Sunday, October 5, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

வடவாக்னி

 

பதிவு எண் 333

 

 

இங்கு கல்கி ஆன் லைன் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையைத் தருகிறேன். இதை எழுதியவர் இந்திராணி தங்கவேல். அவருக்கும் கல்கி நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

பூமியின் மைய நெருப்புக் கோளம் குளிர்ந்துபோனால் நிகழும் விபரீதம் தெரியுமா?

 

 

நம்முடைய பூமி மூன்று பங்கு கடல் நீராலும், அதன் வட, தென் துருவங்களில் பனிக்கட்டிகளாலும், கடும் குளிராலும் சூழப்பட்டிருந்தாலும் இன்னமும் அதன் நடுப்பகுதி கடும் நெருப்பு குழம்புகளால் மையம் கொண்டிருப்பது என்கிற தகவல் நமக்கெல்லாம் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதே. பூமியின் அந்த மைய நெருப்பு கோளமே வடவாக்னிஎன அழைக்கப்படுகிறது.

 


இந்த வடவாக்னி எப்படித் தோன்றியது என்றால் சூரியனிலிருந்து பூமி பிரிந்தபோது அதுவும் ஒரு அதிபயங்கரமான நெருப்பு கோளமாகவே இருந்தது. நாளடைவில் சூரியனைச் சுற்றி வந்த பூமியின் மேற்பரப்பு தானாகவே குளிர்ச்சி அடையத் தொடங்கியது.

 


அப்பொழுது விண்வெளியில் இருந்த பிற பனிப்பாறைகள்,  கோள்கள் பூமியை கடுமையாக மோதித் தாக்கியதால் மேடு பள்ளங்கள் உருவாகின. பூமியின் உஷ்ணத்தால் பனிப்பாறை கோள்களில் இருந்த தண்ணீர் ஆவியாகி மேக மண்டலங்களை உருவாக்கி அத்துடன் காற்று மண்டலத்தையும் உருவாக்கியது. பூமியின் அதீத வெப்பத்தினால் பனிக்கோள்கள் உருகி தண்ணீராக மாறி மாபெரும் கடல் கேணி ஆகியது.


இதனால் பூமியின் மேற்பகுதியில் உருவான நிலப்பரப்பை கடல் நீர் நான்கு புறமும் சூழ்ந்து கொண்டது. இவ்வாறு நெருப்பு கோளமாக இருந்த பூமியின் உஷ்ணம் அனைத்தும் அதன் நடுப்பகுதிக்குள் சென்று மையம் கொள்ளத் தொடங்கியது. எனவே, அக்னியே திட, திரவ, வாயு வடிவில் நம்முடைய நிலவுலகில் கலந்துள்ளதால்  இதை, ‘அக்னி மண்டலம்என்று சித்த யோக நூல்கள் அழைக்கின்றன.

 

இவ்வாறு பூமியின் உள்பகுதியில் அதன் மைய அச்சில் சுழன்று கொண்டிருக்கும் நெருப்பு கோளமே வடவாக்னிஎன்பதாகும். இப்படி பூமியின் மேற்பரப்பில் தோன்றிய பரந்த நிலப்பரப்பை வடவாக்னியின் அழுத்தத்தினால் பல கடுமையான பூகம்பங்களை (நிலநடுக்கங்களை) உருவாக்கி அதனை தனித்தனியாகப் பிரித்து வைத்தது. அவ்வாறு தனித்தனியாகப் பிரிந்த நிலப்பரப்பே 'கண்டங்கள்' ஆக மாறியது. மேலும், நாற்புறமும் நீரால் சூழப்பட்ட தீவுகளை வடவாக்னியிலிருந்து தோன்றிய எரிமலை குழம்புகளின் சீற்றங்களே உருவாக்கியது.

 

தொடரும்


Saturday, October 4, 2025

 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

வடவாக்னி

 

பதிவு எண் 332

 


மன்னர்களுக்கும், பிறருக்கும் என் குலத்தவரைக் காக்கும் அதிகாரம்  இருந்தும்,  வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போட்டு, அவர்களைக் காக்காமல் இருந்தனர். எனவே, நான் அவர்களிடம் கோபம் கொள்ள நியாயம் இருக்கிறது. நானே அநீதியைத் தண்டிக்கவல்ல படைப்பின் தலைவனாவேன். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வல்லனல்லேன்.  இக்குற்றங்களைத் தண்டிக்கவல்லவனாயிருந்தும், நான் அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகை அழித்தொழிப்புகளையே செய்வார்கள். எனது கோபத்தீ இவ்வுலகை எரிக்கத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அஃது எனது சக்தியையும், என்னையும் சேர்த்து எரித்துவிடும்.(. ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுவீர்களாக." என்றார் {ஔர்வர்}".(

 


அதற்கு அந்தப் பித்ருக்கள், "உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி வீசுவாயாக. அஃது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன. சாறு {நீர்மை கொண்ட} அனைத்துப் பொருட்களிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்டமே நீரால் ஆனதுதான். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடுவாயாக.) ஓ பிராமணா, நீ விரும்பினால், அந்தக் கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அஃது உட்கொண்டபடி இருக்கட்டும். ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும், தேவர்களும் அழிய மாட்டார்கள்" என்றனர் {பித்ருக்கள்}".(20)

 


 அதன் பிறகு ஔர்வர் தமது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டார். பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போன்ற வடிவத்தில் இருந்தது. எனவே, அதை வடவாமுகம் {வடவாமுக அக்னி} என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர்.  அதன் வாயிலிருந்து பெரும் நெருப்புக் கிளம்பி அந்தப் பெருங்கடலின் நீரை உட்கொண்டது.

