Friday, August 7, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 177

 

நேற்றைய தொடர்ச்சி..

 

भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशया:।

चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे॥'

 

உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகிய அனைத்திற்கும் காரணமான பரம்பிரம்மத்தை நேரடியாக அனுபவித்தவுடன், இதயத்தில் உள்ள அஞ்ஞான முடிச்சு அறுபடுகிறது; எல்லாச் சந்தேகங்களும் நீங்குகின்றன; அவனுடைய கர்மங்களும் அழிகின்றன.**

 

இதனால் என்ன பயன்? நேற்றைய தொடர்ச்சி,,,,,,,,,,,,

 

**छिद्यन्ते सर्वसंशयाः**

 

இது அறிவின் இரண்டாவது பலன்.

 

என்னென்ன சந்தேகங்கள்?

 

* நான் யார்?

* இறைவன் இருக்கிறானா?

* மரணத்திற்குப் பிறகு என்ன?

* ஜீவன் வேறா?

* பிரம்மம் வேறா?

* உலகம் உண்மையா?

 

இவை அனைத்தும் நேரடி அனுபவத்தில் மறைகின்றன.

 

உதாரணம்

 

தேன் இனிப்பா? என்று நூறு பேரிடம் கேட்டால் நூறு கருத்துகள்.ஒரு துளி தேனைச் சுவைத்தவுடன் சந்தேகம் இருக்குமா? இல்லை. அனுபவம் சந்தேகத்தை அழிக்கிறது.

 

கர்மங்கள் அழிகின்றன

 

**क्षीयन्ते चास्य कर्माणि**

 

இதுதான் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தும் பகுதி. எல்லா கர்மங்களும் அழிகிறதா? வேதாந்தம் மூன்று வகைக் கர்மங்களைக் கூறுகிறது.

 

1. சஞ்சித கர்மம்

 பல பிறவிகளில் சேர்த்து வைத்த கர்மம்.ஞானம் வந்தவுடன் இது எரிந்துவிடுகிறது.

 2. ஆகாமி கர்மம்

 இனி செய்யப் போகும் கர்மம். ஞானிக்கு இதனால் பந்தம் ஏற்படாது.

 3. பிராரப்த கர்மம்

 ஏற்கனவே பலன் கொடுக்கத் தொடங்கிய கர்மம். இது உடல் இருக்கும் வரை தொடரும்.

 

சங்கரர் கூறுவது

 

ஞானம் வந்தவுடன் சஞ்சிதமும் ஆகாமியும் அழிகின்றன. பிராரப்தம் மட்டும் உடல் முடியும்வரை இருக்கும்.

 "பராவரே"

 

இந்தச் சொல் மிகவும் ஆழமானது.

 **पर (para)**

 உயர்ந்தது.

 **अवर (avara)**

 தாழ்ந்தது.

 

இவற்றிற்கெல்லாம் அடிப்படையானது பிரம்மம்.

 அவன்

 * காரணமும்

* காரியமும்

* உள்ளும்

* புறமும்

 

ஆக இருக்கிறான்.

 சங்கரர் விளக்கம்: ஆதி சங்கரர் "இதய முடிச்சு"என்பதை **அவித்யை** (அறியாமை)என்றே விளக்குகிறார்.

 அவித்யை நீங்கியவுடன்

 

* ஆசை போகிறது.

* கர்ம பந்தம் போகிறது.

* பிறவி முடிகிறது.

