காலை வணக்கம்
வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஸ்வயம்ப்ரபை பகுதி
பதிவு எண் 373
நேற்றைய தொடர்ச்சி
ஆத்யாத்ம இராமாயணத்தில் ஸ்வயம்ப்ரபை இராமரைக் கண்டதும் உணர்ச்சி பொங்க பேசுவதின் தொடர்ச்சி.............
=======================================================================
न तेऽस्ति कश्चिद्दयितो द्वेष्यो वाऽपर एव च ।
त्वन्मायापिहितात्मानस्त्वां पश्यन्ति तथाविधम् ॥ ७१॥
==========================================
தங்களுக்கு துவேஷி யென்றாவ.து, இஷ்டர் என்றாவது, உரியர் என்றாவது, பிறர் என்றாவது ஏற்படுகிறவர்கள் யாரும் இல்லை, மாயையில் கட்டுப்பட்ட மனமுடையுவர்கள் தங்களை சிலருக்குத் துவேஷி, சிலருக்கு இஷ்டன் என்று நினைக்கிறார்கள்.
===========================================
अजस्याकर्तुरीशस्य देवतिर्यङ्नरादिषु ।
जन्मकर्मादिकं यद्यत्तदत्यन्तविडम्बनम् ॥ ७२॥
===========================================
ஜன்மம் இல்லாதவரும், செய்கையில்லாதவரும், ஈசனுமாகிய தங்களுக்கு, தேவர்கள், மானிடர்கள், திரியக்குகள் முதலியவற்றால், ஜன்மமும், கருமமும் உண்டென நினைச்கத்தக்கதா யிருக்கிறது, :
=========================================================================
त्वामाहुरक्षरं जातं कथाश्रवणसिद्धये ।
केचित्कोसलराजस्य तपसः फलसिद्धये ॥ ७३॥
कौसल्यया प्रार्थ्यमानं जातमाहुः परे जनाः ।
दुष्टराक्षसभूभारहरणायार्थितो विभुः ॥ ७४॥
ब्रह्मणा नररूपेण जातोऽयमिति केचन ।
शृण्वन्ति गायन्ति च ये कथास्ते रघुनन्दन ॥ ७५॥
===========================================
சிலர், இயக்கர் முதலினோர் தங்களுடைய கதைகளைச் சிரவணம் செய்து பலன் அடைவதற்காக உண்டானவர் என்று தங்களைக் கூறுகிறார்கள், மற்றும் பலர், கோசல ராஜனுடைய தவத்தின் பலன் சித்தி பெறுவதற்கு, அவ.தாரமானவர் என்று சொல்லுகிறார்கள். பிண்னும் ௮நேகர், துஷ்டர்களான இராக்ஷசர்களை வதை செய்து, பூமி பாரத்தை யொழிக்கும்படி பிரமதேவர் பிரார்த்.திக்க, அதற்காக அவதாரம் செய்தவர் என்று சொல்லுகிறார்கள்.
=========================================================================
पश्यन्ति तव पादाब्जं भवार्णवसुतारणम् ।
त्वन्मायागुणबद्धाहं व्यतिरिक्तं गुणाश्रयम् ॥ ७६॥
================================================================
ஓ இரகு நந்தன! எந்த மானிடா, தங்கள் கதைகளைக் கேட்கிறார்களோ அல்லது கீர்த்தனம் செய்கிறார்களோ ௮வர்கள் ஸம்ஸாரக் கடலைக் கடக்க உதவும் தங்களுடைய பாதார விந்தங்களைச் தரிசிக்கிறார்கள்.
தொடரும்