Monday, February 9, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 18

 


நேற்றைய தொடர்ச்சி


ஹனுமன் அவதாரம்


இங்கு ஹனுமனைப் பற்றி நாம் பார்த்து விடலாம்.

 

ஹனுமன் காற்றின் கடவுளான வாயுவின் புதல்வன். ஹனுமனின் பிறப்பைப் பற்றி பல கதைகள் உள்ளன.

 

புஞ்சிகாஸ்தல ஒரு மோகினி அவள் குரு பிரஹஸ்பதியின் வேலைக்காரி. ஒரு நாள் அவள் ஒரு தோட்டத்தில் தனது குருவுக்காக பூக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, இளைஞர்களும் பெண்களும் கூட்டமாக காம விளையாட்டுகளுக்காகத் தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் தோட்டத்தில் ஜோடிகளாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர், அனைத்து வகையான சிற்றின்பச் செயல்களைச் செய்தனர், புஞ்சிகாஸ்தலா அவர்களன் செயல்களைச்  சிறிது நேரம்  பார்த்துக் கொண்டிருந்தாள். இதேபோன்ற வாழ்க்கையை அனுபவிக்கக் கணவன் இல்லாத தனது துயரமான நிலையைப் பற்றி சிந்தித்து அவள் ஆஸ்ரமதிற்குத்  திரும்பினாள். அவள் ஆஸ்ரமத்திற்குத் திரும்பியபோது மனமெங்கும்  காமம் நிறைந்திருந்தாள்.

 

தனது குரு பிரஹஸ்பதியைப் பார்த்ததும் அவள் அவரது கையைப் பிடித்து தனது காமத்தைத் திருப்திப்படுத்துமாறு கெஞ்சினாள். இந்த முறையற்ற வேண்டுகோளைக் கேட்டுக் கோபமடைந்த பிரஹஸ்பதி அவளைச் சபித்தார், "உன் மனதில் அழுக்கு நிறைந்துள்ளது. . பிறருடைய காம விளையாட்டுகளைப் பார்த்துக் காம வெறி பிடித்து அலைகிறாய். . நீ குரங்காக பிறக்கக் கடவாய்.. இந்த ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறு" என்றார்.


புஞ்சிகாஸ்தலா சுயநினைவுக்கு வந்து, தனது அவசரச் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சாபத்திலிருந்து விடுதலை அளிக்குமாறு தனது குருவிடம் மன்றாடினாள். பிரஹஸ்பதி அவள் மீது பரிதாபப்பட்டு, "நீ மிகவும் விரும்பும் ஒரு காதலனுடன் போய் உன் முழு பாலியல் வாழ்க்கையை அனுபவித்து மகிழு. அப்பொழுது சிவனின் உயிர்ச்சக்தியிலிருந்து ஒரு மகன் கிடைக்கும். அந்த மகன் பிறக்கும்போது நீ சாபத்திலிருந்து விடுதலையாகி, பரலோகத்திற்குச் செல்வாய்" என்றார்.

 

அவள் உடனடியாக அஞ்சனா என்ற குரங்குப் பெண்ணாக மாறி அந்த பெயரில் ஒரு காட்டில் வாழத் தொடங்கினாள். அங்கு கேசரி என்ற குரங்குச் சிறுவனைக் காதலித்துப் பல ஆண்டுகள் காம வாழ்க்கையை அனுபவித்து வந்தாள். பல வருடங்களுக்குப் பிறகும் அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை, பின்னர் அவள் ஒரு குழந்தைக்காக சிவனிடம் பிரார்த்தனை செய்தாள்.