 

தொடரும்

 

Thursday, August 6, 2026



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 176

 

 

 

வாலி மன்னிப்புக்கோரல்

 

 

सुनहु राम स्वामी सन चल चातुरी मोरि।

प्रभु अजहूँ मैं पापी अंतकाल गति तोरि॥9

 

வாலிக்குத் தனது தவறு தெரிந்தது. “அண்ணலே! நான் எனது புத்தி பலத்தைக் கொண்டு தங்களை எதிர்த்து நிற்க முடியாது.  நீங்கள் பிரபு. நான் பாவி,  இதை உணர்கிறேன்.  இந்தக் கடைசி நேரத்தில் நான் உங்களைச் சரணடைந்தேன். உங்களைச் சரணடைந்ததும் எனது பாவங்கள் முடிந்து போயின ” என்று அழுது புலம்பினான்.இன்னும் நான் பாவியா? என்று கேட்டுச்  அவனது தலை சாய்ந்தது. सन्मुख होई जीव मोहि जबहिं, कोटि जनम अघ नासहिं तबहिं : எவன் ஒருவன் தூய்மையான மனத்துடன் இராமனைச் சரணடைகிறானோ அவனது கோடி பிறப்பின்  பாவங்கள் கரைந்து போய்விடுகின்றன . முண்டகோ உபநிஷத் ல் சொல்லப்பட்டுள்ளது.

 

भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशया:।

चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे॥'

 

உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகிய அனைத்திற்கும் காரணமான பரம்பிரம்மத்தை நேரடியாக அனுபவித்தவுடன், இதயத்தில் உள்ள அஞ்ஞான முடிச்சு அறுபடுகிறது; எல்லாச் சந்தேகங்களும் நீங்குகின்றன; அவனுடைய கர்மங்களும் அழிகின்றன.**

 

இந்த மந்திரம் கூறும் மூன்று பலன்கள்

 

உபநிஷத் மூன்று விஷயங்களைச் சொல்கிறது.

 

  இதய முடிச்சு அறுபடுகிறது

 

**भिद्यते हृदयग्रन्थिः**

 

இதுதான் மிகவும் முக்கியமானது. இதய முடிச்சு என்றால் என்ன?

 

ஆதி சங்கரர் கூறுகிறார்:

அவித்யா (அறியாமை) + காமம் (ஆசை) + கர்மம் (செயல்)**

 

இந்த மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த முடிச்சு.

 

உதாரணம்

 

இருட்டில் ஒரு கயிற்றைப் பார்த்து "பாம்பு!"என்று பயப்படுகிறோம்.அந்தப் பயம் பாம்பினால் வரவில்லை.அறியாமையால் வந்தது.விளக்கு ஏற்றியவுடன்பாம்பு மறைவதில்லை.ஏனென்றால்அது இருந்ததே இல்லை. அஞ்ஞானம்தான் மறைகிறது.அதுபோல"நான் உடல்"என்ற தவறான எண்ணம் அறுபடுகிறது. எல்லாச் சந்தேகங்களும் நீங்குகின்றன.

 

 

தொடரும் 

Wednesday, August 5, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 175

 

வால்மீகி இராமாயணத்தில்.. ………….

 

வாலி இராமனிடம் நீங்கள் எந்த நோக்கத்திற்காக சுக்ரீவனுக்கு உதவி செய்ய முன்வந்தீர்களோ, அந்த வேலையை என்னிடம் முதலிலேயே கொடுத்திருந்தால் அந்தக் கொடிய இராவணனை எந்த வித யுத்தமும் செய்யாமல் கழுத்தில் சுருக்கிட்டு உங்கள் முன் கொண்டு வந்ததோடு அல்லாமல் சீதையையும் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேன்என்று சொல்கிறான்.

 

இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய வாலி புறப்படும் சமயம் தாரை சுக்ரீவனுக்கு உதவி செய்ய தசரதனின் புதல்வர்கள் உடன் இருப்பதாக  அங்கதன் மூலம் தெரிந்து கொண்டதாகச் சொல்கிறாள். அப்பொழுது சீதையை இராவணன் கடத்திச் சென்றுவிட்டான். அவளைத் தேடித் தருவதற்காக இராமன் சுக்ரீவனுடன் நட்பு கொண்டுள்ளான் என்ற எந்த விவரமும் அவள் தெரிவிக்கவில்லை.  ஆனால் வாலி இராமனிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்போழுது இந்த விவரத்தைச் சொல்லி என்னிடம் சொல்லியிருக்கலாமே என்று சொல்கிறான். அப்படியானால் வாலிக்கு இந்த விவரம் முதலிலேயே தெரிந்துள்ளது. இராவணன் சீதையைத் தனது பகுதியின் மீதுதான் எடுத்துச் சென்றுள்ளான் என்ற உண்மையும் தெரிந்துள்ளது. இராவணன் வாலியின் நண்பன். தர்மத்தைப் பற்றிப் பேசும் வாலி, தனது நண்பனிடம் அவனது செயலைக் கண்டித்து சீதையை இராமனிடம் ஒப்படைக்கச் சொல்லி இருக்கலாமே? ஆனால் அவன் அதைச் செய்யாமல் மௌனமாக இருந்துவிட்டான்.

 

தருமத்தை மீறுவது மட்டும் தவறு அல்ல. அதைத் தட்டிக் கேட்காமல் பார்த்துக் கொண்டிருப்பவனும் தவறு செய்பவன் தான். இராமனைப் பொறுத்தவரை இதையும் தர்மத்தை மீறிய செயலாகக் கருதி அவனைத் தண்டித்திருக்கலாம்.

 

என்னிடம் முதலிலேயே சொல்லி இருந்தால் நான் சீதையை இராவணனின் பிடியிலிருந்து மீட்டு கொண்டு வந்திருப்பேன்என் வாலி சொல்கிறான். அப்படி கொண்டு வந்திருந்தால் தான் மரணம் அடைய வேண்டியதிருக்காதே என்று நினைக்கிறான். ஆனால் வாலியின் பிடியிலிருந்து சுக்ரீவனின் மனைவியான  ரூமையை  விடுவித்து சுக்ரீவனிடம் யார் கொண்டு வந்து ஒப்படைப்பது? வாலி இதைப் பற்றி நினைக்கவில்லை பேசவில்லை. ஆனால் இதைத்தான் தர்மத்தை மீறிய நிரூபிக்கப்பட்ட குற்றமாக இராமன் கருதுகிறான். அதனால் வாலிக்கும் இராமனுக்கும் இடையே ஒப்பந்தம் என்பது சாத்தியமில்லாதது.

 

இராமன் வாலியை மன்னித்தால், வாலி இராவணன் என்ற தனி ஒருவனிடமிருந்து சீதையை மீட்டு வரலாம். ஆனால் இராமன் வாலிக்கிடையே உள்ள ஒப்பந்தம் பற்றி அறிந்தால் ஒரு வேளை இராவணனே நேரடியாக வந்து இராமனிடம் சரணடையலாம். அதனால் இராவணன் மன்னிக்கப்படலாம். அதனால் இராவண வதம் நிகழாது. இராமன் தேவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அவதார நோக்கம் நிறைவேறாது.

 

தொடரும்,,,,,,,,,,,,,,,,,

 


Tuesday, August 4, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 174

 

ஒரு இராஜ்ஜியத்தில் கொடிய பாவம் செய்த கைதி அந்த அரசனைப் பார்த்து “உனக்கு நான் ஏதாவது குற்றம் செய்தேனா? என்னை நீ எப்படித் தண்டிப்பாய்? என்று கேட்பது நியாயமாகுமா? அப்படிக் கேட்டால் அதுவும் ஒரு குற்றமாகாதா? அதுபோலத் தானே நீயும் என்னைப் பார்த்து உனக்கு நான் ஏதாவது குற்றம் செய்தேனா? எதற்காகக் கொன்றாய்” என்று கேட்டாய். அது மூர்க்கத்தனமான கேள்வி. ஆனால் நான் அரசனா என்று நீ ஐயப்படவும் நியாயமில்லை.”