 

 


இன்னும் சில உரையாசிரியர்கள் "அவ்விடத்தில் அந்த வடவாமுகாக்னியைக் கண்டு ஜலத்தில் வசிக்கிறவைகளும், வலுக்கொண்டவைகளும் அலறும் பிராணிகளுடைய சப்தமும் கேட்கப்படுகிறது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்கு அந்த ஜல சமுத்ரத்தில் வாஸஞ்செய்யும் ப்ராணிகள் பல பராக்ரமங்கள் மிகுந்திருக்கப் பெற்றவராயினும் அந்தப் படபாக்னியைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் உரக்க இறைச்சலிடுவது செவிப்பட்டுக் கொண்டிருக்கும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அக்கடலையும் தாண்டிச் செல்வீர்களாயின், நன்னீர்க்கடல் காணப்படும். அதனிடையில்தான் படபாநலம் எரிந்து கொண்டிருக்கின்றது; அதனாலேதான் ஊழிகாலத்தில் எல்லா நீரிரும் பருகப்படுகின்றது, அக்கடலிடையில் வாழ்கின்ற சிறந்த உயிர்களும் அந்தத் தீயைக் கண்டச் சங்கொண்டு கூவுகின்றன; அங்கு அவ்வொலி மிக வொலிக்கின்றது" என்று சொல்கின்றனர் )

 


தொடரும் 

Friday, October 3, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 



வடவாக்னி

 

பதிவு எண்  331

 

 

பித்ருக்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஔர்வர், அவர்களுக்கு இப்படி மறு மொழி கூறினார்."பித்ருக்களே, கோபம் கொண்ட நான் உலகத்தின் அழிவுக்காக செய்த தவம் வீணாகப் போகக்கூடாது.  யாருடைய கோபமும், சபதமும் வீணாகப் போவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் எனது தவத்தைச் சாதிக்கவில்லையெனில், காய்ந்த மரத்தை உட்கொள்ளும் நெருப்பைப் போல, எனது கோபமே என்னை எரித்துவிடும். தகுந்த காரணத்திற்காக ஏற்படும் சீற்றத்தை ஒடுக்கும் மனிதன், வாழ்வின் மூன்று முனைகளை (அறம், பொருள், இன்பம்) சமமாக அடைய முடியாதவன் ஆகிவிடுவான். மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மன்னனால் வெளிப்படுத்தப்படும் கோபத்திற்குத் தகுந்த பயன் இல்லாமல் இல்லை {பயன் இருக்கிறது}. அந்தக் கோபம் தீயவர்களை அடக்கி, நேர்மையானவர்களைக் காக்கப் பயன்படுகிறது..

 



நான் பிறப்பதற்கு முன், எனது தாயின் தொடைக்குள் இருக்கும்போது, நமது குலத்தவர் க்ஷத்திரியர்களால் அழிக்கப்படும்போது, எனது தாய் மற்றும் நமது குலப் பெண்களின் துக்கம் நிறைந்த அழுகையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். பித்ருக்களே, அந்த க்ஷத்திரியப் பாவிகள் பிறக்காத குழந்தைகளையும் சேர்த்து பிருகு குலத்தவரைக் கூட்டமாகக் கொன்றொழித்தபோது, கோபமே எனது ஆன்மா முழுவதும் நிறைந்திருந்தது. பிரசவிக்கும் நேரத்தின் அருகிலிருந்த நமது குல கர்ப்பிணித் தாய்மார்களும், எனது தாயும், எனது தந்தையும் மிகவும் அச்சமடைந்து, தங்களைக் காக்க ஒருவரும் இல்லாமல் இருந்தனர். பிருகு குலத்தின் பெண்கள் ஒரு காப்பாளனையும் காணாத போது, எனது தாய் என்னைத் தனது தொடைகளில் பிடித்து வைத்தாள். தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள். ஆனால் அவர்கள் {குற்றம் புரிபவர்கள்} தண்டிப்பவன் எவனையும் காணவில்லையென்றால், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.

 



காக்கும் அதிகாரமும், பாவங்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லை என்றால், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.. தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள். ஆனால் அவர்கள் தண்டிப்பவன் எவனையும் காணவில்லையெனில், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். காக்கவும், பாவங்களைத் தண்டிக்கவும் அதிகாரம் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லையெனில், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.