 

அந்த நேரத்தில்தான் பார்வதியும் பரமேஸ்வரரும் குரங்குகள் வடிவில் அன்பு விளையாட்டுகளை விளையாடினர், பார்வதி கர்ப்பமானார். பார்வதி ஒரு குரங்குக் குழந்தையின் தாயாக இருக்க தயக்கம் காட்டினார், பின்னர் சிவன் தனது தெய்வீக சக்திகளால் தனது விந்தணுவை வாயுபகவான் (காற்றின் கடவுள்) மூலம் அஞ்சனாவின் கருப்பையில் செலுத்தினார், அவர் அப்போது ஒரு குழந்தைக்காக அவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். இதை நாரதன் மூலம் அறிந்து, அஞ்சனவுக்கு அத்தகைய குரங்கு பிறந்தால் குரங்குகள் மீதான தனது பிரபுத்துவம் இழந்துவிடுமோ என்று அஞ்சிய வாயு அஞ்சனாவின் வயிற்றில் பஞ்சலோஹ (ஐந்து உலோகங்கள்) உருகிய திரவத்தை ஊற்றினார். அஞ்சனா சிறிதளவுகூட காயமடையவில்லை, அவள் சரியான நேரத்தில் ஒரு குரங்கின் தோற்றத்தில் ஒரு மகனைப்  பெற்றெடுத்தாள், அவர் இராம-ராவண மோதலின் உயிர் சக்தியான புகழ்பெற்ற ஹனுமன் ஆனார்.


Ref: Puranic Encyclopedia by Vettam Mani page no.615)

 

தொடரும்


Sunday, February 8, 2026

 


 

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 17

 

நேற்றைய தொடர்ச்சி

   

ஹனுமனின் பிராமண வேடம்

  

 இங்கு ஒரு கேள்வி எழலாம். சுக்ரீவன் ஹனுமனை ஒரு பிராம்மண பிரம்மச்சாரியாக அனுப்புவதன் காரணம் என்ன? இராமன் மற்றும் இலக்ஷ்மணன் இருவரும் வில் மற்றும் ஆயுதங்கள் ஏந்தி இருந்தனர். இடுப்பில் அம்புறாத்தூணி கட்டப்பட்டிருந்தது. அவர்களின் உறுதியான நடை அவர்களை கண்ணியமான அரச வீரர்களாகக் காட்டியது. உன்னதமான போர் வீரரர்கள் போல் தெரிந்தனர். எந்த நோக்கத்துடன் அவர்கள் வந்துள்ளனர் என்று தெரியாத நிலையில் சுக்ரீவன் ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாததால்  மிக்கக் கவனமாக இருந்தான்.

 

பொதுவாக மனிதர்கள் வானரங்களுடன் நட்புடன் இருப்பதில்லை. அதனால் ஹனுமனை ஒரு பிராம்மண பிரமச்சாரி வேடம் அணிந்து செல்லச் சொன்னான். காரணம் அரச குடும்பத்தினர் பிராமணர்களை மதிப்பவர்கள் . அவர்களை நம்புவபர்கள். ஆகவே ஹனுமனை ஒரு பிராம்மண மாணவனாக அனுப்பினால் அந்த அன்னியர்கள் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் குறைவு..

 

மீண்டும் ஒரு கேள்வி. சுக்ரீவன் ஹனுமனை ஏன் வயதான் பிராம்மணனாக அனுப்பாமல் இளம் பிரம்மச்சாரி மாணவனாக அனுப்புகிறான்? இராமனும் இலக்ஷ்மணனும் இருந்த பகுதி கொடிய மிருகங்கள் இருக்கும் அடர்த்தியான காடு. நகரத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளது. அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்கள் வாழ்வதற்க்கான அறிகுறி ஏதும் இல்லை. பொதுவாக வயதான் பிராமணர்கள் எதற்காக வருவர்? தான தருமம் மற்றும் உணவு கேட்டு வருவர். யாருமே இல்லாத இடத்தில், வயதான பிராமணர் வந்தால் இராம இலக்ஷ்மணர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு உண்டு.