 

भरतः तु महीपालो वयम् तु आदेश वर्तिनः || ४-१८-२३

त्वम् च धर्मात् अतिक्रान्तः कथम् शक्यम् उपेक्षितुम् |

गुरु धर्म व्यतिक्रान्तम् प्राज्ञो धर्मेण पालयन् || ४-१८-२४

भरतः काम युक्तानाम् निग्रहे पर्यवस्थितः |

वयम् तु भरत आदेशम् विधिम् कृत्वा हरीश्वर |

त्वत् विधान् भिन्न मर्यादान् निग्रहीतुम् व्यवस्थिताः || ४-१८-२५

 

“தார்மீகனாகிய பரதன் இப்போது அரசனாக இருக்கிறான். அவன் எள்ளளவும் தர்மத்தை மீறுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டான். நாங்கள் அவனது உத்திரவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அரசுப் பிரதிநிதிகள், நாடெங்கிலும் ஒவ்வொரு குற்றவாளியையும் அரசனே வந்து தண்டிக்க முடியுமா?  ஆதலால் அரசரின் பிரதிநிதிகளாகிய எங்களின் மூலம் தண்டிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அப்படி எங்களால் நிறைவேற்றப்படும் தண்டனைகளும் அரசரே நிறைவேற்றுவதாகத்தான் பொருள்படும். நீ உனக்குரிய தர்மத்தை மீறினாய். ஆதலால் நாங்கள் உன்னை வெறுமனே எப்படி விடமுடியும்? குரு தர்மத்தை மீறியவனை, காம வழியில் இது போல அத்து மீறி செல்பவர்களை, பரதன் அடக்குவதில் முனைந்து இருப்பவன். அந்த பரதன் அறிவு மிகுந்தவன், தர்மத்தோடு இராஜ்யத்தை ஆண்டு வருபவன். நாங்களோ பரதன் கட்டளையைச் சிரமேற் கொண்டு அதுவே விதி என்று நடப்பவர்கள். வானர ராஜனே, உன்னைப் போல சட்டத்தை, கட்டுப்பாட்டை மீறுபவர்களைத் தண்டிக்கவே நியமிக்கப் பட்டிருக்கிறோம், ஆகவே நாங்கள் உன்னை எப்படி தண்டனை ஏதும் இல்லாமல் விடமுடியும்?”

 

सुग्रीवेण च मे सख्यम् लक्ष्मणेन यथा तथा |

दार राज्य निमित्तम् च निःश्रेयसकरः स मे || ४-१८-२६

 

“சுக்ரீவனோடு நான் செய்து கொண்டிருக்கும் நட்பு இலக்ஷ்மணனுக்கும் எனக்கும் உள்ள நட்பு போன்றதாகும். அந்த நட்புக்கோ இழந்து போன தாரத்தையும் இராஜ்ஜியத்தையும் மறுபடியும் அடையும்படி ஒருவருக்கொருவர் தன்னால் ஆன உதவிகளைச் செய்வதே பெரிய பலம் ஆகும். (இப்போது நான் உன்னைக் கொன்று சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்பதில் உதவியதால், இனி அவன் சீதையை மீட்பதில் எனக்கு உதவி நலம்புரிவான்" என்பது பொருள்.)”

 

தொடரும்.................


Monday, August 3, 2026

 


நான் ரசித்த அயோத்தியா காண்டம்.

 

கேயாஸ் தியரி

 

குழப்பக் (ஒழுங்கின்மை) கோட்பாடு- வண்ணத்து பூச்சி விளைவு:

 

எல்லோரும் “It is a wonderful life”, “Jurassic park,  கமலின் தசாவதாரம் படம் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதில் இந்த குழப்பக் கோட்பாடு பற்றித் தெரிந்து கொள்ளலாம். கம்ப ராமாயணத்தில் இது உள்ளதா? அதை பற்றித்தான் சொல்லப்போகிறேன். ஆனால் நான் சொல்வது இந்த கோட்பாடுக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு முயற்சி. இது தவறு என்றால் பதிவிடவும். முதலில் கேயாஸ் தியரி என்றால் என்ன?