 




தொடரும்

 

Thursday, October 2, 2025

 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சீதையைத் தேடல்

 

பதிவு எண்  330

 

 

வசிஷ்டர் தொடர்ந்தார், "அந்த பிராமணப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசர்கள், தொடையில் பிறந்த அக்குழந்தையிடம், "நன்மை செய்வாயாக" என்று வேண்டினர். அக்குழந்தையும் அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பினான். அந்தப் பிராமண முனிவர்களில் சிறந்தவன், தனது தாயின் தொடையைக் கிழித்துப் பிறந்ததால், இந்த உலகத்தில் ஔர்வன் (தொடையில் பிறந்தவன்) என்று அழைக்கப்பட்டான். அந்த இளவரசர்கள் தங்கள் பார்வையைப் பெற்றுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த பிருகு குலத்தைச் சேர்ந்த முனிவர் ஔர்வர் இவ்வுலகத்தை வெல்ல முடிவு செய்தார். அந்த பிருகு குலத்தின் கொழுந்து, இறந்த தனது மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த முழு உலகத்தையே அழிப்பதற்காகக் கடும் தவம் இருந்தார். தனது மூதாதையர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எண்ணிய அந்த முனிவர், தனது கடும் தவத்தால், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் பாதிப்படையச் செய்தார்.(

 

தங்கள் குலத்தைச் சேர்ந்த பிள்ளை என்ன செய்கிறான் என்பதை அறிந்த பித்ருக்கள் {ஔர்வரின் மூதாதையர்கள்} அனைவரும் தங்கள் உலகங்களை விட்டு அந்த முனிவரிடம் வந்து,() "ஔர்வா, ஓ மகனே, உனது தவம் கடுமையானதாக இருக்கிறது. உனது சக்தியை நாங்கள் கண்டோம். ஓ மகனே, மூன்று உலகங்களுக்கும் நன்மையைச் செய்யக் கருதி உனது கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக.) ஓ குழந்தாய், ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்த பிருகுக்கள், கொலைகார க்ஷத்திரியர்களின் கரங்களில் அழிவையடைந்தும் பாரபட்சமின்றி இருந்தது எங்கள் இயலாமையில் அல்ல. ஓ குழந்தாய், நாங்கள் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீண்ட வாழ்நாட்களால் களைத்துப் போய், க்ஷத்திரியர்களைக் கருவியாகப் பயன்படுத்தி எங்கள் அழிவை நாங்களே விரும்பினோம்..

 

 

 

பிருகுக்கள் நிலத்துக்கடியில் பதுக்கிய செல்வம் என்பது, க்ஷத்திரியர்களின் கோபத்தைத் தூண்டி சச்சரவை உண்டாக்க ஒரு காரணமே ஆகும். ஓ பிராமணர்களில் சிறந்தவனே, எங்களுக்குத் தேவலோகத்தில் விருப்பம் உண்டானதால், அந்தச் செல்வங்களால் எங்களுக்கு யாது பயன்? தேவலோகத்தின் பொருளாளர் (குபேரன்) எங்களுக்காகப் பெரும் செல்வத்தை வைத்திருக்கிறான். எங்களை மரணம் வெல்ல முடியாது என்பதை நாங்கள் எப்போது அறிந்தோமோ, அப்போதுதான், ஓ குழந்தாய், நாங்கள் இந்தச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம். தற்கொலை செய்பவர்கள் அருளப்பட்டவர்களின் உலகத்தை அடையவே முடியாது. இதை உணர்ந்த நாங்கள் தற்கொலை எண்ணம் கொள்ளவில்லை. எனவே, எதை நீ செய்ய விரும்புகிறாயோ, அஃது எங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, மொத்த உலகத்தையும் அழிக்கும் இந்தப் பாவகரச் செயலிலிருந்து பின்வாங்குவாயாக. ஓ குழந்தாய், க்ஷத்திரியர்களையோ, ஏழு உலகங்களையோ அழிக்காதே. உனது ஆன்ம சக்திக்குக் களங்கத்தை உண்டாக்கும்வகையில் உனக்குள் இருக்கும் இந்தக் கோபத்தைக் கொல்வாயாக" என்றனர் {பித்ருக்கள்.

 

தொடரும்

Wednesday, October 1, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சீதையைத் தேடுதல்

 

பதிவு எண் 329

 

 

நேற்றைய தொடர்ச்சி......................

 


தங்கள் பார்வையை இழந்த அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர். தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன் அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம்.  "ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள் எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.. ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும் எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு நன்மையைச் செய்வீராக" என்றனர்".(

 

 

இப்படி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண், "குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப் பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான்.  தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக் குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும் கிடையாது. குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின் கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான். பிருகு குலத்திற்கு வளமை உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதமானது, எனது கருவில் இருந்த இவனுக்கு அருளப்பட்டது. பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின் மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச் சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன. எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்" என்றாள்"

 

தொடரும்