 

ஆனால் இளம் பிராமண மாணவன் வந்தால் அவர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை.   காரணம் அந்தக் காலக் கட்டத்தில் கல்வி கற்பதற்காகவும், நல்ல குருவைத் தேடியும் மாணவர்கள் காடு, மலை இவற்றை எல்லாம் பொருட் படுத்தாமல் சென்று கல்வி கற்றனர். ஆதலால் ஹனுமன் இளம் பிராமண மாணவனாகச் சென்றால் அவர்களுக்குச் சந்தேகம் வராது என்று முடிவு செய்து அவ்வாறு செய்தான் சுக்ரீவன்.  மேலும் ஒரு இளம் மாணாக்கன் தவறு செய்தால் பெரியவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். மேலும் இளம் மாணாக்கன் தன்னைவிட வயது கூடியவர்களிடம் வணங்கி மரியாதை செய்தால், அவர்களும் மாணாக்கனது நல்ல குணத்தைப் பார்த்து பதிலுக்கு மரியாதை செலுத்துவதுடன் அந்த மாணாக்கனிடம் விஷயங்களையும் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் என்று சுக்ரீவன் எண்ணினான்  என்னவிதமான ஒரு முன் யோசனை?


================= 

வாலியின் வன்மை அச்சமென சுக்ரீவன், 

வீரனைக் காண அனுப்பினான் அனுமனை; 

பிரம்மச்சாரி பிராமண வேடமென வந்தான், 

பக்தியால் ராமனைப் பிணைத்தான் மனமென! 

 --------

அச்சம் கரைந்தது, அன்பு பெருகியது, 

அனுமன் உரையால் நம்பிக்கை மலர்ந்தது; 

ராமனின் சேவகன் ஆனான் உடனே, 

சத்தியம், சக்தி, பக்தி — சங்கமம் ஆனதே!

=============== 

 

தொடரும்

 

Saturday, February 7, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் 16

நேற்றைய தொடர்ச்சி

சுக்ரீவனின் அச்சம்

நிகரில்லா வலிமை கொண்ட இராமன் வருவதைப் பார்த்ததும் சுக்ரீவன் மிகுந்த அச்சமுற்றான் . சுக்ரீவன் பயந்த விதத்தை வால்மீகி விரிவாகக் கூறியிருந்தார்.

===============

तौ तु दृष्ट्वा महात्मानौ भ्रातरौ राम लक्ष्मणौ |

वर आयुध धरौ वीरौ सुग्रीवः श्ङ्कितोऽभवत् || ४-२-१

उद्विग्न हृदयः सर्वा दिशः समवलोकयन् |

न व्यतिष्ठत कस्मिन् चित् देशे वानर पुङ्गवः || ४-२-२

नैव चक्रे मनः स्थातुम् वीक्षमाणो महाबलौ |

कपेः परम भीतस्य चित्तम् व्यवससाद ह || ४-२-३

तौ ऋष्यमूकस्य समीप चारी चरन् ददर्श अद्भुत दर्शनीयौ |

शाखा मृगाणाम् अधिपः तरस्वी वितत्रसे नैव चिचेष्ट चेष्टाम् || ४-१-१२८

स तौ महात्मा गज मन्द गामि शखा मृगः तत्र चिरन् चरन्तौ |

दृष्ट्वा विषादम् परमम् जगाम चिन्ता परीतो भय भार मग्नः || ४-१-१२९

=============

அந்த இரு மகாத்மாக்களான இராம–லட்சுமணரை, சிறந்த ஆயுதங்களைத் தாங்கிய வீரர்களாகக் கண்டவுடன், சுக்ரீவன் சந்தேகத்துடன், அச்சமடைந்தான்.அவனது மனம் கலங்கிப் போய், எல்லாத் திசைகளையும் கவலையுடன் நோக்கினான். எந்த இடத்திலும் அமைதியாக நிற்க முடியாமல், வானரர்களில் சிறந்தவனான சுக்ரீவன் அலைந்தான்.அந்த இரு பெரும் வீரர்களை நோக்கிக் கொண்டிருந்தபோது, சுக்ரீவனின் மனம் நிலைபெறவில்லை. மிகுந்த பயத்தால் அவனது சிந்தனை சிதறிப் போனது.

=============

இராமன் லட்சுமணன் வீரர் இருவரை

சுக்ரீவன் கண்டனன் அஞ்சிக் கலங்கினன்

திசை திசை நோக்கினன் திடமின்றி நின்றிடா

மனமெல்லாம் பயமுற்று மயங்கினன் தானே.

