் இல்லை. தேவர்களுக்கும் அஞ்சாதவன் என்று சொல்லிக் கொண்டான். திடுமென எதிரில் மலை போல வந்து நின்ற அசுரனைப் பார்த்து வானரங்கள் திகைத்தன. நீங்கள் எல்லோரும் அழிந்தீர்கள், இதோ வந்தேன் என்று கத்தியபடி, முஷ்டியைத் தூக்கிக் கொண்டு அருகில் வந்தான். வாலி புத்திரன், அங்கதன் அவன் உருவத்தையும், கத்தலையும் கேட்டு, இராவணன் தான் இவன் என்று எண்ணி தன் புறங்கைகளால் ஓங்கி அடித்தான்.  மலை போல நின்றிருந்தவன் அந்த அடியைக் கூட தாங்காமல் பொத்தென்று விழுந்தான். கன்னத்தில் பட்ட அடியில், வாயிலிருந்து ரத்தம் பெருகியது. அவன் மூச்சு விடுவது  நின்று விட்டது என்று வானரங்கள் தெரிந்து கொண்டு பயமின்றி அந்த இடம் முழுவதும் தேடினார்கள்.  குகைகள், மலைச் சாரல்களில் நன்றாகத் தேடி விட்டு, அடுத்த காட்டிற்குள் பிரவேசித்தனர். இங்கும் அலைந்து திரிந்து தேடி விட்டு உடல் களைத்தவர்களாக மனமும் வாட, ஏகாந்தமான ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.

 

தொடரும்

 


 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 359

 

நேற்றைய தொடர்ச்சி...................

 

இவ்வண்ணம்‌ தன்‌ உயிர்க்கு இறுதி தேடப்புகுந்த அண்ணனை ‘உடன் பிறந்தே கொல்லும்‌ வியாதிக்கு நிகரெனக்‌ கருதி, சுக்ரீவன்‌ தனக்குத்‌ தக்க துணை  சிக்குமட்டும்‌ பக்குவமாகப்‌ பதுங்‌கி யிருந்தான்‌. சுக்ரீவனும்‌ சாமானியன்‌ அன்று, உத்தம குணங்களும்‌, உயர்க்த நடையும்‌ உள்ளவன்‌, அரச தருமம்‌ அனைத்தும்‌ உணர்ந்தவன்‌”. தனது அரசுக்கு ‌ பழுது சேராதபடி குடிகளைப்‌ பெருக்கி அவர்களுக்குத்‌ தன்னிடம்‌ பூரண நம்பிக்கை யுண்டா கத்தக்க வழிகளை மேற்கொண்டு வந்தான்‌. பால்‌ தொட்டுப்‌ பால்‌ கறப்‌பதுபோலத்‌ தன்‌ பிரஜைகளிடம்‌ அன்புகாட்டி அன்பு பெற்று வந்தான்‌. இதனால்‌ அவனிடமிருந்த  சேனைகள்‌ எழுபத்‌திரண்டு வெள்ளமும்‌ அவன்‌ மேற்‌ பிரியங்கொண்டு அவன்‌ சொற்படி நடச்சு நேர்சந்தது, நிற்க,

 

கவலைக் கடலைசக்‌ கடக்கும்பொருட்டு, கண்ணியமானதோர்‌ புணையா கிற துணையை நாடித் திரியும்‌ சுக்ரீவன்‌ முன்‌, இணையேற்றமிலாசக்‌ குணநிதியாகிய ஸ்ரீராமபிரான்‌ தோன்றினன்‌, மெய்யன்பர்க்கு இடர்‌ நேர்ந்தபோது, உடுக்கை யிழந்தவன்‌ கைபோன்று உதவ எங்கும்‌ நிறைந்த ஐயன்‌ எதிர்ப்படாமல்‌ இருப்பனோ! உடுத்த பெருந்திசை யனைத்தும்‌ ஒலி கொள்ள உறுதுயரால்‌, அடுத்த பெருந்தனி மூலத்தரும்‌ பரமே! பரமே!| என்‌றெடுத்து’ கரிராஜனொருவன்‌ அழைத்தபோது, அபயாஸ்தத்தை அவன்மீது வைத்து என்‌ அப்பா! இப்படிச்‌ கூவுகின்றாய்! நான்‌ தூரத்‌தில்‌ இருப்பதாக நினைத்துவிட்டாயோ! தற்போதமற்ற அன்பர்களிடமே சதா குடிகொண்டிருப்பவன்‌ யான்‌ எனபதை மறந்தனைபோலும்‌; மார்ச்‌ சால நியாயத்தால்‌ வழிபடுவோரையும்‌, பெற்றதாயினும்‌ பற்று மேற்‌கொண்டு, இரக்ஷிப்பவனன்றோ!?? என்‌றருளிய பரமபுருஷன்‌, நமது சுக்‌ரீவன்‌ சஞ்சலத்தைத்‌ தீயிலிட்ட பஞ்சுபோலாக்க ஸ்ரீராமபிரானாகத்‌ தோன்றினான்‌,