ஒரு சின்னஞ்சிறு மாற்றம் ஒரு சிறிய நொடி பொழுதில் ஏற்படுதல் பின்னாளில் ஒரு மிக ப்ரமாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் தசாவதாரம் படத்தில் கமல் காட்டும் வண்ணத்துப்பூச்சியை வைத்து நாம் இதை விளக்குகிறோம். ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறிய சிறகடிப்பு வேறு ஒரு இடத்தில் ஒரு மிக பெரிய சூறாவளி யை ஏற்படுத்தும் , அல்லது பேரழிவை ஏற்பதுடுத்தும். இது தான் "கேயாஸ் தியரி" அல்லது "வண்ணத்துப்பூச்சி விளைவு" என்கிறோம்! 

 

கம்பர் சொன்ன பாடல்

"மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்

தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்

ஆங்கு ஒரு நரையதாய் அணுகிற் றாம் எனப்

பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி

ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன்



தசரதர் ஒரு நாள் கண்ணாடி பார்க்கும்போது, காதருகே ஒரு நரைமுடியைப் பார்த்துக் கவலை கொண்டு, இராமனுக்கு முடிசூட்டி விட்டுத் தான் தவம் செய்ய முடிவெடுத்தார். அதனால் ஏற்பட்ட விளைவுகளைத் தாங்கள் படித்திருப்பீர்கள். ஆக இராவணன் செய்தத் தீவினை தான் நரைமுடியாய் வந்தது என்கிறார்

 

இந்த நரை முடி வந்திருக்காவிட்டால்

ராமனுக்கு முடி சூட தசரதர்  முடிவு எடுத்திருக்கமாட்டார்

வசிஷ்டரிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி இருக்கமாட்டார்

அயோத்தி மக்கள் அதைக் கொண்டாடி இருக்க மாட்டார்கள்

கூனி அந்த கொண்டாட்டங்களைப் பார்த்திருக்கமாட்டாள்

அவள் மனதில் குழப்பம் வந்திருக்காது

கைகேகி மனதை கலைத்திருக்கமாட்டாள்

கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கமாட்டாள்

ராமர், லக்ஷ்மணர் சீதையுடன் வனவாசம் சென்றிருக்க மாட்டார்

சூர்ப்பனகை வனத்தில் வந்திருக்கமாட்டாள்

இலக்ஷ்மணன் அவளது  காது மூக்கைச் சிதைத்திருக்க மாட்டான்

அவள் இராவணனிடம் முறையிட்டிருக்க மாட்டாள்

இராவணன் மாரீசனை அனுப்பி இருக்கமாட்டான்

இராமன் மாரீச்சனை கொன்றிருக்கமாட்டான்

இராம லக்ஷ்மணர் சீதையைப் பிரிந்திருக்க மாட்டார்கள்

இராவணன் சீதையை கவர்ந்து சென்றிருக்கமாட்டான்

ஹனுமான் நட்பு கிடைத்திருக்காது

வாலி வதை, சுக்ரீவன் நட்பு உண்டாகி இருக்காது

சேது பந்தனம் நடந்து இருக்காது

இலங்கைப் போர் நடந்திருக்காது

இராவணன் மாண்டிருக்க மாட்டான்

 

ஆக தசரதன் காதருகே தோன்றிய நரைமுடி ஒரு பெரிய போருக்கே காரணமாயிற்று. சிறிய முடிதானே என்று நினைக்கக் கூடாது. திரௌபதியின் கூந்தல் மகாபாரத போருக்கே காரணமாயிற்று,’

 

ஆகையால் முடியை வைத்து முடிவெடுக்கக்கூடாது.

 

மீண்டும் சந்திப்போம்.