=============


வால்மீகி இத்தனை சுலோகங்களில் சொன்ன விஷயத்தை துளசி தாசர் अति सभीत என்ற இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டார்.

இராம இலக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்துப் பயந்த சுக்ரீவன் ஹனுமனிடம் கூறுகிறான். “ஏ! ஹனுமனே! வருகின்ற இந்த இரண்டு மனிதர்களும் வலிமைக்கும் அழகிய வடிவத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படுகின்றனர். நீ ஒரு பிரம்மச்சாரியாக வடிவெடுத்து அங்கு சென்று கவனி. அவர்கள் யார் என்று அறிந்து அங்கிருந்தே சைகை செய்து எனக்கு அறிவிப்பாயாக.. இதையே வால்மீகியும் கூறுகிறார்.

=============

इङ्गितानाम् प्रकारैः च रूपव्या भाषणेन च

लक्षयस्व तयोः भावम्

शुद्ध आत्मानौ यदि एतौ जानीहि त्वम् प्लवंगम |

व्याभाषितैः वा रूपैः वा विज्ञेया दुष्टता अनयोः || ४-२-२७

==============


“அவர்களின் சைகை, தோற்றம், பேச்சு ஆகியவற்றைப் பார்த்து அவர்களின் மனநிலையை அறிந்து கொள். அவர்கள் தூய உள்ளம் கொண்டவர்கள் என்றால் புரிந்து கொள்; இல்லையெனில், அவர்களின் நடத்தை மூலம் தீய எண்ணம் உள்ளதா என கவனமாக உணர்.” என்றான்.

தொடரும்

Friday, February 6, 2026

 




 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 15

 

நேற்றைய தொடர்ச்சி

 

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனினிடம் ஹனுமான் கூறியதாவது:

 

=============

பயம் வேண்டாம் சுக்ரீவா! பதறாதே வானரா!

மலைய மலையில் வாலிக்கு மரண பயம் உண்டடா!

 

அவன் கால் இங்கு வைக்கவே அஞ்சுவான் அஞ்சுவான்

அவன் முகம் இங்கு தெரியவே முடியாது முடியாது!

 ---------

சின்ன மனசு வேண்டாம் சிங்கக் குஞ்சே!

சீறி எழு! சிம்மாசனம் உனக்கே உரியதடா!

 -----------

அறிவு உண்டு, ஆற்றல் உண்டு, அடக்கம் உண்டு

அரசன் நீ! அசைவிலா மனம் வேண்டும்!

 -------------

ராமன் வந்தான், லட்சுமணன் வந்தான்

ரிஷ்யமூகம் இன்று வெற்றி முகம் கொண்டான்!

 ------------

எழு சுக்ரீவா! எழு கிஷ்கிந்தா குமாரா!

இன்று முதல் உன் பயம் எல்லாம் மடியட்டும் மடியட்டும்!

 =============

 

இதன் மூலம் ஹனுமன் எப்படிப்பட்டவர் என்பது முதலிலேயே நமக்குத் தெரிய வருகிறது. மேலும் நாற்பத்தி நாலாவது சர்கத்தின் கீழ்க்கண்ட சுலோகங்களின் மூலம் அதை வால்மீகி உறுதிப்படுத்துகிறார். அதாவது சுக்ரீவன் ஹனுமானைப் புகழ்ந்து சொல்வது போல வால்மீகி எழுதுகிறார்.