 

பண்டிதோத்தமரான மாருதியால்‌ சுக்ரீவன்‌ ஸ்ரீராமபிரானுடைய குணாதிசயங்களை நன்கறிந்து, பிரியா நட்பைப்‌ பிரியமாய்ப்பெற்று, பகைவனை வென்று சுகக்கடலி லாழ்ந்தான்‌, பிறகு..சுக்கிரீவன்‌ தனக்கு மந்திரியாக மாருதியையும்‌, பகைவரைத்‌ தடுக்க வல்லதும்‌, நட்பினை ஆதரிக்க வல்லதுமாய்‌, வற்றாத நீரையும், வெளிப்‌ பிரதேசத்தையும்‌, செழுமைவாய்ந்த பெருத்த மலைகளையும்‌, அடர்ந்த வனங்களையும்‌ கொண்ட கிஷ்கிந்தையை  நாடாகவும்‌ கொண்டு, ஊக்கமும்‌, உற்சாகமும்‌ உள்ள சேனா வீரர்களையும்‌, ஐக்யமும்‌ அன்பும்‌ தழைத்த குடிமக்களையும்‌ துணையாகப்பெற்று, செய்தொழிலில்‌ அசட்டையா யிருத்தல், அளவறியாது செய்தல்‌, பொருந்தாதவற்றை மேற்கொள்ளல்‌ முதலிய விலக்குகளை யனுசரித்து, காருண்யத்துடன்‌ நடந்து  வந்தபடியால்‌, அவனுடய கட்டளையை அவனது குடி ஜனங்கள்‌ ‘இராணுவக்கட்டளை’ போல்‌ தழுவி, சிறிதும்‌ வழாது கீழ்ப்படிந்து வர்தனர்‌. அக்கட்டளை உலகுள்ளளவும்‌ நின்று நிலவ ‘சுக்ரீவ ஆக்ஞை’ என்று வழங்கி வருகிறது, இத்தகைய கட்டளை, ஒற்றுமையோடு கூடிய கட்டுப்பாட்டைப்‌ பலப்படுத்துகின்றது. இதற்குத்‌ தலைவனுக்கும்‌ பிறர்க்கும்‌ இருக்கவேண்டிய பரஸ்பரோக்தமான அன்புதான்‌ காரணம்‌, உயிர்‌ நிலையே அன்பின்‌ வழியதாதலின்‌, அந்த அன்பு எங்கு வளர்ந்து வருகிறதோ அங்கு சித்திக்கா த விவகாரம்‌ ஒன்றுமே யில்லை,

 

ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திலும்‌ இத்தகைய அன்பானது தோஷ ராகிதமாகப்‌ பரவி, பெரியோர்‌ கட்டளைக்குச்‌ சிறியோர்‌ கீழ்ப்படிந்து நடத்துவரின் ஒற்றுமை பலத்து, சதந்திரத்வம் ‌ தானே உண்டாகிவிடும்‌, குடும்பத்திலுள்ள பெரியோர்‌, இந்த நோக்கத்தை யுட்கொண்டு, தம்மைப்‌ பின்பற்றி யுள்ளவர்களை வேண்டிய உபாங்கங்களுடன்‌ சீர்திருத்தி வந்தால்‌ எல்லா நன்மையும்‌ தன்னிடையே கைகூடும்‌.

 

இது ம. இராஜகோபால பிள்ளை என்பவர் 1923 ல் டிசம்பர் மாத ஆனந்த போதினில் என்ற இதழில் எழுதிய கட்டுரையாகும்

 

தொடரும்


Monday, November 3, 2025

 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 358

 

நேற்றைய தொடர்ச்சி.....