 

============ 

विशेषेण तु सुग्रीवो हनूमति अर्थम् उक्तवान् |

स हि तस्मिन् हरि श्रेष्ठे निश्चितार्थो अर्थ साधने || ४-४४-१

तेजसा वापि ते भूतं समं भुवि न विद्यते ।

तद्यथा लभ्यते सीता तत्त्वमेवोपपादय ॥ ६ ॥

त्वय्येव हनुमन्नस्ति बलं बुद्धिः पराक्रमः ।

देशकालानुवृत्तिश्च नयश्च नयपण्डित ॥ ७ ॥

ततः कार्यसमासङ्गमवगम्य हनूमति ।

विदित्वा हनुमन्तं च चिन्तयामास राघवः ॥ ८ ॥

=============

 

“வானர ஸ்ரேஷ்டனே! பூமி அந்தரிக்ஷத்திலும், சித்தர்கள், வித்தியாதரர்கள் சஞ்சரிக்கும்  ஆகாயத்திலும், நீரிலும் உனக்குத் தடையில்லை.  உன் தந்தையான வாயு தேவனைக் காட்டிலும் உனக்கு அதிக ப்ராக்ரமங்கள் உண்டு. உனக்குள்ள பிரதாபம் இந்தப் பூலோகத்தில் ஒருவருக்கும் இல்லை. ஆகையால் எந்த விதத்திலாவது சீதையைக் கண்டறியும் கடமை உன்னுடையதே. நியாயம் அறிந்தவேனே,  பலமும், அறிவும், பராக்ரமும்  தேச காலங்களுக்கேற்றபடி நடந்து கொள்வதும்  வினயமும் உன்னிடத்திலே இருக்கின்றன. ஆகவே நீயே இந்தக் காரியத்தை முடிக்கவேண்டும்” என்று சுக்ரீவன் ஹனுமனிடம் கூறினான்.


  =============

வலிமை அறிவு வீரமுடன் 

வானரன் ஹனுமன் மேன்மை பெரிது 

சுக்ரீவன் நம்பினான் சீதைத் தேடல் 

தருமம் நிறைவேற்றும் தெய்வம் அவனே.

============



தொடரும்

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 14

 

நேற்றைய தொடர்ச்சி

  

ஹனுமனின் பெருமை

  

 ஹனுமன் பிரச்னைகளை எப்படி நேர்மறையாக அணுகிறார்? பயத்தில் நடுங்கும் சுக்ரீவனுக்கு எவ்வாறு ஆறுதல் வழங்குகிறார் என்பதை வால்மீகியின்  கிஷ்கிந்தா காண்டத்தின் இரண்டாவது சர்கத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் மூலம் வால்மீகி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

  

ततस्तं भयसंविग्नं वालिकिल्बिषशङ्कितम् ।

उवाच हनुमान्वाक्यं सुग्रीवं वाक्यकोविदः ॥ १३ ॥

सम्भ्रमस्त्यज्यतामेषः सर्वैर्वालिकृते महान् ।

मलयोऽयं गिरिवरो भयं नेहास्ति वालिनः ॥ १४ ॥

यस्मादुद्विग्नचेतास्त्वं प्रद्रुतो हरिपुङ्गव ।

तं क्रूरदर्शनं क्रूरं नेह पश्यामि वालिनम् ॥ १५ ॥

यस्मात्तव भयं सौम्य पूर्वजात् पापकर्मणः ।

स नेह वाली दुष्टात्मा न ते पश्याम्यहं भयम् ॥ १६ ॥

अहो शाखामृगत्वं ते व्यक्तमेव प्लवङ्गम ।

लघुचित्ततयाऽऽत्मानं न स्थापयसि यो मतौ ॥ १७ ॥

बुद्धिविज्ञानसम्पन्नः इङ्गितैः सर्वमाचर ।

न ह्यबुद्धिं गतो राजा सर्वभूतानि शास्ति हि ॥ १८ ॥

सुग्रीवस्तु शुभं वाक्यं श्रुत्वा सर्वं हनूमतः ।

ततः शुभतरं वाक्यं हनूमन्तमुवाच ह ॥ १९ ॥

 

பின்னர், வாலியால் செய்யப்பட்ட பாவத்தை நினைத்து மிகழ்ந்து, மிகுந்த பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனிடம், பேச்சில் மிகத் திறமைசாலியான ஹனுமான் இவ்வாறு கூறினான்:

 

இந்த மிகப் பெரிய பதற்றத்தையும் பயத்தையும் எல்லோரும் விட்டுவிடுங்கள்! இது மலைய மலை (ரிஷ்யமூக பர்வதம்) இங்கு வாலிக்கு யாரும் பயம்படத் தேவை  இல்லை, அதாவது வாலியே இங்கு வரவே முடியாது! அவனுக்கு இங்கு வர அஞ்சுதல் உண்டு.

 

நீ முன்பு மிகுந்த பயத்துடன் ஓடி வந்ததற்குக் காரணமான அந்தக் கொடூரமான முகமும் கொடூரச் செயலும் உடைய வாலியை இங்கே நான் காணவில்லை.

 

எந்தப் பாபியான அண்ணனால் உனக்கு இவ்வளவு பயம் ஏற்பட்டதோ, அந்தத் துஷ்ட ஆத்மாவான வாலி இங்கு இல்லை. ஆகவே, சௌம்யா! உனக்கு இங்கு எந்தப் பயமும் இல்லை.

  

ஐயோ! நீ ஒரு குரங்கு என்றாலும் இவ்வளவு சின்ன மனசு உடையவனாக இருக்கிறாயே! எளிதில் பயந்து, தைரியத்தை இழந்து, தன் மனதை ஒரு நிலையில் நிறுத்தாமல் தத்தளிக்கிறாயே!

 

நீ அறிவும், விஞ்ஞானமும், புத்தி கூர்மையும் கொண்டவன். எல்லாவற்றையும் அடையாளங்களை வைத்து (இங்கித ஞானத்தால்) செயல்படு.ஏனெனில், புத்தியில்லாதவன் ஒருநாளும் அரசனாகி எல்லா உயிர்களையும் ஆள முடியாது.என்று கூறினான்.

 

தொடரும்


 


இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

 

ஏழாம் நாள்

 

முன்னேஸ்வரம்  சிவன் கோவில்

 

ராவணன் ஆண்ட இலங்கை, தற்போது உள்ளதைப் போல மூன்று மடங்கு பெரிதாக இருந்ததாம்! ராவணன், இலங்கையின் முழுவதும் சிவாலயங்களை எழுப்பி சிவபூஜை செய்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஐந்து மிகவும் முக்கியமானவை. முன்னீஸ்வரம், கேத்தீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்தையும் `பஞ்ச ஈஸ்வரத் தலங்கள்என்று போற்றி வழிபடுகிறார்கள் இலங்கை மக்கள். இந்தத் தலங்களைப் பற்றிய வரலாறு தமிழர்களின் சரித்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது; நம் பண்பாடு, கலை, கலாசாரம், அரசியல் ஆகியவற்றைப் பேசுவது; கடல்கடந்து சென்று ஆட்சி செய்து அந்த நிலத்தைச் செழிப்பாக்கிய நம் மன்னர்களைச் சார்ந்தது.

 

இங்ஙனம் புராண - இதிகாச காலம் தொட்டு நிலைத்து நின்று, மன்னர்கள் காலத்தில் செழித்தோங்கிய ஒரு தலம்தான் முன்னீஸ்வரம். இந்த ஆலயத்தில் அருளும் ஈசன் ராவணனால் வழிபடப்பட்டவர்; அவனே இந்த ஈசனைப் பிரதிஷ்டை செய்தான் என்பாரும் உண்டு. இதன் பெருமையை எடுத்துச் சொல்லும் ராமாயண நிகழ்வு ஒன்றும் உண்டு.. சிவபக்தனான ராவணனைக் கொன்ற காரணத்தால் ராம பிரானைப் பற்றிக்கொள்ள தருணம் எதிர்பார்த்திருந்தது பிரம்மஹத்தி தோஷம். ராமபிரான் சீதாவுடன் ஆகாயமார்க்கமாக புஷ்பக விமானத்தில் பயணித்தார். பிரம்மஹத்தியும் கரிய உருவம் கொண்டு அவரைப் பின்தொடர்ந்தது. இதை ராமரும் அறிந்தார். ஓரிடத்தில் அந்தக் கரிய உருவம் அலறி மறைந்தது. இதைக் கண்டு வியந்த சீதாதேவி, அதற்கான காரணத்தைக் கேட்டாள். ராமபிரான் கீழே பூமியைக் காட்டினார். அங்கே ஒளிபொருந்திய ஒரு நந்தவனம் இருந்தது. அந்தத் தலத்தின் சாந்நித்தியமே பிரம்மஹத்தி தோஷத்தை அலறவிட்டிருக்கிறது என்பதை அறிந்து, அங்கே புஷ்பக விமானத்தை இறக்கினார்.