 

 

தொன்று தொட்டு மக்களிடைய சில சொலவடைகள் புழக்கத்தில் உள்ளன. பீஷ்ம பிரதிஞ்ஞை, (பீஷ்ம சபதம்) இதுபோல அன்றைய கால கட்டங்களில் மக்களிடையே பிரசித்தி பெற்ற ஒரு சொலவடை “சுக்ரீவன் ஆக்ஞை” சுக்ரீவன் தனது கோடிக்கணக்கான வானர வீரர்களுக்கு  உலகத்தின் மூலைகளுக்குச் சென்று  ஒரு மாதத்திற்குள்  சீதையைத் தேடும்படி கட்டளையிட்டு மீறுவோருக்கு மரண தண்டனை என்று அறிவித்தான். எல்லா வானர வீரர்களும் கீழ் படிந்தனர். இப்படி ஒரு தலைவன் இடும் கட்டளைக்கு அந்தக் காலத்தில் சுக்ரீவன் ஆக்ஞை என்ற அடைமொழி உண்டு. இது பற்றி 1923 ல் ஆனந்த போதினி என்ற பத்திரிகையில் ம. இராஜகோபால பிள்ளை என்பவர் ‘சுக்ரீவ ஆக்ஞை’ என்ற ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

 

 

சுக்ரீவ  ஆக்ஞை.

 

சுக்ரீவ  ஆக்ஞை என்பது நமது காட்டில்‌ வழங்கப்பெற்று வரும்‌ பழமொழிகளுள்‌ ஒன்று, ஒரு காரியத்தைச்‌ செய்யும்படி ஒருவர்‌ மற்‌நறொருவருகச்கு உத்தாவிட்டாலோ அல்லது அவரைச்‌ கேட்டுக்‌ கொண்டாலோ அவ்வாறு உத்தாவிடப்பட்ட அல்லது கேட்டுச்‌ கொள்ளப்பட்டவர்‌, அக்காரியத்தை உடனே செய்யத்தவறின்‌, அன்னவரை நோக்கி “(ஏன்‌ நமது உத்தரவை அல்லது வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்ற கேள்வி நிகழும்போது இதென்ன சுக்ரீவ ஆக்ஞை? போலிருக்‌கிறதே?? என்னும்‌ மறுமொழி சில சந்தர்ப்பங்களில்‌ பிறப்பது உண்டு, இதனைச்‌ சிறிது ஆலோசித்து , இதனால்‌ நமது தாய்‌ நாட்டை எவ்விதம்‌ முன்னேற்றத்திற்குக்‌ கொண்டுவரக்கூடுமோ அந்த உபாயத்தை யறிவோமாக,

 

சுத்கிரீவன்‌ வானரேந்திரனாகிய  வாலியின்‌ தம்பி, வாலியோ அறிவு, ஆற்றல்‌, தெய்வ நம்பகம்‌ முதலிய சிறந்த குணங்கள்‌ பொருந்தப்‌ பெற்றவன்‌, ஆகிலும்‌ அகங்காரத்திற்கு இடங்கொடுத்தான்‌. அக்காரணத்‌தால்‌ அவ்வுயர்ந்த குணங்கள்‌ அவனுக்கு வேண்டுஞ்‌ சமயத்திற்‌ பயன்படா தொழிந்தன. அவ்வாலி, சுக்ரீவன்‌ விஷயத்தில்‌ “(ஐயோ! இவன்‌ இளையவன்றானே; பெருந்தவறொன்றுஞ்‌ செய்துவிட வில்லையே. நமது

நாட்டாரின்‌ வேண்டுகோளுக்கு இசைந்தன்றோ  அரசுபுரிய உட்பட்‌டான்‌; இப்போது அச்செய்கையையும்‌ தப்பித மென்றே ஒத்துக்கொண்டு நம்மையே சரணாகதி யடைந்தனனே; அவனுக்கு நம்மினும்‌ உத்திருஷ்டமான உதவி வேறெவர்‌!? என்பவையாதிய நியாய நெறிகளை யொரு சிறிதும் கவனியாது, அவன்‌ மனைவியையுங்‌ கைப்பற்றிக்கொண்டு, “இடம்‌ கொடுத்தால்‌ மடம்பிடுங்குவான்‌? என்றெண்ணிச்‌, சிட்டுக் குருவியின்‌ மீது இராமபாணந்‌ தொடுத்தது போல அவனைத்‌ தொந்தரவுக் குட்படுத்தினான். இது தனது பராக்கிரமத்‌துக்கே இழிவு என்பதையும்‌ புறக்கணித்‌தான்‌.

 

தொடரும்