 

முன்னொரு காலத்தில் முனிவர்களும் தவசிகளும் சிவ வழிபாடு செய்த தலம் அது என்பதை அறிந்து, அங்கே ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமபிரான். சீதாதேவியின் உதவியுடன் சிவ பூஜை செய்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி கொடுத்து அருளினார் என்கிறது தலபுராணம். ராமர் சிவபூஜை செய்த தலங்களில், ராமேஸ்வரத்துக்கும் முந்தைய - பழைமையான தலம் முன்னேஸ்வரம் என்கிறார்கள்.. சரித்திரம் பேசும் திருக்கோயில்!

 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில், வடமேல் மாகாணத்தில் - புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது முன்னேஸ் வரம். காலத்தால் முந்தையவர் எனும் பெருமையை உடைய ஈசன் கோயில் கொண்டிருப்பதால், `முன்னை ஈஸ்வரம்எனும் திருப்பெயர் கொண்டதாம் இந்தத் தலம். அதேபோல், இங்குள்ள ஈஸ்வரனுக்கு `முன்னை நாத சுவாமிஎன்பது திருநாமம். அம்பிகைக்கு வடிவாம்பிகை என்பது திருநாமம். இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்த மன்னர்கள் பற்றிய குறிப்பு. கி.மு 543-ம் ஆண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஜயன் என்னும் மன்னன் இந்த ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தான் என்கிறது தலபுராணம்.

 

மனுநீதிச் சோழனுக்குப் பிறகு சோழ வம்சத்தில் புகழோடு விளங்கிய மன்னன் குளக்கோட்டன் எனப்படும் சோழ கங்க தேவன். இவர் இலங்கையை ஆட்சி செய்தபோது முன்னேஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம் திருக்கோயிலைப் புனரமைத்தாராம்.

 

இலங்கை மன்னர்களின் ஒருவரான ஆறாம் பராக்கிரமபாகு சிவன் மீது பக்தி கொண்டு இந்த ஆலயத்தை மீண்டும் புனரமைத் தார். 15-ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட ஒன்பதாம் பராக்கிர பாகுவும் இந்த ஆலயத்தை மிகவும் சீர்படுத்தி முறையாக இங்கு வழிபாடுகள் நடைபெற வகை செய்தார். இந்தச் செய்திகளை `முன்னேஸ்வர மகாத்மியம்என்னும் நூல் தெரிவிக்கிறது.

 

1578-ம் ஆண்டு இலங்கை மீது படையெடுத்த போர்ச்சுக்கீசியர்கள், மூலஸ்தானம் தவிர்த்து இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கிக் கொள்ளையிட்டனர். அதன்பின் 175 ஆண்டுகள் இந்த ஆலயம் புகழ் மங்கிக் கிடந்தது. கி.பி 1745 - 1782 ம் ஆண்டு வரை இலங்கையை ஆண்ட ராஜசிங்கன் என்னும் மன்னன் இந்த ஆலய மகிமைகளை அறிந்து, மீண்டும் புத்தெழில் பெறச் செய்தான்.

 

 இத்துடன் எங்கள் பயணம் நிறைவுற்றது. ஒரு நாட்டை ஏழு நாட்களில் சுற்றிப் பார்ப்பது என்பது இயலாத காரியம்.. ஆனாலும் முக்கிய இடங்களைப் பார்த்தோம் என்ற மனத் திருப்தியுடன் விமான நிலையம் வந்தோம். இலங்கை மக்கள் தங்கள் பகுதிகளை மிகச் சுத்தமாகப் பராமரிக்கின்றனர். அந்த ஈசனும் உமையாளும் இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எல்லா நலன்களும் வாரி வழங்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு என் தாய் பிறந்த மண்ணிற்கு வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பினேன். வணக்கம்

 

 




 









Wednesday, February 4, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

==============

ஏழாவது நாள்

மானாவாரி சிவன் கோவில், பங்கடேனியா, இலங்கை


சிலாபத்திற்கு வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சிலாபம் - புத்தளம் வீதியில் அமைந்துள்ள மானாவாரி கோயில் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீகச் சோலையாக உருவாகிறது. புனிதமான ராமாயணப் பாதையில் உருவாக்கப்பட்ட ஒரு தமிழ்க் கோயிலாக இருப்பதால், இது ஞானத்தின் ஆழமான பயணத்தைத் தொடங்கும் பக்தர்களின் இதயங்களைக் கவர்கிறது.

ஆற்றங்கரையோர எஸ்டேட்டுக்கு அருகில் அமைந்துள்ள மானாவாரி கோயில், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் மற்றும் பக்தியை உள்ளடக்கிய தமிழ் சமூகத்தின் வளமான பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது. அதன் கட்டிடக்கலை மற்றும் மதக் கூறுகள் தமிழ் கோயில்களின் காலத்தால் மதிக்கப்படும் விதிமுறைகளை மதிக்கும் அதே வேளையில், அதன் உண்மையான சாராம்சம் ராமாயணத்தின் காவியக் கதையுடனும் அதன் மதிப்பிற்குரிய கதாநாயகனான ராமருடனும் அதன் ஆழமான தொடர்பில் உள்ளது.

இந்தியாவிலிருந்து ராமாயணப் பாதையில் பயணிக்கும் இந்து யாத்ரீகர்களுக்கு, மனவாரி அவர்களின் ஆன்மீக பயணத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இராமர் அரக்கன் மன்னன் இராவணனைக் வென்று தனது அன்பு மனைவி சீதையை மீட்ட பிறகு, இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக முன்னேஸ்வரம் சிவ பெருமானின் உத்திரவின்படி மானாவாரியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த அடையாளச் செயல் ராமரின் கடினமான தேடல் மற்றும் நீதிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வெற்றிகரமான உச்சக்கட்டத்தைக் குறித்தது.

மானாவாரியில் இராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதன் முக்கியத்துவம் வெறும் சடங்குகளுக்கு அப்பாற்பட்டது; இது தவம் மற்றும் மீட்பின் ஆழமான செயலை உள்ளடக்கியது. ராமலிங்கம் என்று பெயரிடப்பட்ட மணவாரியில் உள்ள சிவலிங்கம் ஒரு தனித்துவமான உயிலாக நிற்கிறது,. இந்து புராணங்களில், இரண்டு லிங்கங்கள் மட்டுமே ராமருக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது - மற்றொன்று இந்தியாவின் ராமேஸ்வரத்தில் வசிக்கிறது, இது தமிழ்நாட்டில் மகத்தான புனிதமான இடமாகும். ஆக முதன்முதலில் சிவனின் உத்திரவின்படி சிவனுக்கு சிலை வைத்த இடம் மானாவாரி சிவனே ஆவார். பிறகுதான் இராமேஸ்வரம் .

மணவாரியில் லிங்க வடிவில் சிவனை ராமர் வழிபடுவது இந்து மதத்திற்குள் அசாதாரண முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது இந்து மதத்தின் வெவ்வேறு பிரிவுகளில் போற்றப்படும் இரண்டு முதன்மையான தெய்வங்களான விஷ்ணு மற்றும் சிவனின் இணக்கமான சகவாழ்வு மற்றும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதைக் குறிக்கிறது. சிவனை வணங்கும் ராமரின் செயல், மதப் பிரிவுகள் மற்றும் இணைப்புகளின் எல்லைகளைத் தாண்டி, தெய்வீக பக்தியின் தெய்வீக தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


பயணம் தொடரும்